நண்பர்களே,
இடைப் பட்ட நாட்களில் சித்தர்கள் இராச்சியம் பதிவை மேம்படுத்தாதது குறித்து விசாரித்து எழுதப் பட்ட நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்களை இப்போதுதான் பார்க்க நேர்ந்தது. தற்போது என் வாழ்வின் மிகத் துயரமான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில் நேர்ந்த என் தாயாரின் மறைவு தந்த அதிர்ச்சியினால் நிலைகுலைந்து மிகவும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த என் தந்தையாரும் கடந்த வாரத்தில் காலமானார்.
இது போலொரு துயரம் எந்தவொரு மகளுக்கும் வாய்க்கக் கூடாது. எது எப்படியானாலும் எல்லாம் வல்ல குருவோடும், தெய்வத்தோடும் இரண்டறக் கலந்துவிட்ட அவர்களின் நினைவைச் சுமந்தபடி என் பயணம் தொடர்கிறது.
கூடிய விரைவில் புதிய பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன்.
புரிதலுக்கு நன்றி.
தோழி (தர்ஷினி)