உறக்கமும் தேரையரும்...குறுந்தொடர் நிறைவுப் பகுதி

Author: தோழி / Labels: ,

நாம் உறங்க பயன்படுத்தும் படுக்கைகளினால் விளையும் பலன்களைப் பற்றி தேரையர் விரிவாக கூறியிருக்கிறார். அந்த வகையில் இந்த நிறைவுப் பகுதியில் குறிப்பிட்ட சில படுக்கைகளை பயன்படுத்துவதால் விளையும் நன்மை தீமைகளைப் பற்றி  பார்ப்போம்.

இலவம்பஞ்சு மற்றும் பருத்திப்பஞ்சினால் ஆன படுக்கையினால் ஏற்படும் பலன்..

இலவம்பஞ் சுப்படுக்கைக் கேகுமுட் சூடும்
அலர்பருத்திப் பஞ்சி னனைக்கோ-உலவிரத்தம்
விந்திவைக ளைப்பெருக்கு மேல்விரக முண்டாக்குங்
குந்துசுரத்தையழிக் கும்.


இலவம் பஞ்சினால் ஆன படுக்கையில் உறங்கினால் உட்சூடு நீங்குமாம். மேலும் பருத்தி பஞ்சினால் ஆன படுக்கையில் தொடர்ந்து உறங்கி வந்தால் இரத்தம், விந்து, காமம், இவைகள் பெருகுவதுடன் சுரமும் நீங்கும் என்கிறார்.

ரத்தனக் கம்பள படுக்கையினால் ஏற்படும் பலன்..

பஞ்சவன் னஞ்சேர் நற்கம் பளத்தருஞ் சலவை தோட
விந்திடும் பித்தந்தாது விருத்தியுண்டாகுஞ் சீதம்
அஞ்சிடுங் கோபவையம் அலைந்திடும் பாண்டுவோடு
நஞ்சுகளெல்லாந் தீரும் நலம்பெரு முஷ்ணாமே.


வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை, கறுப்பு ஆகிய நிறங்களில் ஏதேனும் இரு நிறங்களைக் கொண்ட ரோமங்களால் நெய்த ரத்தின கம்பளத்திற்கு சீதள தோஷம், பாண்டுவீக்கம், அனைத்து வகை விஷங்கள் ஆகியவை நீங்குமாம். அத்துடன் பித்தமும் தாது விருத்தியும் உண்டாகுமாம். ஆனால் இத்தகைய படுக்கை அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும் தன்மையுள்ளது என்கிறார்.

தாழம்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..

தாழம்பாய் வாந்தி தலைசுற்றல் பாண்டுபித்தம்
ஆழஞ்சேர் நீராமை யாம்பிணியும்-வீழுந்தண்
ணீரிழிவும் போக்குமிக நேசித்த வர்குலத்திற்
காரிழியுங் கூந்தன்மினே காண்.


தாழம்பாயில் உறங்குபவர்களுக்கு வாந்தி, தலைசுழற்றல், பாண்டுரோகம், பித்த தோஷம், நீராமைக் கட்டி, வெகுமூத்திரம், நீரழிவு ஆகியவை நீங்கும் என்கிறார்.

கோரைப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..

கோரையினபாய் தற்குணமாய் கொள்ளுமனல் மந்தமறுங்
கூரறியதேகங் குளிர்ச்சியுறும்-பாருலகில்
நன்னித் திரைகூடும் நாடா துருட்சையிவை
யுன்னிப் புவியி லுரை.


கோரைப்பாயியில் உறங்குபவர்களுக்கு அக்கினி மந்தமும், சுரவேகமும் நீங்குவதுடன் உடல் குளிர்ச்சியும் சுகமான உறக்கமும் கிட்டும் என்கிறார்.

சாதிப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..

சாதிப்பாய் சீதளமாஞ் சாருமிக னான்முற்றும்
பேதிக்குட் சீதம் பிசருங்காண்-வாதிக்குஞ்
சீதசுரங்காணுஞ் சிரசு மிகக்கனக்கும்
ஏதமிகு நோயர்க் கிசை


சாதிப்பாயில் உறங்குவதால் மூலரோகம், சீதமலபேதி, சீதசுரம், சிரோபாரம் இவைகள் உண்டாகுமாம். இதனால் சாதிப்பாயில் உறங்குவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.

பேரிச்சோலைப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..

பேரீச்சுப் பாயினிதம் பேரா துறங்குவர்க்குப்
பாரித்த குன்மம் பறக்குங்காண-பூரித்த
வீக்கமறுந் தீபனமா மெய்யைவெளுப் போடிண்ண
மாக்கிவிடு மென்றே யறி


பேரீச்சோலைப்பாயில் உறங்குவதால் வாதகுன்மமும், சோபையும், வீக்கங்களும் நீங்குவதுடன் பசி, பாண்டு, உஷ்ணாதிக்கம் ஆகியவை உண்டாகுமாம்.

சிற்றீச்சோலைப்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..

சிற்றீச்சுப் பாயிற் றினமும் படுப்பவருக்
குற்றிடுமே காந்த லுடம்புலருஞ்-சுற்றியதோர்
வாயுவறும் பித்தமறும் வற்றுங் கபந்தீருந்
தாயகமா மிக்குணத்தைச் சாற்று


சிற்றீச்சம்பாயில் உறங்குவதால் உஷ்ணமும் உடல் வலுவும் உண்டாகுமாம் அத்துடன் ஆவிருவாதம், அதிகபித்தம், கபம் ஆகியவை நீங்கும் என்கிறார்.

