குருபெயர்ச்சி பலன்கள்.

Author: தோழி / Labels:

வாக்கிய பஞ்சாங்க கணிதத்தின் படி  குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு ஆடி 18ம் திகதி அன்று 11 நாழிகை 21 வினாடி அதாவது 02.08.2016 காலை 10 மணி 35 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார்.இன்று குருபெயர்ச்சி நிகழ்வதோடு கூடவே  ஆடிப்பெருக்கு, ஆடி அம்மாவாசை, ஆடி செவ்வாய், சித்தர்கள் பூமியாம் சதுரகிரியில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமகாலிங்கம் சுவாமியின் பெருவிழா, திருமுதுகுன்றம் எனப்படும் திருக்கழுக்குன்றத்தில் சங்குதீர்த்த லட்சதீப திருவிழா என பலவகையிலும் இன்றைய தினம் முக்கியமானதாகிறது.

இனி ஒவ்வொரு ராசிக்குமான பொதுவான பலன்களை சுருக்கமாக பட்டியலிட்டிருக்கிறேன்.

மேஷம்.

நட்சத்திரங்கள் - அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் வரை.

மேட ராசிக்கு ஐந்தாம் வீடான சிம்ம ராசியில் இருந்த குரு பகவான் தற்போது ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பெயர்கிறார். எனவே இதுவரை இருந்த அனுகூல நிலை இனி இருக்காது.
எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் நிதானம் கடை பிடிக்காவிடில் அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டிவரும். குடும்ப வழிச் சொத்துக்கள், உறவுகள் மூலமாக நெருக்கடிகள் உண்டாகலாம். குருவருளை வேண்டி வணங்கி இடர்களை களையலாம். 

ரிஷபம்.

நட்சத்திரங்கள் - கிருத்திகை 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , ரோகிணி, மிருகசிரீஷம் 1ஆம், 2ஆம் பாதம் வரை.

ரிஷ ராசிக்கு குரு பகவான் நான்காம் வீடான சிம்மத்தில் இருந்து ஐந்தாவது ராசியான கன்னிக்கு பெயர்கிறார்.  இந்த குரு பெயர்ச்சியினால் அதிக நற் பலன்களைப் பெறும் ராசிகளில் ரிஷப ராசியும் ஒன்று. கடந்த ஆண்டுகளில் நிலவி வந்த இறுக்கம், தயக்கம் போன்றவைகளின் தீவிரம் குறையும். இல்லறத்தில் கணவன் மனைவி உறவில் இருந்து வரும் பேதம் குறையும். பண வரவு உண்டாகும். எனவே இந்த கால கட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களின் எண்ணம், சொல், செயல் என எல்லா அம்சங்களிலும் ஏற்றம் உண்டாகுமாம். 

மிதுனம்.

நட்சத்திரங்கள் - மிருகசிரீஷம் 3ஆம், 4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை.

மிதுன ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடமான சிம்ம ராசியில் இருந்தவர் பெயர்ந்து நான்காம் இடமான கன்னி ராசிக்கு வருகிறார். இதனால் கடுமையான விளைவுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கும்.உடல் நலத்தில் மேலதிக அக்கறை காட்டிட வேண்டி வரும். அத்துடன் அலைச்சலும் அகால போஜனமும் உண்டாகுமாம். பொதுவில் இன்பம் துன்பம் என இரண்டும் கலந்த கால கட்டமாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாமாம்.

கடகம்

நட்சத்திரங்கள் - புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கடக ராசிக்கு தற்போது இரண்டாவது கட்டமான சிம்ம ராசியில் இருந்து பெயர்ந்து மூன்றாவது கட்டமான மிதுன இராசிக்கு வருகிறார்.  இந்த பெயர்ச்சியினால் குரு பகவானின் பாதிப்புகள் குறைந்த அளவில் இருக்கும். அதே நேரத்தில் மிதமான நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். பெரிய பாதிப்புகள் இல்லை என்பதே சுப பலன் என்பதை நினைவில் வைக்கவும்.

சிம்மம் 

நட்சத்திரங்கள் -  மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் வரை.

