இந்த ஆண்டின் முதல் மின்நூல்

Author: தோழி / Labels: ,

நண்பர்களே,

சித்தர் பெருமக்கள் அருளிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியின் பதினேழாவது படைப்பாக நந்தீசர் அருளிய "நந்தீசர் அஷ்டமா சித்தி 05” என்கிற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன். ஆதி குருவான சிவனின் நேரடி சீடராய் போற்றப் படுபவர் நந்தீசர். திருமூலரின் குருவாக அறியப்படும் இவர், நந்தீசர் தேவர்சஞ்சை ( பித்ரு தேவரின் மகள் ) என்பவளை மணந்தாக குறிப்புகள் காணக்கிடைக்கிறது.இவரது சமாதி திருவாவடுதுறையில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

இச் சிறிய நூலில் லிங்க சுத்தி முதல் அகார உகார மகார சேர்க்கை பற்றி நந்தீசர் விளக்கியுள்ளார்.  

தமிழ்  அறிந்த அனைவரும் படித்து இன்புற வேண்டும் என்கிற நோக்கில் இந்த அரிய நூலினை மின் நூலாக தொகுத்திருக்கிறேன். தமிழர்கள் அனைவரும் போற்றி பாதுகாத்திட வேண்டிய பழமையான நூல்களில் இதுவும் ஒன்று. எனவே இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் தாங்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருடன் இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நண்பர்களே!,தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல....

எனது மேலான குருவினை பணிந்து இந்த நூலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


முந்தைய மின்னூல் படைப்புகளை தரவிறக்க...

என்றும் நட்புடன்,

தோழி..

தொடர்புக்கு

siththarkal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

valli said...

AGATHIYAR TEMPLE
Dear Thozhi,
வணக்கம். இங்கு MICHIGAN / USA என்ற இடத்தில் உள்ள Dr ரவிக்குமார் என்பவர் பாபநாசம் அருகே உள்ள கல்யாண தீர்த்தத்தில், அகத்திய பெருமானுக்கும் லோபமுத்ரா அன்னைக்கும் ஒரு சிறிய கோவில் ஒன்று எழுப்பி வருகிறார். (கோவில் என்றால் கட்டடம் போல் அல்ல. ஒரு தேர் அமைப்பு போல. அதில் ஸ்வாமிகளை எழுந்தருள பண்ணி இருக்கிறார்.) இன்னும் பணி முழுவதும் முடியவில்லை. வரும் FEB-15th அன்று கணபதி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம் நடத்தவிருக்கிறார். எல்லோரும் இதில் பங்கு பெறலாம். தங்களுடய பெயர் நட்சத்திரம் இவைகளை கொடுத்தால் சங்கல்ப்பம் செய்து கொள்ளுவார்கள். கட்டணம் எதுவும் இல்லை. இதற்காக இணய தளம் ஒன்றை வடிவமைத்து உள்ளார். முகவரி(URL) கீழே உள்ளது. தயவு செய்து இந்த செய்தியை தங்கள் இணய தளத்தில் போட்டால் பலரும் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் உங்களுக்கு அனுப்பி உள்ளேன்.
URL follows:
http://sriagathiyarlopamudratemple.com/news_announcement.html
Please spread the word to the world Madam. Thank you so much. Valli

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவிறக்க செய்கிறேன்... மிக்க நன்றி...

வாழ்த்துக்கள்...

கர்ம யோகி said...

தாங்கள் மேற்கொள்ளும் அளப்பெரிய பணிக்கு,வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

S.Puvi said...

Thank Q

Jaya Raj said...

plz post to remove accidental scars

S.Chandrasekar said...

மின்னூலுக்கு நன்றி தோழி.

இன்றைய தேதியில் உலகமே 'போகர்-12000' நூலை தேடி வருகிறது. பழனியில் எங்களுக்குத் தெரிந்த ஒரு சித்த குடும்பத்திடம் (ராமதேவர் @யாகோபு சந்ததி) சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் போகர் பனிரண்டாயிரம் நூலின் கைபிரதி இருந்தது. அதை அப்போது திரு.கிருஷ்ணமூர்த்தி என்ற வைத்தியர் வாங்கிப்போய் துப்புரவாக எழுதிவிட்டு தருவதாய் சொன்னவர் தான். பின்னாளில் தன் பணத்தேவைக்கு அதை சிலோனில் யாருக்கோ நான்காயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக சொன்னாராம்.

சமீபத்தில் வெளியான 'போகர் 7000 - விளக்கவுரை' (LEO Books, Chennai) நூலை எழுதும்போது யாகோபு வம்சாவளி குடும்பத்து அம்மையார் இதை என்னிடம் சொன்னார். தானே அப்பிரதியை வாசித்தது நினைவிருக்கிறதாம். அந்நூல் சித்த குடும்பத்துவசம் இத்தனைகாலம்தான் இருக்கவேண்டும் என்று உள்ளது போலும்.

mani kandan said...

நன்றி தோழர்

mani kandan said...

Thankyou

WebPrabu said...

Thank you

Kumaravel Vel said...

Naadi sothidam agathiyar paadalgal and vilakkam pathividungal

Kannan R said...

Please Register the Casual Language of Nandheesar Ashtama siddhi 05. It is Very useful for Unterstand All Followers.

Thank U and God Bless U Friend.

Jegan88 said...

Thanks thozhi

Post a Comment