கண் புரை குணமாக்கும் மருந்து!

Author: தோழி / Labels: , ,

நமது கருவிழியில் வெண்படலம் ஏற்படுவதையே கண்ணில் பூ விழுதல் என்கிறோம். இதனால் நமது விழித் திரையில் ஒளி ஊடுருவும் தன்மை குறைந்து பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை நமது முன்னோர்கள் பூ விழுதல், கண் திமிரம், கண்புரை, விழி புரை என பல்வேறு பெயர்களில் கூறியிருக்கின்றனர். ஆங்கிலத்தில் இந்த பாதிப்பினை கேட்ராக்ட் (cataract) என்று கூறுகின்றனர்.

நாற்பது வயதைக் கடந்தவர்கள், அதிகமான வெளிச்சத்தை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள், நீரழிவு பாதிப்புக்குள்ளானவர்கள், மற்றும் பரம்பரை கூறு காரணமாய் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவில் உடலில் புரதக் குறைபாட்டினால் ஏற்படுவதாய் நவீன அலோபதி மருத்துவம் கூறுகிறது. இந்த குறைபாட்டினை நிவர்த்திக்க மருந்துகள் எதையும் நவீன அலோபதி மருத்துவம் முன் வைக்கவில்லை, மாறாக அறுவை சிகிச்சையின் மூலம் பாதிக்கப் பட்ட விழித்திரையை நீக்கி விட்டு செயற்கையான வில்லைகளை பொருத்துவதே தீர்வாக முன்வைக்கப் படுகிறது.

தற்போது இத்தகைய அறுவை சிகிச்சைகள் எளிதாய் சில நிமிடங்களில் முடிந்து விடக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால் செலவு பிடிக்கக் கூடியவை, அரிதாய் சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படுவதுண்டு. நவீன மருத்துவம் இதுவரை மருந்துகளை பரிந்துரைக்காத ஒரு சூழலில் நம் முன்னோர்கள் இந்த பாதிப்புக்கு பல மருந்துகளை அருளியிருப்பது சிறப்பு. இது தொடர்பில் ஏற்கனவே ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று கண்புரைக்கு தேரையர் அருளிய ஒரு தீர்வினைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.

இந்த தகவல் கோரக்கர் அருளிய "ரவிமேகலை" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

பூவிழுந்த கண்ணுக்குமூலி கேளே
விள்ளுவேன் பூவிழுந்த கண்ணினோர்க்கு
விகற்பமற ஐந்தேழு ஒன்பதுநாள்
சள்ளையறக் கோவைச்சாறு சிரசிலூற்றி
சாரவே தேய்த்துப்பின் காண்கையாரைத்
தெள்ளிதமாய் பெருவிரல்கள் நகத்திலும்
தொல்லையற ஊற்றிடவே பூவும்நீங்கும்
கள்ளமறக் கண்பார்வை தெளிவாய்த் தோன்றும் 

கோவை சாறு எடுத்து அதனை தலையில் விட்டு நன்கு தேய்த்த பின்னர், பெருவிரல் நகங்களில் ஊற்றிட வேண்டுமென்கிறார். இவ்வாறு தொடர்ந்து இருபத்தியோரு நாட்கள் செய்து வந்தால் கண்ணில் விழுந்த பூ அகன்று விடும் என்கிறார்.

எளிமையான அதே நேரத்தில் ஆச்சர்யமான தகவல்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

23 comments:

Unknown said...

Kovai charu seri ethu Kovai chedin chara? Illai kovai kayen chara? Athai appadi thayaripathu ? yevalavu neram thalail vaithirupathu ponta vivarangalai muzhuvathumaga thelivasa solalam illiya?

Unknown said...

கோவை சாறு என்பது கோவைக்காய் சாறு அல்லது கோவைக்காய் இலையின் சாறு என்பதாகுமா ?

Unknown said...

Kovi charuna athu ynna

Unknown said...

