ஆதியில் மனிதன் தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கையை, அதன் பேராற்றலைக் கண்டு அஞ்சி நடுங்கி தன்னை காத்துக் கொள்ள வேண்டி அவற்றை பணிந்து வணங்கத் துவங்கினான். இப்படித்தான் பஞ்சபூத வழிபாடுகள், மர வழிபாடுகள், நாக வழிபாடுகள் போன்றவை துவங்கின.
பின்னாளில் இந்த பிரபஞ்ச சக்திகளுக்கு உருவமும், குறியீடுகளும் கற்பிக்கப் பட்டு அவற்றை மனமுருகி வணங்கினால் அவை மகிழ்ந்து சாந்தமாகி நல்வாழ்வை அருளும் என்கிற எண்ணப் போக்கு உருவானது. இதற்கென இறைவனுக்கு படையல், பலி, பூசைகள், வேள்விகள், வழிபாடுகள், துதிகள், விதிகள், சடங்குகள் என ஒவ்வொன்றாய் உருவாக்கப் பட்டன. ஒரு கட்டத்தில் இறைவனை விடவும் இறைவனைச் சுற்றி கட்டமைக்கப் பட்ட கோட்பாடுகளின் ஸ்தாபனம் வலுவடைந்து மதம் ஆனது.
இந்த மதத்திற்கு உண்மையுள்ளவனாகவும், அதன் கட்டுப்பாடுகளுக்கு பணிந்து அடங்கி இருப்பதுதான் இறையருளை பெறுவதற்கான ஒரே வழி என்கிற நம்பிக்கை மக்களிடையே ஆழமாய் விதைக்கப் பட்டது.இதனை மறு பேச்சில்லாது ஏற்றுக் கொண்டவர்கள் ஆத்திகர்கள் என்றும் நம்பாமல் கேள்வி எழுப்பியவர்கள் நாத்திகர்கள் என அழைத்தனர்.
அநேகமாய் எல்லா மதங்களும் இறை அருளை பெற, அதனை பணிந்து துதித்து சரணடைவதே முக்திக்கான வழி என கூறுகின்றன. இதனை பக்தி மார்க்கம் அல்லது பக்தி யோகம் எனலாம். பக்தி மார்க்கத்தில் ஏன், எதற்கென்கிற கேள்விகளே கிடையாது. மதம் முன்வைக்கும் சடங்குகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு அதன் போக்கில் வாழ்ந்திருப்பதே நம் கடமை என்பதாக வலியுறுத்தப் படுகிறது.
இந்த சடங்குகள், விதிகள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டவை. இவற்றிற்கான நிரூபணங்கள் அல்லது தேவைகள் என்ன என்கிற கேள்விகளுக்கு பெரும்பாலும் நேரடியான பதில்கள் கிடைப்பதில்லை. அப்படியே கேள்விகள் எழுப்பினாலும் அவை தெய்வ நிந்தனையாக கருதப்படும். அப்படி கேள்வி எழுப்பியவர்கள் எந்தவொரு சமூகத்திலும் விரும்பப் படாதவர்களாகவே இருந்தனர். மேலும் அவர்கள் தீய சக்தியின் குறியீடுகளாய் இனம்காட்டப் பட்டனர்.
"நாஸ்திக்" என்னும் வடமொழிச் சொல்லின் மருவிய தமிழ் வடிவமே நாத்திகம். "ஆஸ்திக்" என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் மருவலே ஆத்திகமாயிற்று. ஆஸ்திக் என்னும் வடமொழிச் சொல்லுக்கு வேதங்களையும், அது முன் வைக்கும் கருத்துக்களையும், வரையறைகளையும், அவற்றின் உயர்வினை ஏற்றுக் கொண்டவன் என பொருள் கூறுகிறது. இதனைப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் அறிய விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம். இந்த விளக்கங்களின் அடிப்படையில் இறைவனை முன்னிறுத்தி கட்டமைக்கப் பட்டிருக்கும் வேதங்கள், உபநிடதங்கள், சடங்குகள் அவை முன் வைக்கும் வழிபாடுகளை ஏற்றுக் கொள்பவரை ஆத்திகர் என்றும், இவற்றை நிராகரிப்பவரை நாத்திகர் என்றும் புரிந்து கொள்ளலாம்.