இது வரை சிம்ம ராசிக்கு ஜென்ம குருவாக இருந்த குரு பகவான் இரண்டாம் வீடான கன்னி ராசிக்கு பெயர்கிறார்.  குரு பெயர்ச்சியினால் பெரிய அளவில் நன்மை பெறப் போவது இந்த ராசிக்கு உட்பட்டவர்கள்தான். கடந்த ஆண்டு நிலவி வந்த இறுக்கம், தயக்கம் போன்றவைகளின் தீவிரம் குறையும். உடல்நலம், மன நலம், செல்வ வளம் என எல்லா அம்சங்களிலும் ஏற்றம் உண்டாகுமாம். காரியத் தடைகள் விலகும், கல்வி சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகுமாம். குருவருளும், திருவருளும் கைகூடி நிற்கும் காலமாக இருக்குமாம். 

கன்னி 

நட்சத்திரங்கள் - உத்திரம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , அஸ்தம், சித்திரை 1ஆம், 2ஆம் பாதம் வரை..

கன்னி ராசிக்கு பன்னிரெண்டாவது வீடான சிம்ம ராசியில் இருந்த குரு பகவான் பெயர்ந்து ஜென்ம குருவாக வருகிறார். இந்த குரு பெயர்ச்சியால் இதுவரை இருந்த அனுகூல நிலை இனி இருக்காது. எனவே இந்த கால கட்டத்தில் கன்னி ராசிக்காரர்கள் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் நிதானம் காட்டுவது நல்லது. குடும்ப வழிச் சொத்துக்கள், உறவுகள் மூலமாக நெருக்கடிகள் உண்டாகலாம். குருவருளை வேண்டி வணங்கி இடர்களை களையலாம். 

துலாம் 

நட்சத்திரங்கள் - சித்திரை 3ஆம், 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை..

துலா ராசிக்கு 11ம் இடமான சிம்ம ராசியில் இருந்து 12ம் இடமான கன்னி ராசிக்கு குரு பகவான் பெயர்கிறார். இதுவரை இருந்த பதினொராவது கட்டமானது அனுகூலமான பலன்களை தந்திருக்கும். இனி அவற்றில் சிறிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்கும் என்றால் மிகையில்லை. எதிரிகளை இனங்கண்டு ஒதுக்கி விட்டு, நல்லவர்களின் அருகாமையை கொள்வது இடர்களை குறைக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாமாம்.

விருச்சிகம் 

நட்சத்திரங்கள் - விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடத்தில் இருந்த குரு பகவான் பதினோராம் இடமாகிய கன்னி ராசிக்கு பெயர்கிறார்.இந்த குரு பெயர்ச்சியினால் நற் பலன்களைப் பெறும் ராசிகளில் விருச்சிக ராசியும் ஒன்று. இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், பண வரவு உண்டாகும்.  இடமாற்றமும் தொழில் மாற்றமும் முன்னேற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகுமாம்.

தனுசு

நட்சத்திரங்கள் - முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் வரை..

தனு ராசிக்கு ஒன்பதாம் வீடான சிம்ம ராசியில் இருந்த குரு பகவான் தற்போது பத்தாம் வீடான கன்னி ராசிக்கு பெயர்கிறார். இதுவரை இருந்து வந்த அனுகூல நிலைகள் இல்லாது போகும். பொருள் விரயம் இந்த கால கட்டத்தில் உண்டாகும். எண்ணம், செயல், சொற்களின் கவனம் தேவைப் படும் கால கட்டமாகும். இடமாற்றத்தையும் அதிக செலவுகளோடு அலைச்சல்களையும் கொடுக்கும் கால கட்டமிது. பொதுவில் இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாம்.

மகரம் 

நட்சத்திரங்கள் - உத்திராடம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1ஆம், 2ஆம் பாதம் வரை..

