போகர் அருளிய "கருநெல்லி" கற்பம்

Author: தோழி / Labels: ,

நெல்லி "Emblica offinalis" குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது மலைப் பகுதிகளில் வளரும் இயல்புடையது. தற்போது இவை சமவெளிகளிலும் பயிரிடப் படுகிறது. இவற்றில் அரி நெல்லி, பெரு நெல்லி என இரு வகைகள் உண்டு.

சித்தரியலில் நெல்லி மரம் ஆதி சிவனின் அம்சமாகவே கூறப் படுகிறது. முக்குற்றங்களையும் போக்கும் ஆற்றல் நெல்லிக்கு உண்டென கூறியிருக்கின்றனர். நெல்லி மரத்தின் இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை என எல்லா பாகங்களும் அரு மருந்தாய் பயன்படுகின்றன.

பெருநெல்லியின் ஒரு வகைதான் கருநெல்லி ஆகும். கருநெல்லி மரத்திற்கு செல்வ மரம் என்றொரு பெயரும் உண்டு. இது மிகவும் அரிதானது, மலைபிரதேசங்களில் மட்டுமே விளையக் கூடியவை. பலரும் நிணைப்பதைப் போல் இந்த வகை நெல்லிக்காய்கள் கருப்பாய் இருப்பதில்லை. அதே நேரத்தில் சந்தையில் கிடைக்கும் பெருநெல்லியின் அளவில் இருந்தாலும் இதன் நிறம் சற்றே மஞ்சள் பூத்த பசுமை நிறத்துடன் இருக்கும்.

இது எளிதில் கிடைப்பதில்லை. நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிடலாம். கருநெல்லி மற்றெந்த நெல்லிக்காய்களை விடவும் சிறப்பான மருத்துவத் தன்மை கொண்டவை. இத்தனை சிறப்புகள் வாய்ந்த எளிய கருநெல்லி கற்பம் ஒன்றினை இன்று பார்ப்போம்.

போகர் அருளிய "போகர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஏமமாங் கருநெல்லி மலைதோருமுண்டு
எழிதாகக் கிடையாட்டால் தேடிப்பெற்று
நாமமாம் நாற்பதுநாள் பாலிற்கொள்ளு
நமன்வந்து நாடாமல் நடுங்கிப்போவான்
தாமமாஞ் சட்டையெல்லாங் கக்கிப்போடும்
தங்கம்போல் மேனியுமாய்த் தளுக்காய்க்காணும்
ஆடவே கருநெல்லிப் போக்குச்சொல்ல
அரன்காணார் யாந்தானுங் கண்டிலேனே.

தினமும் கருநெல்லியை பாலுடன் சேர்ந்து உண்ண வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாற்பது நாட்கள் உண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறி, உடலானது  தங்கம்போல் மின்னும் என்கிறார். மேலும் எமன் கூட நெருங்க மாட்டான் என்றும் சொல்கிறார். இந்த கற்பமுறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.

மிகவும் எளிதான, மலிவான கற்பம். இதனால் உடலுக்குக்  கிடைக்கும் பலனோ மகத்தானது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

18 comments:

Unknown said...

தோழி,

இதுவரை பெரு நெல்லியைத்தான் கரு நெல்லி என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.
நல்ல வேளை விளக்கமாக கூறி விட்டீர்கள் மிக்க நன்றி !!!

கொழும்பில் எங்கு கிடைக்கும் என்ற விபரம் தந்தால் நன்றி உடையவனாவேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பயனுள்ள தகவல்... நன்றி...

S.Chandrasekar said...

அதியமான் அவ்வைக்கு கொடுத்த அதே நெல்லிதான். தேடினாலும் அக்கருநெல்லி கிடைக்காது. அதற்கு பதில் பெரிய நெல்லியை வாங்கி அதை விதை நீக்கியபின், பசும்பாலில் கொத்திக்க விடவேண்டும். ஆறியபின் அதை நிழலில் உலர்த்தி, சூரணமாய் பொடித்துக்கொண்டு அதில் ஒரு பாக்களவு எடுத்து தேன் விட்டு குழைத்து தினமும் உண்ண வேண்டும். மேலோட்டமாக பத்தியம் ஏதும் சொல்லாவிட்டாலும், உப்பு புளி தவிர்ப்பது நலம் . இல்லாவிட்டால் அதன் வீரியம் nullify ஆகிவிடும். நெல்லிமுள்ளி பச்சடியாக செய்து சாதத்துடன் உண்பது வேறு, மருந்தாக உண்பது வேறு, இருட்டு அறையில் தேகம் ஒளிவீசி மின்னும் என்று கூறியுள்ளார்.

"அதிசய சித்தர் போகர்" (Karpagam puthakalayam, chennai) என்ற என் நூலில் இவற்றை குறிப்பிட்டுள்ளேன்.

S.Chandrasekar said...

இடித்து சூரணம் செய்வது சிரமம் என்று தோன்றினால், பாலில் வெந்து காய்ந்த அந்த நெல்லி சுளைகளை ஒரு பாட்டிலில் போட்டு தேன் ஊற்றி ஊறவைத்து, தினம் ஒரு சுளை என்ற சாப்பிடவும்.

Unknown said...

super medican

Unknown said...


S.Chandrasekar,

விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.

Geetha Sambasivam said...

தினம் தினம் நெல்லிச் சாறு சாப்பிட்டு வருகிறோம். :)

sps said...

good information

Unknown said...

Vanakkam
ungaludaya pathivukalai entha valaithalathil padikalam.?

by prabhu
bondguyss007@gmail.com

Unknown said...

A

Bogarseedan said...

This is certainly not the normally available nellikaai. from the wording "malaiyil undu" it can even be something else which is black in colour and resemble shape of nellikaai but found on raised land. Needless to say these songs are not as straight forward as they appear.

S.Chandrasekar said...

ஆம், பார்பதற்கு புங்கன்கொட்டை/ நாவல் பழம் போல் இருக்கும் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததில்லை.உங்களுக்குக் கிடைத்தால் பத்திரப்படுதுங்கள்.

Свами Вишнудевананда Гири said...

I have a rare Siddha poems, where they write about Karunneli. They say that Karunelli not is Amla or plant or fruit They say that this is one of their names, the philosopher's stone. And the fools who sought in the jungle fruit blackberries died, and not understanding the hidden metaphors Siddhas.

Unknown said...

Thozhi ungalluku en anbana vanakagal uggal pathivugal annaithum arrumai. Nan ungal pathivugallai romba nanlagava padithu varugiren anaithum arrumai. Thozhi Ungalidum orru korikai ungalal mudithal Ennaku Bhogar 12000 nulai thayavu seithu mail annupugal Please en mail id siva.info42@gmail.com

naveenkumar said...

hi thizhi,

thinam oru karu nelli ilai oru karu nelliayai 40 natkala?

please explain

Prem said...

There is a temple in Tirutangal close to Sivakasi with Siva known as Karunellinathar. Large number of nelli trees are grown on this hillock.

Infertilitysolutions said...

karunelli enpathu gnana paripasai so neengal ninipathupol alla 9488472592

Infertilitysolutions said...

karunelli enpathu gnana paripasai so neengal ninipathupol alla 9488472592

Post a comment