வேதங்களும், உபநிடதங்களும் முன் வைக்கும் கருத்தியலை கேள்விக்குள்ளாக்கும் போதுதான் நாத்திகம் பிறக்கிறது. கேள்விகளுக்கான பதிலைத் தேடும் பயணத்தில் அறிந்துணரும் உண்மைகளை வாதிக்கவும், விவாதிக்கவும் செய்யும் போது தெளிவுகள் உண்டாகின்றன. இந்த தெளிவுகளின் தொகுப்பே ஞானம் ஆகிறது. இவ்வாறு கிடைக்கும் ஞானத்தை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் போது ஏற்படும் தெளிவுகள் மெய்ஞானத்தை உருவாக்குகிறது. இந்த மெய்ஞானம் எல்லையற்று விரிந்து பரந்திருக்கும் பேரருள் பாகுபாடில்லாது எங்கும் வியாபித்திருப்பதை உணர்த்துகிறது. இந்த மெய்ஞானம் உணர்த்தும் பேரருளான இறைநிலையை அடையும் பயணமே ஞானமார்க்கம் அல்லது ஞானயோகம் ஆகிறது. இந்த ஞானத் தேடலின் முடிவில் இறையோடு இரண்டறக் கலந்த பேரானந்த நிலைக்குச் செல்வதே முக்தி என்கிறோம். சித்தர்கள் இதனை சித்தி நிலை என்கின்றனர்.
சித்தர்கள் என நாம் அறியும் அநேக மேன்மக்கள் இத்தகைய ஞானத் தேடலையே முன் வைக்கின்றனர். இதன் பொருட்டே அவர்கள் வெகுசன வாழ்வியலில் இருந்து விலகியவர்களாகவோ அல்லது விலக்கப் பட்டவர்களாகவோ இருந்தனர். சடங்குகளின் வழியே இறைவனை எவ்வாறு அடையமுடியும் என்பதை பலவாகிலும் கேள்விக்குள்ளாக்கினர். அந்த கேள்விகளுக்கான பதிலையும் தங்கள் பாடல்களின் முன் வைத்தனர். இதற்கு கணக்கிலடங்கா உதாரணங்களை பட்டியலிட முடியும். எனினும் இன்று சிவவாக்கியரின் ஒரு கேள்வி பதிலோடு இந்த பதிவை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே
- சிவவாக்கியார்.
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே.
- சிவவாக்கியார்.
தற்காலத்தில் நாத்திகம் என்னும் சொல்லின் பொருளும் அது முன்வைக்கும் அரசியலும் வேறு தளத்தில் இயங்குபவை. அவை எமக்குத் தேவையில்லாதது.
Post a Comment
23 comments:
அதே சித்தர்கள் தானே பழனி முருகன் சிலையையும் செய்து வைத்தார்கள்?
இனியதொரு பதிவினுக்கு மகிழ்ச்சி..
வாழ்க வளமுடன்..
குரு அருள் துணை!..
உண்மைதான்.
நாஸ்தீகம் இல்லாமல் ஆஸ்தீகம் இல்லை. ஒரு கேள்வி இருந்தால் தான் அதற்கான விடையோ இல்லது விடை தேடும் முயற்சியோ பிறக்கும்
நன்று
எனக்கும் இதே சந்தேகம்தான் வெகுநாட்களாக.. தெளிவாக விளக்கம் சொல்லியுள்ளீர்கள்.
Nice Post. Thank You
Good Information
தங்களது தகவல்கள் சித்தர்கள் பற்றிய தேடலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது தோழி.
தங்களது தகவல்கள் சித்தர்கள் பற்றிய தேடலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது தோழி
அருமையான பதிப்பு! ஆனால் நாஸ்திக் என்பது மறுவி நாத்திகம் வந்தது என்று கூறுவது ஏற்புடையது அல்ல. கல் தோன்றா காலம் முன் தோன்றிய மூத்தகூடி தமிழ் கூடி.
பலனுள்ள பல தகவல்களை,வாஞ்சையுடன் இணையத்தில் வழங்கி வரும் தோழிக்கு வாழ்த்துக்கள். இந்த பாடலுக்கான வெளிரங்கம் மற்றும் அந்தரங்க விளக்கத்தை நீங்கள் எழுத வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழி தங்களது படைப்புகள் சிலவற்றை படித்தேன், ஆழ்ந்த கருத்துகள் சிறந்த ஆய்வுகள், சிலவற்றில் எனக்கு எதிர்மரை கருத்துகள் உண்டு.
1. வினாயகர் பற்றி தங்கள் கருத்தை ஒப்புக்கொள்ளயிலாது.
2. தாய் தமிழ் சொல், எழுத்து இலக்கணப்படி, வடமொழி எழுத்துக்களான ஷ, ஷரி போன்ற எழுத்துகளை நம் சித்தர்கள் பயன்படுத்த வாய்பில்லை.
thank you
Means god within you worship the power within you it is up to find within you temple worships are initiate our spiritual power watch what happens to while worship
ythghd hd
சித்தர்கள் போதிக்கும் தியான முறைகள் குறித்து தாங்கள் எழுதிட வேண்டுகிறேன்.
