ஆன்மிகத்தில் தன்னையறிதலையே ஞானம் என்கிறோம். ஞானம் என்பது சலனமில்லாத பரிபூரணநிலை. இந்த ஞானம் எப்போதும் நமக்குள்ளேதான் இருக்கிறது. அதை உணரவைத்து, உற்றுநோக்கி
தெளியவும் மெய்யான குருவின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.
இந்த பரிபூரண நிலையே சித்த நிலை அல்லது சமாதி என்கிறோம். சித்தநிலை என்பது எதிர்பார்ப்பில்லாதது.. கருணையும், அன்பும் பெருகியநிலை. தாமே அதுவாக உணர்ந்த உயரியநிலை. இந்த நிலையை எய்தியவர்கள் எவரும் தங்களைத் தாங்களே குரு எனச் சொல்லிக் கொள்வதுமில்லை. அல்லது தங்களுக்கென குருபீடம் அமைத்துக் கொண்டு பொய்யான மதங்களையும், மந்தைகளையும் உருவாக்குவதுமில்லை. அப்படி செய்கிறவர்கள் போலியானவர்கள்..
தகுதியானவர்கள் ஞானத்தேடலை உணர்ந்த மெய்யான குரு அவர்களைத் தேடி வந்து ஆட்கொண்டு வழிநடத்துவார். அப்போது அந்த மேலான குருவின் பாதங்களை கள்ளமனமின்றி பற்றி பணிந்து பயன்பெற வேண்டும் என்கிறார் பாம்பாட்டி சித்தர்.
உள்ளங்கையிற் கனிபோல பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைகத் தள்ளிக்கண்டு கொண்டன்பாய்க்
களித்துக் களித்து நின்று ஆடுபாம்பே.
Post a Comment
9 comments:
guruvin magemai tharaniel paravatum.
குருவே சரணம்..
திருவே சரணம்!..
Nicely explained in simple terms
நிச்சயமாக.....
ஆனால் இதுவரையில் எந்தவொரு எதிர்பார்ப்பில்லாத குரு ஒருவரையும் நான் சந்தித்ததே இல்லை என்பது ஒரு வருத்தமாகும்
குரு வந்தனம் செய்வோம்! நன்றி!
குருவருள் உமக்குண்டு
குறைவின்றி தொடரட்டும் பயணம்
என் அன்பு அம்மா நலமாக உள்ளீர்களா
நலமாக உள்ளீர்களா
Post a Comment