ஏனிந்த இடைவெளி!!

Author: தோழி / Labels:

நேற்றைப் போல இருக்கிறது. 

இதோ ஏழு மாதங்களுக்குப் பிறகு உங்களின் முன்னால் வந்து நிற்கிறேன். காலம்தான் எத்தனை வேகம் காட்டுகிறது. இதில் ஆறு மாதங்களுக்கு மேலாக மருத்துவமனை வாசம். எந்த மருத்துவமனையில் மருத்துவராய் பணி புரிகிறேனோ, அதே மருத்துவமனையில்   ஒரு நோயாளியாக...

என்னதான் வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டாலும், அடுத்தடுத்து அம்மா, அப்பா என இருவரையும் இழந்ததின் அதிர்ச்சி, துயரம், வெறுமை, தனிமை, மன அழுத்தம், சரியாக சாப்பிடாமை என எல்லாமுமாய் சேர்ந்து உடல்நலம் கடும் பாதிப்புக்குள்ளாகி வேரோடு சாய்ந்த மரம் போல வீழ்ந்திருந்தேன்.

மருத்துவ பரிசோதனைகள் என என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் எனக்கு நடந்தேறியது. பரிசோதனை முடிவுகளை வைத்துக் கொண்டு என் சக மருத்துவர்கள் ஆளாளுக்கு ஒரு பாதிப்பைப் பற்றியும், அதற்கான சிகிச்சைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தனர். 

கிட்னியில் பாதிப்பு என்றார்கள். நல்ல வேளை பெரிய பாதிப்பில்லை என்றார்கள். அதுவரை நினைவிருந்தது. அதன் பிறகு நிமோனியா காய்ச்சல் . திடீரென  பார்வை மங்கியது. ஒரு கட்டத்தில் இருட்டு. கண் பார்வை நரம்பில் பாதிப்பு, இனி பார்வை திரும்புவது கஷ்டமென்றார்கள். 

எல்லாமே இருண்டு போனது.

அடுத்த ஆறு மாதங்கள் வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஒரு அவஸ்தையோடு சிகிச்சை. இப்போதும் கூட என்னால் ஆறு அடிக்கு அப்பால் இருக்கும் எதையும் பார்க்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லாம்  சரியாகும் எனச் சொல்லியிருக்கிறார்கள். நான் இருந்த நிலமைக்கு மீண்டு வருவதற்கோ, இனி  இணையம் வந்து  பதிவுகள் எழுதுவதற்கோ வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். ஒரு கட்டத்தில்  எனக்கான எல்லா வாய்ப்புகளும் முடிந்து விட்டதாகவே தோன்றியது.

பெற்றோர்களின் ஆசி, குருவின் அருள், நண்பர்களின் பிரார்த்தனை, காப்பாற்றியே தீருவது என போராடிய மருத்துவர்களின் அன்பு, தங்களின் மகளைப் போல என்னை கவனித்துக் கொண்ட செவிலியர்களின் அக்கறையின் விளைவாக இதோ இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டாம் வாய்ப்பில், எல்லாம் வல்ல குருவருளின் அனுமதியோடும், பெற்றோரின் ஆசியோடும், நண்பர்களின் ஒத்துழைப்போடும் சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவை மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்.

புரிதலுக்கு நன்றி.

நட்புடன்

தோழி @ தர்ஷினி.

குறிப்பு.

இணைய பக்கங்களை பார்ப்பதிலும், வாசிப்பதிலும் எனக்கு சிரமங்கள் இருப்பதால் இப்போதைக்கு பதிவுகளை மேம்படுத்துவதற்கு மட்டுமே கணினியை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறேன்.  எனவே யாருடைய மின்னஞ்சகளுக்கும் என்னால் பதிலளிக்க இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
                                                          - திருமூலர்.Post a Comment

70 comments:

Nanjil Kannan said...

அக்கா இறை அருளாலும் குரு அருளாலும் நீங்கள் மீண்டும் பழைய போல உத்வேகத்தோடு வருவீர்கள் !!! என்னுடைய பிரார்த்தனைகளும் . ESM akka

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்!

vv9994013539@gmail.com said...

thinam thinam ungalai nenikeran. varugaiku vaalthukal.

துரை செல்வராஜூ said...

தங்களின் நலத்திற்கு வேண்டுகின்றேன்..
குருவருளும் திருவருளும் துணை நிற்கும்..

Nagapooshani said...

நலம்பெற பிரார்த்தனைகள்.

Nagapooshani said...

நலம்பெற பிரார்த்தனைகள்.

சம் said...

I will meditate for you
purusothothaman

நிகழ்காலத்தில்... said...

உடல்நலம் முக்கியம்..கணினிப் பயன்பாட்டை இரண்டாம்பட்சமாக வைத்துக்கொள்ளவும் தோழி ..நலம்பெற வேண்டுகிறேன்

வடுவூர் குமார் said...

