உறக்கமும் தேரையரும்... குறுந்தொடர் தொடர்ச்சி

Author: தோழி / Labels: ,

உலகின் மிகச் சிறிய உயிரினம் துவங்கி, மிகப் பெரிய உயிரினம் வரைக்கும் தூக்கம் மிகவும் அவசியமானது. இந்த நேரத்தில்தான் உடலின் உள்ளுறுப்புகள் தங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. 

நவீன அறிவியல் தூக்கத்தின் கட்டமைப்பினை ஐந்து படி நிலைகளாய் கூறுகிறது. இவை சுழற்சியாக செயல் படுகின்றன. இதன் படி முதலில் தூக்கமும், விழிப்பும் கலந்த நிலை. இந்த நிலையில் மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைகிறது. இரண்டாவது நிலையில் உடலும், மனமும்  விழிப்பு நிலையில் இருந்து நழுவி உறக்க  நிலைக்குச் செல்வது, இச் சமயத்தில் நமது உடலின் வெளிப்புற தசைகள் தளர்ந்து ஓய்வு நிலைக்குச் செல்லும். மூன்றாவது நிலை ஆழ்ந்த உறக்கம். இப்போது ஐம்புலன்களும் முழுமையான ஓய்வில் இருக்கும். நான்காவது நிலையில் நமது சுவாசம் குறைந்து, இதயத் துடிப்பும் குறைகிறது. சலனமில்லாத ஒரு ஆழ்ந்த உறக்க நிலை இது. ஐந்தாவது கட்டத்தில் மூளை விழித்துக் கொள்ளும் நிலை, இந்த நிலையில் உடல் அசைவற்று இருந்தாலும் மூளையின் விழிப்பு நிலையினால் கணவுகள் தோன்றும். கருவிழி இங்குமங்குமாய் அலைபாயும்.  
இனி,  நாம் தேரையர் பக்கம் வருவோம். தனது பதார்த்த குண சிந்தாமணி  நூலில் உறங்குவதற்கான விரிப்புகள் துவங்கி தலையணை வரைக்கும் விரிவாகக் கூறியிருக்கிறார். இன்றைய பதிவில் அத்தகைய சில தகவல்களை பார்ப்போம்.

தலையணை பற்றி பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

கழுத்திற்குத் தோளிற்குங் கண்ட வுயர்வாய்
வழுத்துநீ ளத்தில்வைத்த மட்டா-யிழைத்தநறும்
பஞ்சின் றலையணைக்குப் பானரம்பு நன்குறும்போ
துஞ்சின் றலையணைக்கு மூர்.

கழுத்துக்கும் தோளுக்கு நடுவில் அமைவதாகவும், அளவான உயரமும், தேவையான  நீள  அகலத்தில் இருக்க வேண்டும் என்றும்  இலவம் பஞ்சினைக் கொண்டு தைக்கப்பட்ட தலையணையின் மேல் தலையினை வைத்து வைத்துப் படுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.இவ்வாறு படுத்துக் கொள்வதால் கால் முதல் தலை வரையிலும் உள்ள அனைத்து நரம்புகளும் பிசகாமல் சமமாயிருக்குமாம். அத்துடன் தலை சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும் என்கிறார். 

அடுத்து தூங்கும் போது தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு தூங்க வேண்டும் என்கிறார். அந்த பாடல் பின் வருமாறு....

முக்காடிட் டங்கமுற்று மூடித் துயிலிலிரண்
டக்கிக்குந் தோட்கும் அதிபலமா – மிக்கான
சீதவெயில் தூசிபனி சீறிவர காற்றிவையா
லோதவரு துன்புமிலை யுன்.

தலைக்கு முக்காடிட்டு உறக்குங்தால் இரண்டு கண்களுக்கும், தோளுக்கும் அதிகபலம் உண்டாகுமாம். அத்துடன் சீதம், வெய்யில், தூசி, பனி, காற்று, இவற்றினால் எந்த துன்பமும் நேராது என்கிறார் தேரையர். ஆச்சர்யமான தகவல்தானே!

பகல் உறக்கத்தை தவிர்க்கச் சொல்லும் தேரையர். பகலில் உறங்குவதால் பல்வேறு உடல்நலக் குறைவுக்கு ஆளாகிடுவோம் என்கிறார். அதிலும் மருந்து உட்கொள்வோர், பத்தியம் இருப்போர் பகலில் தூங்கினால் ஏற்படும் பாதகங்களை பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

அண்டவங்கி யுண்டவுறை யங்கியரும் பத்தியத்தா
லண்டவங்கி மூன்றோ டனந்தலது-கொண்டவங்கி
கூடுங்கா னேத்திரநோய் கூடு மிரத்தபித்தம்
நீடுங்காண்-விந்துநீ ராம்.

மருந்து உண்பவ்ர்கள் பகலில் உறங்கினால், உட்கொண்ட மருந்தின் வெப்பம், சூரிய வெப்பம், உணவுக் கட்டுப்பாட்டினால் ஏற்படுகின்ற வெப்பம் ஆகிய மூன்று  மூன்று வெப்பத்துடன் பகல் உறக்கம் கொள்வதினால் ஏற்படும்  வெப்பமும் சேரும் போது  கண் தொடர்பான நோய்களும், ரத்த பித்த நோயும் அதிகரிக்குமாம். அத்துடன் விந்து நீர்த்துப் போகும் என்கிறார்.

அடுத்த பதிவில் எந்த வகையான படுக்கையில் உறங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்கிற தேரையரின் தெளிவுகளோடு சந்திக்கிறேன்.Post a Comment

21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்கள் அறிந்தேன்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

நன்றி...

S.Puvi said...

Super & Thanks

கர்ம யோகி said...

நன்றி!!

sada gopal said...

thank you

sada gopal said...

thank you

Suresh Srinivasan said...

Very nice. An un-related query: do you have the Gayatri mantras for Kaka Bujandar, Siva Vakkiyar and Suka brahma rishi? If so, request you to kindly share. Thanks

Ramaraj said...

Useful information. Thanks!

Pn s said...

tharithiram theera mandiram unda

Pn s said...

tharithiram theera mandiram unda

Pn s said...

hai u web is nice.thank u
tharithiram theera mandiram unda

Vignesh Devalaru said...

கர்பூரம் போன்றே எரியும் வஸ்த்து எதாவது உள்ளதா. அப்படி இருந்தால் அதை பூஜைக்கு பயண்படுத்தலாமா?

Karthi Vivek said...

முலிகை வைத்தியம் பற்றிய தகவல்கள் எனக்கு தேவை எவ்வாறு பெருவது

Karthi Vivek said...

முலிகை வைத்தியம் பற்றிய தகவல் தேவை.
உதவுங்கள்

Sugi Alagar said...

pls tell me the Natural remedy for Folicule growth

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Chandhra mouly said...

நல்லதொரு தவல்கள் தினமும் தங்கள் வலைப்பதிவு பதிவிற்கு நுழைகிறேன் மிகுந்த ஆர்வக்களுடன் ஏப்ரல் பதிவிற்கு காத்திருக்கும் எல்ல தோழர்கள் உடன் நானும் நமசிவய நன்றிகள் தோழிக்கு

vaithi lingam said...

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/q71/s720x720/1486604_452033854942253_3012392782401111978_n.jpg

vaithi lingam said...

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/q71/s720x720/1486604_452033854942253_3012392782401111978_n.jpg

Ramkumar Kalyani said...

Good

Swaminathan Nedumaran said...

good very good

Post a Comment