மின்னூல் : உரோமரிஷி அருளிய வழலை சூத்திரம் 16

Author: தோழி / Labels: ,

நண்பர்களே,

வணக்கம். சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவினூடாக சித்தர் பெருமக்களின் படைப்புகளை வெகுசனவெளியில் கொண்டு சேர்க்கும் சிறுமுயற்சியின் தொடர்ச்சியாக “உரோமரிஷி அருளிய வழலை சூத்திரம்16” என்கிற இந்த மின்னூலை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். இது சித்தர்கள் இராச்சியம் பதிப்பிக்கும் பதினெட்டாவது மின்னூல்.

உரோமரிஷி பற்றிய தெளிவான குறிப்புகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. புசுண்டரின் சீடரான உரோமரிஷி, செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். வழலை என்கிற சொல்லுக்கு உப்பு, ஒருவகை பாம்பு, புண்ணில் இருந்து வழியும் நீர் போன்ற பல பொருட்கள் இருந்தாலும் இந்த நூலில் உப்பு பற்றியே குறிப்பிடுகிறார்.

"வாதெமென்ற சொல்லெல்லாம் உப்பினாலே
மானிலத்தோர் காணாமல் மயங்கிப்போனார்"


வாதம் என்று சொன்னாலே அவை உப்புக்களையே முதன்மையாக கொண்டது என்று சொல்லும் இவர் இதனை அறியாத மனிதர்கள் மதி மயங்கிப்போய்விடுவார்கள் என்று சொல்வதுடன் வாதவித்தையின் சூட்சுமங்களை இந்த நூலில் விவரித்திருக்கிறார். 

தமிழ்  அறிந்த அனைவரும் படித்து இன்புற வேண்டும் என்கிற நோக்கில் இந்த அரிய நூலினை மின் நூலாக தொகுத்திருக்கிறேன். . தமிழர்கள் போற்றி பாதுகாத்திட வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. எனவே இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் தாங்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.


என்றும் நட்புடன்

தோழி..

www.siththarkal.com
தொடர்புக்கு

siththarkal@gmail.comPost a Comment

5 comments:

Unknown said...

அம்மா இதற்கு விளக்கம் எனக்கு புரியவில்லை பாடலாவே உள்ளது அம்மா

Unknown said...

எனக்கும் பதில் அனுப்புவீர்களா அம்மா

Boopathi said...

சிறப்பான முயற்சி...
பாடல்கள்களின் பொருளுடன் இருந்திருந்தால் மிக உதவியாக இருந்திருக்கும்...

DAMODARAN.BANGALORE said...

Thank you thozhi. ..
Vazhga Valamudan

MUHUNTHA VEL said...

தோழிக்கு வணக்கம் பாடலை மொழி பெயர்த்தால் மிகவும் நன்று

Post a comment