There are two types of believes,that's are existing and nonexisting.But still we are seeing The Full moon and New moon means that planets are revolving in its owns orbits and directions till now,why and how.Who is directing the Cosmos,Universe,milky way galaxy,Solar system and planets.A cinema film can not complete without a director, but some director not yet known the fact as one universal director needs to direct THE UNiVERSE.
Your universal soul loving friend,
Seshya urpfr.org
அன்புள்ள தோழி! தங்களின் பதிவுகள் ஒவ்வொவொன்றும் சித்தர்களின் மீதான மரியாதையை அதிகரிக்கிறது , அவர்களை பற்றிய தெளிவையும் வழங்குகிறது. ஆஹா! எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர்கள் தங்கள் மெய்ஞானத்தால் கண்டறிந்து தெளிந்தவற்றை, நமக்கு அவர்களின் குறிப்பு எனும் பொக்கிஷம் நிரூபிக்கிறது..அவர்கள் அன்றே அறிந்த உண்மையைத்தான் இன்று நாம் விஞ்ஞானம் என்னும் பெயரில் தேடி கொண்டிருக்கிறோம்..என்னை பொறுத்த மட்டில் நம் சித்தர்கள் அன்றைய விஞ்ஞானிகள்...ஆனால் மெய்ஞானத்தை உணர்ந்த, இயற்கையையே தெய்வமாக போற்றி (நாமும் இயற்கையே), அதனை மதித்து மகா சக்தியாகிய இந்த பிரபஞ்சப சக்தியில் ஒன்றாக கலந்தவர்கள்...
என் சிந்தனையில் தோன்றியவை
ஒரு அனு உருவாக தேவையான ப்ரோட்டான்,எலக்ட்ரான்,நியூட்டரான். இம்மூன்றும் முறையே, பிரம்மா, விஷ்ணு,சிவனாக நான் கருதுகிறேன்..ஏனெனில் இம்மூன்றும் இன்றி எந்த அணுவும் இல்லை ..(அவனன்றி ஒரு அணுவும் அசையாது). இந்த பிரபஞ்சம் முழுதும் ஆக்கிரமித்து கொண்டுள்ள சக்தி இதுவே..அதுவே மரம்,செடி, கொடிகள்..அதுவே அணைத்து விலங்கினம்,மனித விலங்காகிய நாமும் அதுவே...என்பது என் எண்ணம்...இப்படியும் யோசிப்பதுண்டு...இந்த பூமியின் மூலாதாரம் சிவனாக கொண்டால் (சிவனை சிவந்தமேனியன்,ஜோதியின் வடிவானவன் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்)அது போல் இன்றளவும் பூமியின் மையத்தில் வெப்பம் தீப்பிலம்பு ஆக்கிரமித்து கொண்டுள்ளது...அழிக்கும் சக்தி , சூழ்ந்த கடலானது விஷ்ணு,(நீல நிறமானவன்) காக்கும் சக்தி . எங்கும் நிறைந்து உயிர் பிழைத்து இருக்க காரணியான வாயு எ காற்று பிரம்மன் ஆக்கும் சக்தி. இயற்கையே இறை,இயற்கையே அனைத்திலும் மேலான சக்தி, அந்த இயற்கையை கையாள தெரிந்தவன், அடக்க தெரிந்தவன் தெய்வம் அல்லது இறை என்ற நிலையை அடைவான் என்பது திண்ணம். பிரபஞ்ச சக்தியை கையாள, அதனை வசப்படுத்த முதலில் நாம்(இயற்கையின் உச்சக்கட்ட பரிணாம வளர்ச்சி) நம்மை ஆள தெரிந்துகொள்ள வேண்டும் ,நம்மை நாம் வசப்படுத்த வேண்டும்....நம் ஐம் புலன்களை அடக்கி நம்முள் உள்ள சக்தியை ஒரு சேர திரட்டினால் நம்மை நாம் ஆல்வதோடல்லாமல் , இப் ப்ரபஞ்சத்தையும் ஆளலாம்...என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை...நன்றி...(இது என் தனிப்பட்ட நம்பிக்கை..தவறு இருப்பின் பொறுத்தருளவும் ...
Thozhi sithargal patriya ungal pathuugaluku migaum nandri
Migaum nandri
நீங்காத தாங்க முடியாத சைனஸ் பிரச்சனை க்கு தீர்வு ,solluinga pls pls pls pls
அருமையான விளக்கம்
பக்தியின்தொடக்கம் தொடக்கம் குழந்தைகளுக்காக.முக்தியில் அடங்குது பெரியவர்களாக!.
Post a Comment