Get well soon.May God Bless you.

Unknown said...

நல்வரவு!!
பூரனநலத்தோடும் புன்னகையோடும் வலம் வர எல்லாம் வல்ல இறையருள் உங்களுக்கு துனைபுரியும்....

Unknown said...

welcome


BG Venkatesh
1008petallotus.wordpress.com

kugadas said...

அவனருளாளே அவன்தாள் வணங்கி ... ... என் கடன் பணிசெய்து கிடப்பதே!
பணி தொடர வாழ்த்துக்கள்!!

Unknown said...

தோழி,

மாற்றம் ஒன்றே மாறாதது.... இதுவும் மாறும்...கடந்து செல்லும்... தங்களோடு மீண்டும் தொடர்ந்து பயணிக்க பல நல்லுள்ளங்களோடு நானும் ஒருவனாக... ஓம் அகத்தீசாய நமக

kimu said...

குருவருளும்
திருவருளும்
துணை நிற்கும்..

sivanes said...

தோழி,
தங்கள் வருகை எனக்குள் விதைத்தது மகிழ்ச்சி
குருவருளும் திருவளும் தங்களுக்கு தந்தது மீட்சி
அன்பும் நலமும் தங்கள் வாழ்வில் இனி அரங்கேறும் காட்சி
தொடரட்டும் இணையத்தில் சித்தர்களின் அரசாட்சி

அன்பும் நட்பும் ‍- சிவனேசு ம‌லேசியா

Accounts and Tax said...

விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கண்ணதாசதாசன் said...

தமிழை உண்டு..
தமிழால் உறங்கி
தமிழால் வளரும்
தளிரே!
உம் உயிரும் உடலும்
தழைக்கும்!
நோய் நொடி யாவும் பறக்கும்!
சிவனருள் என்றும் நிலைக்கும்!

வாழ்க பல்லாண்டு!


கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

முதலில் உடல் நலத்தை பாருங்கள் .... பின்பு எழுதலாம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

SRIRAM said...

GOD BLESS YOU THARSI

Unknown said...

ஆதித் தமிழனின் அருள் என்றும் உம்மை காக்கட்டும். தொடரட்டும் உம் தொன்டு. தோழியின் வருகைக்கு காத்திருக்கிறோம்

கவிநயா said...

விரைவில் பூரண நலம் பெற இறைவன் அருளட்டும்...

Unknown said...

சிவனின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டுகிறேன்

Dhananjayan P said...

Dont't worry sister, we are with you. God will bless you...

saravanan said...

kadavul Thangalukku thunai irukka vendukiraen....

Unknown said...

valthugal amma

Unknown said...

வாழ்த்துக்கள்

Unknown said...

Get well soon

S.Puvi said...

இறைவன் துனை புரிவான்.
உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள். உடல் நலத்துடன் இருந்தால் தான் பின்னர் வலைப்பதிவுகளை மேற்கொள்ளலாம். அதுவரை நன்கு ஓய்வெடுங்கள்

வாளவாடி வண்ண நிலவன் said...

இனிய சகோதரி ...உற்சாகம் மட்டுமே மனதின் மருந்து ..

அத்விகா said...

தன்னம்பிக்கையே மனிதனின் தனித்துவம் அதை மட்டும் இழந்து விடாதீர்கள்..அதனுடன் கூடிய மருத்தும் உங்களை காக்கும் இறைவன் அருளால்..

kings said...

மீண்டு(ம்) நீங்கள் எழூதுவது மகிழ்ச்சி. இறையருளும் குருவருளும் பெற்று முழுவதும் நலமடைய வாழ்த்துக்கள் சகோதரி

ம.தி.சுதா said...

நீங்கள் மீள வந்ததே பெரிய எங்களுக்கு பெரும் சொத்து தான் எங்களுக்காகவாவது உங்கள் பதிவை தொடருங்கள்
நன்றியுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

k balachandar said...

மதிப்பிற்குரிய தோழி, எல்லாம் இறைவனின் திருவிளையாடல், இதுவும் மாறும். அவன் பாதம் பணிவோம்

Unknown said...

please write guru peyarchi palangal

Unknown said...

ந ம சி வா ய

Unknown said...

best wishes

Unknown said...

Get well soon best wishes

Unknown said...

Let tamil god murugan and all siddhargal give back your all strength.
K. Venugopal

RR-KRISHNA HOME DECOR said...

நன்கு உடல் நலமும் உடல்பலமும் பெற்று மீண்டும் தங்களது பணியினை சிறப்பாக செய்து மென்மேலும் வளர எல்லாமுமாக உள்ள இறைவனை வேண்டுகிறேன்.

Mugilan said...

நலம் பெற வாழ்த்துக்கள்!

