குரு பெயர்ச்சி, சில குறிப்புகள்.

Author: தோழி / Labels:

வேதத்தின் ஆறு வகை கூறுகளில் சோதிடமும் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கிறது. தமிழைப் பொறுத்தவரை அறுபத்திநான்கு கலைகளில் சோதிடமும் ஒன்றாகிறது. சித்தர் பெருமக்களின் பார்வையில் சோதிடம் பற்றியும் அதன் குறிப்புகளைப் பற்றியும் முன்னரே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசிக்கலாம்.

தமிழில் இரண்டு வகையான சோதிட மரபுகள் வழக்கத்தில் இருக்கின்றன. ஒன்று வாக்கிய பஞ்சாங்கம் மற்றது திருக்கணித பஞ்சாங்கம். சித்தர்கள் பின்பற்றிய  முறை வாக்கிய பஞ்சாங்க முறையாகும். இவை இரண்டுக்குமான வித்தியாசங்களை பார்க்கப் போனால் அது தனிப்பதிவாகி விடும் என்பதால், எதிர்வர இருக்கும் குருபெயர்ச்சி பற்றிய தகவல்களை மட்டும் இந்த பதிவில் பார்ப்போம்.

வாக்கிய பஞ்சாங்க கணிதத்தின் படி  ஆடி மாதம் 18ம் திகதி அன்று 11 நாழிகை 21 வினாடி அதாவது 02.08.2016 காலை 10 மணி 35 நிமிடத்திற்கு குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்கிறார். திருக்கணித பஞ்சாங்க கணிதத்தின் படி  ஆடி 27ம் திகதி அன்று 38 நாழிகை 34 வினாடி அதாவது 11.08.2016 இரவு 09 மணி 55 நிமிடத்திற்கு குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு  பெயர்கிறார். 

குரு பெயர்ச்சியானது ஆண்டுக்கு ஒரு முறை நிகழ்வது. அந்த வகையில் குருபகவான் பெயர்ந்து செல்லும் புது வீடான கன்னி ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள். குரு பெயர்ச்சியாகி புதிய வீட்டில் இருக்கும் போது அது ராசிகளுக்கு எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டு எத்தகைய பொதுப் பலன்கள் கிடைக்கும் என்பதை ஒரு பழந்தமிழ் பாடல் விளக்குகிறது. அந்தப்பாடல் பின்வருமாறு..

ஜென்மராமர் வனத்திலே சீதையை சிறைவைத்ததும்
தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படைமாண்டதும்
இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானதும்
ஈசனாரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசமப்படி போனதும்
சத்தியமாமுனி யாறிலே யிருகாலில் தலை பூண்டதும் 
வன்மையுற்றிட ராவணன்முடி பன்னிரண்டில் வீழ்ந்ததும்
மன்னுமா குருசாரி மாமனை வாழ்விலா துறு மென்பவே.

குரு பகவான்  2, 5, 7, 9, 11  போன்ற ராசிகளுக்கு பெயரும் போது அவை நல்ல பலன்களைத் தருமென்றும், அதே வேளையில் குருபெயர்ச்சியானது  1, 3, 4, 6, 8, 10, 12  போன்ற ராசிகளில் நிகழும் போது அவை அத்தனை நல்ல பலன்களை தருவதில்லை என்கிறது இந்தப்பாடல். இதன் அடிப்படையில்தான் குருபெயர்ச்சி பலன்கள் எழுதப்படுகின்றன. 

பதிவின் நீளம் கருதி, குருபெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்பட வாய்ப்புள்ள பலன்களைப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.Post a Comment

6 comments:

துரை செல்வராஜூ said...

மற்றதெல்லாம் சரி..
ஈசனார் ஒருபத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்!.. - என்று வருகின்றதே - ஈசன் எம்பெருமானுக்கு ஏது ஜாதகக் குறிப்பு?.. எந்த ஜோதிடர் எழுதி வைத்தார்?..

Unknown said...

நல்ல பதிவு அம்மா

S.Puvi said...

பதிவிற்கு நன்றி.
வாக்கிய பஞ்சாக்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் இடையில் உள்ளஒற்றுமை வேற்றுமைகள் பற்றி ஆராய வேண்டும் இதில் பெரும் சந்தேகங்கள் அடிக்கடி எழுகின்றன

sury siva said...

The difference between Vakyam and Thriganitham arises almost daily in the starting and ending time of thithi, nakshathram etc. Obviously vakya panchaka karthas did not do the corrections every 60 years or so for quite some centuries, accumulating to the present difference.
subbu thatha.

Unknown said...

Dear sister, waiting to see u in full action, may the guru be with u in ur every efforts @ the same time take enough rest , we stand by you at all time..
Regards,
Senthil V J

Unknown said...

நண்பரே... அப்படியனில் எம்பெருமான் ஈசனை சனீஸ்வரர் பிடிக்கவில்லையா..... ஈசனையே தன் கடமையிலிருந்து தவறாமல் பிடித்தமைக்கு தானே மந்தனுக்கு ஈஸ்வர பட்டம் கிடைத்தது அவரும் சனீஸ்வரர் ஆனார்.....

Post a comment