பதார்த்த குண சிந்தாமணியும்..... வேர்களும்.

Author: தோழி / Labels: , , ,

சித்த மருத்துவத்தில் வேர் முதல் தளிர் வரையிலான மொத்த தாவரத்தையே  "சமூலம்" என்கிறோம். அதாவது  ஒரு தாவரத்தின் வேர், தண்டு, இலை,பூ, காய், கனி, விதை என எல்லா பாகத்தையும் உள்ளடக்கியது சமூலம்.  

சித்த மருந்து தயாரிப்பில் "மூலம்" என்பது வேர்களைக் குறிக்கும் பதம். 

தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" எனும் நூலில் வேர்களைப் பற்றியும், அவற்றின் தொகுப்புகளைப் பற்றியும், அவைகளைக் கொண்டு தயாரிக்கப் படும் மருந்துகளைப் பற்றியும் அருளியிருக்கிறார். 

 "பஞ்சமூலம்" , "சிறு பஞ்சமூலம்", "பெரு பஞ்சமூலம்", "அஷ்டமூலம்", "தசமூலம்" என ஐந்து பெரும் தொகுதிகளாய் வேர்களை வரையறுத்திருக்கிறார். இவை முறையே ஐந்து, எட்டு, பத்து வெவ்வேறு மூலிகை வேர்களின் தொகுப்பாகும். 

இந்த மூலிகை சேர்க்கைகளைக் கொண்டு தயாரிக்கப் படும் மருந்துகள், குறிப்பிட்ட  வகை நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. நோயின் தன்மை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்து இந்த மூலிகைகளின் சேர்க்கைகளின் அளவும், விகிதமும் மாறுபடும்.

இன்றைய பதிவில் முதல் வகையான "பஞ்சமூலம்" பற்றிய தகவல்களை பார்ப்போம். இதைப் பற்றி தேரையர் பின்வருமாறு கூறுகிறார்.

செவ்வியம் பேரரத்தை சித்திரமூ லஞ்சுக்கோ
டோவ்வுஜண்டு பாரங்கி யோரைந்தும் - வெவ்வினையச்
சண்ணு பஞ்ச மூலமெனத் தாரணியெல் லாம்அறிய
வண்ண மயிலே வழுத்து

- தேரையர்.

பஞ்ச மூலம் என்பது ஐந்து வெவ்வேறு மூலிகை வேர்களின் சேர்க்கை. அவை பின்வருமாறு....

1. திப்பிலி வேர்
2. பேரத்தை வேர்
3. கொடிவேலி வேர்
4. சுக்கு வேர்
5. கண்டு பரங்கி வேர் 

இந்த பஞ்ச மூல வேர்களைக் கொண்டு தயாரிக்கப் படும் மருந்துகளினால்  வாதம், மகாவாதம், பக்கவாதம், மூட்டுவாதம், முடக்குவாதம், எரிவாதம், குதிவாதம், குடல்வாதம், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல், பித்தம், பித்தசுரம், குடல்பிரட்டல், வாந்தி, மனக்கலக்கம், குழப்பம், கபம், இருமல், சலதோசம், மூக்கடைப்பு, காசம், சுவாசகாசம், இரத்தகாசம், கபாலநீர், நீர்க்கோர்வை ஆகிய நோய்களை தீர்க்க முடியுமாம்.

இந்த மருந்துகளை தயாரிக்கும் முறைகளைப் பற்றி பிரிதொரு தருணத்தில் தனியொரு தொடராய் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்த பதிவில் சிறு பஞ்சமூலம் மற்றும் பெரும் பஞ்சமூலம் பற்றிய தேரையரின் தகவல்களை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

27 comments:

SANGAMES said...

Thank you friend

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

மிக அருமையான தகவலை பகிர்ந்துள்ளீர்கள் தொடருங்கள் அடுத்த பகுதியை... காத்திருக்கேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

மிக்க நன்றி தோழி!