ராசிக்கு எட்டாவது வீடான சிம்ம ராசியில் இருந்த குரு பகவான் பெயர்ந்து ஒன்பதாவது வீடான கன்னி ராசிக்கு வருகிறார். இதுவரை இருந்து வந்த அஷ்டம குரு விலகியிருப்பது ஆறுதல் தரும் அம்சம்.இதுவரை இருந்த அவல நிலை இனி மாறும். இல்லறம் நல்லறமாகும். சிறுசிறு பிரச்சனைகளை தந்தாலும் பொதுவில் நல்ல நற்பலன்களையே குரு பகவான் தருவார். தகுதிக்கு மீறிய செயல்களில் இறங்காதிருத்தல் உத்தமம்.

கும்பம் 

நட்சத்திரங்கள் - அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம் , சதயம், பூரட்டாதி 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை..

கும்ப ராசிக்கு ஏழாம் இடமான சிம்ம ராசியில் இருந்த குரு பகவான் பெயர்ந்து எட்டாம் இடமான கன்னி ராசிக்கு அஷ்டம குருவாக வருகிறார். இது இதுவரை இருந்த துயர நிலையை அதிகரிப்பதாகவே இருக்கும். எனவே இனி வரும் நாட்களில் தேவைக்கும் அதிகமான நிதானமும், ஒழுங்குடன் கூடிய செயல் பாடுகளுமே கடுமையான துயரத்தில் இருந்து காப்பாற்றும். 
உற்றார், உறவினர், நண்பர்கள் என சமூகத்தினரின் அவதூறுக்கும், அவமதிப்புக்கும் ஆளாகும் வாய்ப்புகள் உண்டு. கடுமையான மன அழுத்தங்கள் உண்டாகும் என்பதால் இந்த கால கட்டத்தில் நல்லோர் அருகாமையும், அறிவுரையும் கேட்டு நடப்பது நல்லது.

மீனம் 

நட்சத்திரங்கள் - பூரட்டாதி 4ஆம் பாதம் , உத்திரட்டாதி, ரேவதி.

மீன ராசிக்கு ஆறாவது கட்டமான சிம்ம ராசியில் இருந்து பெயர்ந்து ஏழாவது கட்டமான கன்னி இராசிக்கு வருகிறார். இந்த இடம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமான ஒரு இடமாகும்.இது வரை இருந்த துயரமெல்லாம் பனி போல விலகும் காலமிது. இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், தொழில், கல்வி சிறக்கும். பொதுவில் இந்த குரு பெயர்ச்சியால் அதிக நற் பலன்களைப் பெறும் ராசிகளில் இதுவும் ஒன்று. இந்த வாய்ப்பினை நழுவ விடாது பலன் பெற்றிட எல்லாம் வல்ல குருவருள் துணை நிற்கட்டும்.

குரு பகவானின் பெயர்ச்சியினால் நமக்கு உண்டாகும் நன்மைகளை மேம் படுத்திக் கொள்ளவும், தீமைகளின் பாதிப்பினை குறைத்துக் கொள்ளவும் பரிகாரம் வேண்டுபவர்கள் இந்த இணைப்பில் அவற்றை அறியலாம்.Post a Comment

7 comments:

S.Puvi said...

நம்ம ராாசிக்கு பலன் எப்பவும் மத்திமமாத்தான் இருக்கு.
உஸ்ஸ்ஸ்ஸ்ஸபா.....

MUHUNTHA VEL said...

நன்றி தோழி

Bogarseedan said...

மிக்க நன்றி..பரிகாரம் ராசிக்கு ஏற்ப மாறுபடுமா என்பதை பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

Unknown said...

நோக்கமில்லாத இந்த பணிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

Unknown said...

naanri friend

Unknown said...

meendum avatharathirku mikka nanri tholi avargale

Unknown said...

பல வருடம் உங்கள் பக்கத்தை படித்து வருகிறேன். எனக்குள் எழுந்த ஒரு கேள்வி ஒன்றுக்கு பதில் உங்களிடம் இருந்து கிடைத்தால் மிகவும் பயணுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.
brain waves/mind waves. முலையின் அலைவரிசை என்று ஒன்று உள்ளதா? அதை பற்றி சித்தர்கள் குறிப்பு எதேனும் உள்ளதா? பதில் எதிர்பார்த்து காதிருக்கிறேன். if possible please mail me pragazv@gmail.com.

Post a comment