தோழி,

பயனுள்ள தகவல் மிக்க நன்றி!!!

Dinesh Nataraj said...

நான் உங்களிடம் பலமுறை கேட்ட கேள்வி இன்று பதிவாக !!! மிக்க நன்றி . எனினும் கோவைசாறு என்பது பழத்தின் சாரா?? அல்லது கோவை இலை சாரா??

விளக்கவும்....

முயற்சி செய்து பார்கிறேன்....

SSS said...

தோழி மாலை கண் நோய்க்கு மருத்துவம் கூறவும்........

தோழி said...

பாடலில் கோவச் சாறு என்கிற பதத்தினைத் தாண்டி வேறு விவரங்கள் இல்லை. கோவைச் சாறு என்பது கோவைச் செடியின் சமூலத்தில் இருந்தும் பெறலாம். கோவைச் செடியின் இலையினை அரைத்தும் பெறாலாம். கோவைக்காயை இடித்தும் சாறு பிழியலாம். கோவைப் பழத்தில் இருந்தும் சாறு எடுக்கலாம். எனவே கோரக்கர் குறிப்பிட்டிருக்கும் கோவைச் சாறு எத்தகையது என்பதில் எனக்கும் குழப்பம் இருக்கிறது. விவரம் அறிந்தவர்கள் விளக்கினால் நன்றியுடையவளாயிருப்பேன்.

S.Chandrasekar said...

அது கோவைக்காய் என்று பொருள்படுமாறு இருக்கும், ஆனால் எனக்கு புரிந்தவரை இது அது இல்லை. சித்தர்கள் பெரும்பாலும் unspecifiedஆக குறிப்பிடும் இந்த தாவரம் (கொல்லன்) கோவையாக இருக்க வாய்ப்புண்டு. அந்த கிழங்கு இஞ்சுபோல் இருக்கும், பேய்விரட்டி என்ற மறைபொருள் உண்டு. (முடி) நரை, (கண்) திரை போக்க இந்தச்சாறு உதவும் என போகர் கூறியுள்ளார். வேறு யாராவது இதைப்பற்றி விளக்கம் தருகிறார்கள என்று பார்ப்போம் .

Unknown said...

கோவைசாறு என்றாலே அந்த இலையினுடைய சாறு தான். 20,30 தலைகளை பறித்து கல்வத்தில் கொட்டி தனியாக சாறு பிழியாமல், கொட்டிய அந்த தழையோடு எடுத்து தலையில் பிழிந்து தேய்த்து கொண்டு, கை விரலிலும் பிழிந்து கொள்ள வேண்டும்.

kimu said...

@Malar Vizhi
மிக்க நன்றி

Unknown said...

useful site,good info,we can learn more,develop ourselves,Thanks

S.Chandrasekar said...

கோவக்காய் (coccinia) பெரும்பாலும் தோல், மூச்சு, காமாலை, நீரிழிவு, ரத்த கொதிப்பு சமபந்தமான, நோய்களுக்கு நல்ல பலன் தரும். ஆனால் கண் திரைக்கு கோவைக்காய் பற்றி போகர் எங்கும் சொல்லவில்லை. வேறு எங்காவது நூலில் சொன்னாரா என தெரியவில்லை.

போகர் விவரிக்கும் பாடல்களில் நான் ஆய்வு செய்த வரை (கொல்லன்) கோவையைபற்றி உயர்வான கற்பமாய் சொல்லியுள்ளார். அதன் சாற்றை தக்க விதத்தில் பயன் படுத்தினால் நரை திரை போக்கி, தோலை தள்ளி, தேகத்தை தூணாக்கும் என்கிறார். இது விலை அதிகம், நாட்டு மருந்து கடையில் சொல்லிவைத்து காத்திருக்கவேணும். மருத்துவம் மற்றும் மாந்திரிகத்திலும் பயன்படும்.

