நாம் உறங்க பயன்படுத்தும் படுக்கைகளினால் விளையும் பலன்களைப் பற்றி தேரையர் விரிவாக கூறியிருக்கிறார். அந்த வகையில் இந்த நிறைவுப் பகுதியில் குறிப்பிட்ட சில படுக்கைகளை பயன்படுத்துவதால் விளையும் நன்மை தீமைகளைப் பற்றி பார்ப்போம்.
இலவம்பஞ்சு மற்றும் பருத்திப்பஞ்சினால் ஆன படுக்கையினால் ஏற்படும் பலன்..
இலவம்பஞ் சுப்படுக்கைக் கேகுமுட் சூடும்
அலர்பருத்திப் பஞ்சி னனைக்கோ-உலவிரத்தம்
விந்திவைக ளைப்பெருக்கு மேல்விரக முண்டாக்குங்
குந்துசுரத்தையழிக் கும்.
இலவம் பஞ்சினால் ஆன படுக்கையில் உறங்கினால் உட்சூடு நீங்குமாம். மேலும் பருத்தி பஞ்சினால் ஆன படுக்கையில் தொடர்ந்து உறங்கி வந்தால் இரத்தம், விந்து, காமம், இவைகள் பெருகுவதுடன் சுரமும் நீங்கும் என்கிறார்.
ரத்தனக் கம்பள படுக்கையினால் ஏற்படும் பலன்..
பஞ்சவன் னஞ்சேர் நற்கம் பளத்தருஞ் சலவை தோட
விந்திடும் பித்தந்தாது விருத்தியுண்டாகுஞ் சீதம்
அஞ்சிடுங் கோபவையம் அலைந்திடும் பாண்டுவோடு
நஞ்சுகளெல்லாந் தீரும் நலம்பெரு முஷ்ணாமே.
வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை, கறுப்பு ஆகிய நிறங்களில் ஏதேனும் இரு நிறங்களைக் கொண்ட ரோமங்களால் நெய்த ரத்தின கம்பளத்திற்கு சீதள தோஷம், பாண்டுவீக்கம், அனைத்து வகை விஷங்கள் ஆகியவை நீங்குமாம். அத்துடன் பித்தமும் தாது விருத்தியும் உண்டாகுமாம். ஆனால் இத்தகைய படுக்கை அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும் தன்மையுள்ளது என்கிறார்.
தாழம்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..
தாழம்பாய் வாந்தி தலைசுற்றல் பாண்டுபித்தம்
ஆழஞ்சேர் நீராமை யாம்பிணியும்-வீழுந்தண்
ணீரிழிவும் போக்குமிக நேசித்த வர்குலத்திற்
காரிழியுங் கூந்தன்மினே காண்.
தாழம்பாயில் உறங்குபவர்களுக்கு வாந்தி, தலைசுழற்றல், பாண்டுரோகம், பித்த தோஷம், நீராமைக் கட்டி, வெகுமூத்திரம், நீரழிவு ஆகியவை நீங்கும் என்கிறார்.
கோரைப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..
கோரையினபாய் தற்குணமாய் கொள்ளுமனல் மந்தமறுங்
கூரறியதேகங் குளிர்ச்சியுறும்-பாருலகில்
நன்னித் திரைகூடும் நாடா துருட்சையிவை
யுன்னிப் புவியி லுரை.
கோரைப்பாயியில் உறங்குபவர்களுக்கு அக்கினி மந்தமும், சுரவேகமும் நீங்குவதுடன் உடல் குளிர்ச்சியும் சுகமான உறக்கமும் கிட்டும் என்கிறார்.
சாதிப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..
சாதிப்பாய் சீதளமாஞ் சாருமிக னான்முற்றும்
பேதிக்குட் சீதம் பிசருங்காண்-வாதிக்குஞ்
சீதசுரங்காணுஞ் சிரசு மிகக்கனக்கும்
ஏதமிகு நோயர்க் கிசை
சாதிப்பாயில் உறங்குவதால் மூலரோகம், சீதமலபேதி, சீதசுரம், சிரோபாரம் இவைகள் உண்டாகுமாம். இதனால் சாதிப்பாயில் உறங்குவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
பேரிச்சோலைப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..
பேரீச்சுப் பாயினிதம் பேரா துறங்குவர்க்குப்
பாரித்த குன்மம் பறக்குங்காண-பூரித்த
வீக்கமறுந் தீபனமா மெய்யைவெளுப் போடிண்ண
மாக்கிவிடு மென்றே யறி
பேரீச்சோலைப்பாயில் உறங்குவதால் வாதகுன்மமும், சோபையும், வீக்கங்களும் நீங்குவதுடன் பசி, பாண்டு, உஷ்ணாதிக்கம் ஆகியவை உண்டாகுமாம்.
சிற்றீச்சோலைப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..
சிற்றீச்சுப் பாயிற் றினமும் படுப்பவருக்
குற்றிடுமே காந்த லுடம்புலருஞ்-சுற்றியதோர்
வாயுவறும் பித்தமறும் வற்றுங் கபந்தீருந்
தாயகமா மிக்குணத்தைச் சாற்று
சிற்றீச்சம்பாயில் உறங்குவதால் உஷ்ணமும் உடல் வலுவும் உண்டாகுமாம் அத்துடன் ஆவிருவாதம், அதிகபித்தம், கபம் ஆகியவை நீங்கும் என்கிறார்.
மூங்கிற்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..
நீர்க்கடுப்பு மெத்தவுறி நீடுபித்த மும்பெருகு
மார்க்கு மனல மதிகரிக்கும்-பார்க்குளுறை
கோங்கி னருப்பிணைய கொங்கை மலர்த்திருவே
மூங்கிலின் பாய்க்கு மொழி.
மூங்கிற்பாயில் உறங்குவதால் மூத்திரக்கிரிச்சரம், பித்தகோபம், அதிக உஷ்ணம் ஆகியவைகள் விருத்தியடையுமாம். இதனால் மூங்கிற்பாயில் உறங்குவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
மலர்ப்படுக்கையினால் ஏற்படும் பலன்..
தீபாக் கினிதழையுந் தின்றமருந் தாலெழுந்த
தாபாக் கினியுந் தணியுங்காண்-யாபார
நட்புவரும் விந்தூறும் நாளுமுட லஞ்செழிக்கும்
புட்பவணைக் கென்றே புகல்.
முல்லை மல்லிகை முதலிய மலர்களினால் ஆன படுக்கையில் உறங்குபவர்களுக்கு பசி, போகத்தில் ஈடுபாடு, சுக்கில விருத்தி, உடல் செழிப்பு ஆகியவை உண்டாகுமாம் அத்துடன் மருந்து உட்கொள்வதனால் ஏற்படும் உடல் உஷ்ணமும் நீங்கும் என்கிறார்.