Unknown said...

plz tholi any siddher malaivala vagadam books needed

S.Puvi said...

Thank Q so much

Senthil.K said...

vellai erukam chedi veetil valarkalama kudatha.kindly tell Thozhi.

Senthil.K said...

வணக்கம் தோழி,
# how much hours to sleep per day,should the sleeping position be differrent according to the pitha,vata,kabha type of body or everybody should sleep on right side.
# should people of pitta body type eat three meals a day or just two meals a day(i am currently eating only in the morning and afternoon only)

Senthil.K said...

hi thozhi,
should we take oil bath before or after doing asana,pranayama.kindly advice.

Senthil.K said...

வெள்ளை எருக்கன் செடி வீட்டில வளர்க்கலாமா.

MYNSCOPE said...

அன்பு சகோதரி்க்கு வணக்கம்.

தங்களுடைய பதிவினை கண்டேன். அவ்வளவும் அற்புதமானவை. அறிய முடியாத பல தகவல்களை இங்கே படிக்க நேர்ந்தது. ஆச்சர்யமாக இருந்தது. தனி ஒரு பெண் இத்தனை தகவல்களை சேகரிப்பது என்பது கடினமான ஒன்று. அந்த முயற்சி்க்கு பாராட்டுகள். இதற்கு எதாவது உதவி வேண்டுமெனில் கூறுங்கள். முடிந்ததை செய்கிறேன். என் மி்ன்னஞ்சல் முகவாி - Y.MURALIDHARAN@gmail.com

உண்மையுடன் தங்கள் சகோதரன்.
யு. முரளிதரன்

Unknown said...

Ne enaku magalaga pirukkavendum. Enaku pulipani jothidam 300 book venum please anupunga

Unknown said...

Ne enaku magalaga pirukkavendum

Unknown said...

Thanks alot for these kind of posts! Good information.

My blog: http://www.tradilife.com

Unknown said...

Hi Thozhi,
Can you please tell us swarna kala bairavar moola mantram provided my sitharkal, who is guarding the lord siva temples.

Unknown said...

Hi sister

what is the medicine for Hepatitis B and liver cirrhosis?

பிரசன்ன குமார். மு said...

நலமா தோழி. ஏன் இத்தனை நாட்கள் மௌனம் தயவு செய்து ஒரு கருத்துரைக்காவது மறுமொழி அல்லது பதிவை இடுங்கள்

நன்றி

mythili said...

Hi sister, Enakku kovam, fear, tension and inferiority complex poga vazhi sollungal

Unknown said...

eppoluthum siththarkal vaalkinrarekala ?
avarkalai appadi enam kaanpathu ?

Unknown said...

நிகழ்வுக்கு மிகவும் வருத்துகிறேன் தோழி. தங்களுக்கு எல்லா வகையிலும் இறைவன் பக்க பலமாக இருக்க நான் எல்லாம் வல்ல கடவுளை பிரார்த்திக்கிறேன். நன்றி! - அன்புடன் தோழன் கோபிநாதன், சென்னை

amaithy said...

Dear Friend,

We are waiting for you.......

Thank you.

Faiz said...

அறுமையான தகவல்கள்............ தொடரவும்

Unknown said...

Thank you Alot.. Great Post!
http://www.tradilife.com/

Unknown said...

kala gandi yetchini ku vaitha neivithiyam aana piragu ulla prasathathai enna seiya vendum endra moraiyai sollave illai.thayavu seithu athai sollalum.....please tell me.......by mahamayi babu.........

”தளிர் சுரேஷ்” said...

உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

bala said...

நன்றி

Unknown said...

அமுக்கராசூரணம் சாப்பிட்டால் குணம் கிடைக்கும்

Unknown said...

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தினசரி உணவுகள் பற்றி தெரிவிக்கவும். நன்றி!,வாழ்க வளமுடன்.

Post a comment