பல தாவரங்களுக்கு Alias name இருக்கும். அது சற்றும் தொடர்பில்லாத பெயர்களாக குழப்பும் என்பதால் சித்த வைத்திய அனுபவஸ்தர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வது நலம். Theory of doubts எப்போதுமே உண்டு. சமயம் கிடைக்கும் போது அதைப்பற்றி விரிவாகச சொல்கிறேன்.

நான் எழுதிய "போகர் 7000 (சப்தகாண்டம் ஒரு பார்வை)" என்ற சுருக்கமான நூல் வரும் பொங்கலுக்கு சென்னை புத்தக விழாவில் LEO Books (stall No.224) வெளியிடவுள்ளது.
இந்தப் புத்தகம் எழுதிய பின்னணி மிகுந்த ஆச்சரியம் கொண்டது, வாசித்தல் புலப்படும்

S.Puvi said...

நன்றி. இலைச் சாற்றினை கை பெருவிரலில் விடுவதா? கால் பெருவிரலில் விடுவதா என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும்

S.Chandrasekar said...

சந்தேகம் வேண்டாம், கை விரல்கள் தான். கை நகங்களுக்கும் தலை முடி மற்றும் கண் பார்வைக்கு தொடர்பு உள்ளது. ஓய்வு நேரத்தில் கைவிரல் நகங்களை மற்ற கை நகங்களோடு ஒன்றோடு ஒன்று உராய்த்துகொண்டு இருந்தால் முடி கருக்கும், கண்பார்வை பொலிவுபெறும், இரத்த நாளத்தில் ஓட்டம் முன்னேறும். பல மாதங்கள் செய்தால் இதன் பலன் தெரியவரும்.

N.G.JEGAN said...

Interesting sir, i will try now onwards..

Unknown said...

how to avoid low long sight problem

Unknown said...

வணக்கம் மாலைகண்ணுக்கு எனது உறவினர் ஒருவர் கோவை சாரின் மகத்துவத்தை பற்றி சொன்னார் .புது மண் சட்டியில் கோவை சாறு பிழிந்து அதில் ஆட்டு ஈரல் சிறுதுண்டுகளாக போட்டு கோவை சாறு சுண்டும் அளவுக்கு பிரட்டி சாப்பிட வேண்டும் ..........பத்தியம் (எண்ணெய் ,புளி ,உப்பு அன்று மட்டும் சாப்பிட கூடாது )
இது உண்மையா ......விளக்கம் அளிக்கவும்

Unknown said...

என் உறவினர் ஒருவர் மாலைகண்ணுக்கு வைத்தியம் ஒன்று சொன்னார் .ஒரு புது மண் சட்டியில் கோவை சாறு பிழிந்து அதில் ஆட்டு ஈரல் சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு சாறு சுண்டுகிரலவுக்கு பிரட்டி சாப்பிட்டால் மாலைக்கண் மற்றும் கண் பார்வை கோளாறு சரியாகிவிடும் என்று சொன்னார் ,இது உண்மையா ? செய்து பார்க்கலாமா (பத்தியம் அன்று முழுவதும் எண்ணெய் ,உப்பு ,புளி சாப்பிட கூடாது)

Vairamuthu KP said...

கொல்லன் கோவை - மாபெரும் சக்தி உடைய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், கொல்லன் கோவை என வேறு பல பெயர்களும் உண்டு. இருப்பினும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர்தான் முன்பு அனைவருக்கும் தெரிந்தபெயராக இருந்து வந்துள்ளது.

Ref:- http://analaiexpress.ca/அதிசய-மூலிகை-ஆகாச-கருடன்

செந்தில்குமரன்.இரா said...

பயனுள்ள விசயம் நன்றி

செந்தில்குமரன்.இரா said...

பயனுள்ள விசயம் நன்றி

Unknown said...

Yes, correct. No doubt. Thanks.

bhoopalan said...

தகவலுக்கு நன்றி.

Post a comment