நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவினை துவங்கிய காலத்தில் என்னிடத்தில் இருந்த தகவல்களை பொதுவில் பகிரவேண்டும் என்கிற வேட்கை மட்டுமே இருந்தது.  ஆனால் அதை எல்லோருக்கும் புரியும் படி சொல்லிடத் தேவையான மொழி என்னிடத்தில் இல்லை. இதனை எனது ஆரம்ப கால பதிவுகளை வாசிக்கும் எவரும் அவதானிக்கலாம்.  பின்னாளில் அங்குலம் அங்குலமாய் என் மொழியை செப்பனிட்ட பெருமை திரு.சரவணக்குமார் அவர்களையே சேரும். 

எதை எழுதுவது, எப்படி எழுதுவது என பத்தி எழுத்தின் ஒவ்வொரு நுட்பங்களையும், சூட்சுமங்களையும் நான் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். தன்னுடைய வேலைகளுக்கு மத்தியிலும் எனக்கென நேரம் ஒதுக்கி பொறுமையுடன் அவர் கற்றுக் கொடுத்த  மொழியைத்தான் இன்று நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒரு முறை அவர் விளையாட்டாய் சொன்னதைப் போல அவருடைய எழுத்தின் வாரிசு நான்தான் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமைதான்.

எம்மை கடந்து போகும் ஒவ்வொருவரிடமும் நாம் கற்றுக் கொள்ள  ஒரு செய்தி இருக்கிறது, அதை உணர்வதிலும், தெளிவதிலும்தான் நம் வாழ்க்கை இருக்கிறது என்பதை எனக்கு  கற்றுத் தந்தவர் என்கிற வகையில் அவர் எனக்கொரு குரு என்றால் மிகையில்லை. எல்லாம் வல்ல குரு எம்முடன் இருக்கிறார். எம்மை வழிநடத்துகிறார் என்பதை பல தருணங்களில் உணர வைத்தவருக்கு இந்த நாளில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

திரு.சரவணக்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.Post a Comment

5 comments:

நாமக்கல் சிபி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :)

amaithy said...

Belated Happy brithday, May god bless you sir.

Lingeswaran said...

யார் அந்த எல்லாம்வல்ல குரு என குறிப்பிட்டு பெயர் சொல்ல முடியுமா?

Unknown said...

very nice info....

Post a comment