நீரழிவும், சித்தர் பெருமக்கள் முன்வைக்கும் தீர்வுகளும்.

Author: தோழி / Labels: ,

தற்போதைய அவசரயுக வாழ்க்கைமுறை நமக்குத் தந்த மாபெரும் பரிசு உடல் நலக்குறைபாடுகள்தான். நூற்றில் ஒன்றிருவரைத் தவிர மற்றவர்கள் ஏதோவொரு வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இவற்றில் முதன்மையான குறைபாடுகளில் ஒன்றாக நீரழிவை குறிப்பிடலாம்.

நாம் எடுத்துக்கொள்ளும் மாவுச்சத்து நிரம்பிய உணவில் உள்ள சர்க்கரையை சீரணிக்கத் தேவையான இன்சுலின் என்கிற திரவம் நம்முடைய கணையத்தால் சுரக்கப்படுகிறது. கணையத்தின் செயல்பாடு குறையும்போது இன்சுலின் சுரப்பும் குறைந்து சர்க்கரையின் அளவு உடலில் அதிகரிக்கிறது. இதனையே நீரழிவு என்கிறோம். இது ஒரு நோய் இல்லை வெறும் குறைபாடுதான்.

சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரிக்கும் போது அது நேரடியாகவும், மறைமுகமாகவும் உடல் உறுப்புகளை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.கண்பார்வையில் கோளாறு, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு என பல்லுறுப்பு பாதிப்புகளை ஏற்படுத்துவதன் மூலமாக  உடல்நலத்தை சீரழித்து விடுகிறது. 

தற்போதைய அலோபதி மருத்துவம் நீரழிவுக்கு மூன்று கட்ட தீர்வுகளை முன்வைக்கிறது. அவை முறையே உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சிரான இடைவெளிகளில் உடற்பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனைப்படி தேவைக்கேற்ப மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை. தற்போது நீரழிவு மருத்துவ சிகிச்சை என்பது  பணம் கொட்டும் பெருந்தொழிலாக இருக்கிறது.

ஆனால் இதற்கெல்லாம் மாறாக சித்தர்களின் பாடல்களில் நீரழிவுக்கான எளிமையான தீர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. இந்த தகவல்கள் பல ஆச்சர்யமானவை. ஆனால் இவை எதுவுமே முறையாக பரிசோதிக்கப்பட்டவை அல்ல. வெறும் தகவல்களாக மட்டுமே அணுகிடத் தகுதியுள்ளவை. ஆர்வமும், வாய்ப்புகளும் உள்ளவர்கள் இவற்றை பரிசோதனை செய்து இந்த மருத்துவக்குறிப்புகளின் சாதகபாதகங்களின் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தால் மட்டுமே இவற்றை யாரும் பயன்படுத்த பரிந்துரைக்கலாம். 

சித்தர்பெருமக்கள் அருளிய நீரழிவுக்கான மருத்துவ குறிப்புகளை முன்னரே இரு பதிவுகளை பகிர்ந்திருக்கிறேன். அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். அந்த வரிசையில் இன்று யாகோபு சித்தரின் ”யாகோபு வைத்திய சிந்தாமணி 700” என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பை பார்ப்போம்.

குருணிஆவினுட பால் யிடையிற்காசு
அபினிட்டு குழம்பாக்கி யவ்வீராளி
பாவினைசெய் தளந்தூழாக்கு தின்றாயானால்
பறக்குமகா சலரோகம் பண்பதாமே.


குறுணி அளவு பசுவின் பால் எடுத்து அதனுடன் காசு எடை அபின் கலந்து குழம்பாக்கி  ஒரு ஆழாக்கு உட்கொள்ள கொடிய நீரழிவு நோய் நீங்கும் என்கிறார் யாகோபு சித்தர்.

ஒரு குருணி என்பது சுமார் நான்கு லிட்டர்.
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.Post a Comment

15 comments:

Unknown said...

Nice sister I like to know about the mulikai name in nowadays they consider

sushan karna said...

thx for sharing i hope one day some one will reaveal about our ancestors glory and greatness...

sushan karna said...

thx for sharing i hope one day some one will reaveal about our ancestors glory and greatness...

Unknown said...

காசு எடை என்றால் எவ்வளவு தோழி?

Unknown said...

அபின் என்றால் என்ன, (பொதை பொருளா)? தொழி தயவு செய்து விளக்கம் அளிக்கவும்...

SPSenthil said...

அபின் என்றால் என்ன?

தோழி said...

@Srinivas P N அபின் பற்றிய மேலதிக தகவல்களை இந்த இணைப்பில் வாசிக்கலாம். https://ta.wikipedia.org/s/imm

தோழி said...

@SPSenthil அபின் பற்றிய மேலதிக தகவல்களை இந்த இணைப்பில் வாசிக்கலாம். https://ta.wikipedia.org/s/imm

தோழி said...

@Srinivas P N காசு எடை என்பது 2-3 கிராம் அளவு.

Unknown said...

அபின் எங்கு டைக்கும்

Unknown said...

பதிவும், கேள்விக்கான பதிலும் வெளியிட்டமைக்கு நன்றி தோழி...

Unknown said...

Very interesting and informative article,Our ancestors used food as medicine,kasakasa payasam,veg korma occasionally now I know why.:-) :-) Awesome.

Unknown said...

Very interesting and informative article,Our ancestors used food as medicine,kasakasa payasam,veg korma occasionally now I know why.:-) :-) Awesome.

MUHUNTHA VEL said...

அபின் என்பதில் போதை உள்ளது தோழி அதற்கு நமது தமிழ் மருத்துவத்தில் இணையாக ஏதேனும் உள்ளதா

MUHUNTHA VEL said...

அபின் என்பதில் போதை உள்ளது தோழி அதற்கு நமது தமிழ் மருத்துவத்தில் இணையாக ஏதேனும் உள்ளதா

Post a comment