நூலால் கண்ணாடியை அறுக்கும் ஜாலம்

Author: தோழி / Labels: ,

இதெல்லாம் சாத்தியமா, அல்லது வெறும் கற்பனையா என எண்ண வைக்கும் செயல்களையே "ஜாலம்" என்கிறோம். சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே இத்தகைய ஜால வித்தைகள் பலவும் அருளப் பட்டிருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் முடிவில்லாத ஒன்று. ஆர்வமும், நேரமும் உள்ள எவரும் இந்த ஜால வித்தைகளைப் பற்றி ஆய்ந்தறியலாம்.

சித்தர் பெருமக்களின் ஜால வித்தைகளைப் பற்றிய சில தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அவற்றை வாசிக்கலாம். 

முந்தைய பதிவொன்றில் நூலினைக் கொண்டு இரும்பை அறுக்கும் ஒரு ஜாலம் பற்றி பார்த்தோம். அந்த வரிசையில் இன்று நூலினைக் கொண்டு கண்ணாடியை அறுக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்தத் தகவல் போகர் அருளிய "போகர் ஜாலவித்தை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல். அந்தப் பாடல் பின்வருமாறு...

கனத்தநல்ல கண்ணாடி யறுப்பதற்கு
கண்மணியே ரவையுமல்ல கல்லுமல்ல
வனத்தினிலே இருக்குமுடுக் கிலைதானப்பா
வண்மையா யதினுடைய ரசத்தைவாங்கி
இனத்துடனே வெள்ளை வுண்டை நூலைவாங்கி
இண்டான ரசத்தினிலே தோய்த்துர்த்தி
கனத்துடனே சனங்களுக்கு காட்டி நூலாம்
கண்ணாடி தனையறுக்கத் துண்டாய்ப்போமே.

முடுக்கி இலையின் சாற்றினை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதில் வெள்ளை உண்டை நூலை நன்கு ஊறவைத்து, நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த நூலைக் கொண்டு  கண்ணாடி அல்லது கண்ணாடி புட்டியை அறுத்தால் இரண்டு துண்டுகளாகி விடும் என்கிறார் போகர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

துரை செல்வராஜூ said...

அன்பின் சகோதரி.. தாங்கள் நலமா!..
நலமே நாளும் விளைக!..

ரூபன் said...

வணக்கம்

உண்மையில் அறியாத அதியம்.. கண்ணாடியை வெட்ட நவீன காலத்தில் எவ்வளவு கட்டர்கள் வந்து விட்டது. இது ஒருஅதியம்...பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

k kamal said...

hi how r u ?
how is ur health
nice information.
in ur old post mayamai marvathu eppadi athil vennai enbathu ethai kurrikkum?

SANGAMES said...

Dear friend are u alright now
Thanks for return to the blogger
And what is mean வெள்ளை உண்டை நூல்

SACHIN tendulkar said...

Hello Thozhi! Please If you could write about Siddha's Solutions for Long term Rhuematoid Arthritis. It will be very Useful! pls consider this!

SACHIN tendulkar said...

தோழி தயவு செய்து நாள்பட்ட மூட்டுவாதம் குணமாக சித்தர்கள் ஏதும் வழிமுறைகள் அருளியிருக்கிறார்களா? என்று தேடிபார்த்து! பதிவிட முடியுமா? மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

kimu said...

@SACHIN tendulkar

Contact
Dr. ANBUGANAPATHY, SIDDHA DOCTOR
9444988059
SUKAM CLINIC,
VELACHERY
CHENNAI

S.Chandrasekar said...

"வனத்தினிலே இருக்கும் உடுக்கிலை தானப்பா" என்று பதம் பிரித்து பொருள் கொள்ள வேண்டும். உடுக்கிலை என்பது கருங்காலி மரத்தின் இலை. கருங்காலி (Acacia catechu) மரத்தை கோடலியால் வெட்ட இயலாது அதை ரம்பம் அறுக்கவேண்டும். அது அத்தனை வலிமை வாய்ந்தது.
நூல் உண்டை என்பது உருண்டை ஆகும்.

rajalakshmi paramasivam said...

உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் பாராட்டியுள்ளேன்.
இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_5.html

kumara said...

ஐயா வணக்கம்
எனக்கு ஒரு உதவி காகபுஜண்டர் வாதகொவை யும் போகர் 12000 வேண்டும் கிடைக்குமா தயவு செய்து பதில் அனுப்புங்கள்
rajakumaraa@gmail.com

Srini Vasan said...

Arumai

Jayaraman karur said...

sithar tharisanam unda ,sithar thathuvam enpathe ...ragasium kathal ...ithil ulla karuthugal ovvondrum oruoru pothagathirkum marupadum,thuvaitham vearanal athvaitham undu enna artham..yar param yar porul...

Rockboy Sooriya said...

Super

Nanda Kumar said...

Can u send me the link to download the book sithargalin rajiyam (original edition) to nanda.ae.cbeniet@gmail.com

Post a Comment