Unknown said...

தங்களுக்கு புதிய உத்வேகம் பெற்ற இறைவனை பிராத்திக்கிறேன்.

P.PERIASAMY said...

dear sister
always god with you. i will pray for you .please continue your work

Unknown said...

Poorana gunamadainthu allalgalilirunthu meendu sirantha udal arokyathudan vara vaalthukkal tholi

Unknown said...

தோழி நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறோம்

Unknown said...

நலம் பெற வாழ்த்துகள்...

Nandha said...

வாழ்க வளமுடன் தோழி . இறைநிலையின் செயல்கள் அனைத்தும் நன்மைகே. இதுவும் கடந்து போகும்.
வாழ்க வளமுடன்

Unknown said...

May GOD Bless you.. sister.

srini srirangam said...

உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு எழுதலாம்

Bogarseedan said...

விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்...

Unknown said...

Guru agathiyar ungal thunai nirka vendi en praarthanaigal...

Unknown said...

Always god will bless u and so forth ur parents ,I had been waiting for return and ur words abt sithargal ,god bless u dr ,take care ur health .

Narmadha Jpn said...

Don't worry sister we r with you..all for the best...God always gives test for good reason only....take care of ur health first

Narmadha Jpn said...

Get well soon dear sister ...I pray for ur health ...take care for health first..all for the best ...

Unknown said...

நன்றி கூற வார்த்தைகலே இல்லை தோழி.. துயரன்கள் பல வந்தாலும் மீண்டு வந்திருக்கிறாய் தமிழை வாழ வைக்க.. இயற்கையிடம் தங்களுக்காக தினமும் பிராத்திக்கிறேன் தாங்கள் இனி நிம்மதியை மட்டுமே பெற விருக்கிறீகள்.. தங்களுக்கு உதவ கோபிசெட்டியபாளயத்திளும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதை மறவாதீர்கள்.. வாழ்க வளமுடன்...

Unknown said...

How much sorrows you should have met u have come back here to live Tamil language awesome friend.. And I'm praying to Nature that u should get satisfied life rapidly soon.. I'm ready to help u for this... வாழ்க வளமுடன்...

Unknown said...

Guru arulum irai arulum thangaluku thunai nirkum........

Unknown said...

Guru arulum irai arulum thangalukku thunai nirkum

varmamaruthuvam said...

Iniya thozhi avargalae.. Thangal pani thooyathu... Thanalamatrathu ... Endrum guruvarul petru mana suththiyudan thangal pani thodara iraivanarulai vendugiren...

Unknown said...

மனம் வருந்துகிறேன் தோழி
தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல அபிராமி துணை இருப்பாராக. தவத்தில் கவனம் செலுத்துங்கள். நல்லதே நடக்கும்.

Murli said...

Be Strong. Life has lot of challenges. You will be strong.

Unknown said...

I wish you a speedy recovery. Let God be with you always.

Unknown said...

Get well soon sister..

CSC VELLAPALLAM said...

தாங்கள் நலம் பெற மகரிழி சிவா சித்தார் அவர்களிடம் பிராத்திக்கிறேன்

Unknown said...

மீண்டும் வேண்டும் அதே தர்ஷினி இறைவா

Unknown said...

மீண்டும் வேண்டும் அதே தர்ஷினி இறைவா

Anonymous said...

சித்தர்கள் உங்களை கைவிட மாட்டார்கள் ....
வாழிய நலம் ...!
ஓம் அகத்தீஸ்வராய நமக ...

Unknown said...

தோழி நலம் பெற சிவனை ப்ராதிகின்றேன்

Anonymous said...

உங்கள் தொண்டிற்கு நன்றி. விரைவாக குணமடைய எனது பிரார்த்தனைகள். சித்த மருத்துவத்தை நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துகிரீர்களா???

ransun said...

You are a special person selected by God
that shows in your Thamizh and God's messages. Guruvarul Paripoornamaga Arulapattulathu. Thozhi u r Unique. Deiveega THAI THANTHAI ungaludanae ullargal. Ethuvum kadanthu pogum. Dr.Darshini you are a divine personality all energy,health and wellbeing is all within you.You are Immensily Blessed by Siddars,your Guru and your Angelic Parents.Combined with all your wellwishers prayers you have earned through this wonderful divine site. get well soon. come back with full strength.You now have a very big family given by SIDDARGAL RAJJIYAM.
Anbae sivam
Lalithambigai Poyyamozhi
chennai

Unknown said...

anbu thangaikku, i pray for ur health and ur quick recovery may the supreme be with you in all ur endeavours, i'm sure he'll answer my prayers may all good happen to you in the days to come we need u because you are our intellectual property. you are in my daily prayers, continue to do the good work with out stressing yourself...
Regards,
Senthil V.J

Post a comment