மூங்கிற்பாயில் உறங்குவதால் ஏற்படும் பலன்..

நீர்க்கடுப்பு மெத்தவுறி நீடுபித்த மும்பெருகு
மார்க்கு மனல மதிகரிக்கும்-பார்க்குளுறை
கோங்கி னருப்பிணைய கொங்கை மலர்த்திருவே
மூங்கிலின் பாய்க்கு மொழி.


மூங்கிற்பாயில் உறங்குவதால் மூத்திரக்கிரிச்சரம், பித்தகோபம், அதிக உஷ்ணம் ஆகியவைகள் விருத்தியடையுமாம். இதனால் மூங்கிற்பாயில் உறங்குவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.

மலர்ப்படுக்கையினால் ஏற்படும் பலன்..


தீபாக் கினிதழையுந் தின்றமருந் தாலெழுந்த
தாபாக் கினியுந் தணியுங்காண்-யாபார
நட்புவரும் விந்தூறும் நாளுமுட லஞ்செழிக்கும்
புட்பவணைக் கென்றே புகல்.


முல்லை மல்லிகை முதலிய மலர்களினால் ஆன படுக்கையில் உறங்குபவர்களுக்கு பசி, போகத்தில் ஈடுபாடு, சுக்கில விருத்தி, உடல் செழிப்பு ஆகியவை  உண்டாகுமாம் அத்துடன் மருந்து உட்கொள்வதனால் ஏற்படும்  உடல் உஷ்ணமும் நீங்கும் என்கிறார்.Post a Comment

18 comments:

Unknown said...

அருமை நன்றி !!!!

sankar said...

Use ful plz update frequently mam

sankar said...

Thank u plesse update frequently mam
regards
shankarkaranarayanan

Unknown said...

I am eagerly waiting for your next post. Plz do it my dear friend Thozhi

Ram Venkat said...

சகோதரி,

குறட்டையை விட்டொழிக்க‌ தேரையர் ஏதேனும் சொல்லி உள்ளாரா?

இரா.வெங்கடெஷ்

துரை செல்வராஜூ said...

அன்பின் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!..

Unknown said...

please post the preparation Panchalavana parpaam

Senthil.K said...

யோக தன்டம் எந்த மரத்தினால் செய்ய வேண்டும்,நிள அளவு எப்படி இருக்க வேண்டும்.அதை எப்படி பயன் படுத்துவது என்ற விலக்கம் தந்தால் உதியாக இருக்கும்.

Senthil.K said...

அகத்தியர தியானம் மற்றும் கருவூரார் (உடல் ஆரோக்கியம் நிலைக்க மந்திரம் உதவும் "ஓம் சங்கு உருள நசி சக்கரம் உருள மசி சிக்கு பிணி பீடை நசி சுவாகா") செய்து வருகிறேன்.சந்தி வேலை தியானம் நாசி வரை கை உயர்த்தி உறுத்திராட்ச மாலை பிடிக்க கை வலிக்கிரது.சொர்ண வயிரவரின் மந்திரம் எந்த திசை பார்த்து சொல்ல.யோக தன்டம் எந்த மரத்தினால் செய்ய வேண்டும்,நிள அளவு எப்படி இருக்க வேண்டும்.அதை எப்படி பயன் படுத்துவது என்ற விலக்கம் தந்தால் உதியாக இருக்கும்.
senthil27ece@gmail.com

Senthil.K said...

whole body gets completely locked while i am conscious

Senthil.K said...

kodaana kodi nanri.ungal pathivugalal pizhaitha oruvan.

senthil27ece@gmail.com

Senthil.K said...

தோழி,
சித்தர்கள் நித்திய பஞ்ச சுத்தி முறைகள் - குடல் சுத்தி ,தந்த சுத்தி,பற்றி சொன்னா நன்றாக இருக்கும்.
நன்றி.

Senthil.K said...


நன்றி தோழி அவர்களே...

Senthil.K said...

hi thozhi,i know in all your posts you have not told the something important that completes the yantra,dhyana except for the guru dhyana (various siddha mantras) right. i am going to do that dhyana alone.thank you very much.if not for your site i would not have gotten the method or even the thought the guru is essential for sadhana.

Senthil.K said...

hi thozhi.
Guru dhyana (various siddha mantras). i am going to do that dhyana alone.thank you very much.if not for your site i would not have gotten the method or even the thought the guru is essential for sadhana. my mail id is senthil27ece@gmail.com,i have sent you a lot of mails,but i know that you inbox will be filled with thousands of emails so reading mine might not be possible,kindly mail me your thoughts & guidance.

can you post something like a mantra that will make your character and thoughts good and also make you eligible for you to become a siddha,because without good character and thoughts climbing the mountain of siddha will make fall down flat on the ground even when you have reached for the top without good character.
,for e.g thirunetru palan mantra.i know for sure that vallavanaka irupathai vida nalavanaga irupathe better.
kindly help me if you can and i posted this comment as way to communicate with you,so kindly dont post my comment.
thank you

KKR said...

Plastic or fiber mat sleep?
Hybrid fiber bed sleep?
any comments or correlation.

Unknown said...

sri Iya said....
இறைஅருள் துணை நிற்கும்.எல்லாம்வல்லதிருமுருக பெருமான் அருள் புரிய பிரார்த்திகிறேன்.

Unknown said...

எல்லாம் வல்ல மொண்ட்ரியல் திருமுருகபெருமான் துணை புரிவர்.

Post a comment