பூட்டிய கதவைத் திறக்கும் ஜாலம்

Author: தோழி / Labels: ,

பூட்டிய கதவைத் திறக்கும் இந்த ஜாலம் போகர் அருளிய "போகர் 700" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. ஜால வித்தைகளின் உண்மைத் தன்மை மற்றும் அவை அருளப் பட்டதன் நோக்கம் தொடர்பில் பலருக்கும் பல்வேறு வகையான விமர்சனங்கள் உண்டு. நமது நோக்கம் தகவல் பகிர்வு மட்டுமே என்பதால், இந்த பதிவினை அந்த அளவில் மட்டும் அணுகிட வேண்டுகிறேன்

இனி போகரின் வரிகளில் தாழிட்ட கதவைத் திறக்கும் ஜாலத்தை பார்ப்போம்.

மறந்திடாது ஆதிவாரம் தன்னை ஓர்
   மைந்தனே கல்லெலியின் வளைதான் ஒக்கே
வளைநோக்கி ஆதிநாளிரவு தன்னில்
   மைந்தனே அவ்விடத்தில் சென்றே நீதான்
வளைதேடி தீபத்தை ஏற்றி வைத்து மறைந்து
   வாயிலே கவ்விக் கொண்டோடும் போது
வளைமூடி அடைத்திருந்த கற்கள் எல்லாம்
   மைந்தனே மேலோடிப் போமே

போமென்ற கல்லெலிதான் வெளியில் வந்து
   புகழ் பெரிய வேரதனைக் கக்கி வைக்கும்
ஆமென்ற இரை தேடி மேயப் போகும்
   அச்சமயம் தீபத்தை வெளியில் விட்டு
தாமென்ற வகைஎடுத்து சாம்பிராணியின்
   தனித் தூபம் காட்டி வேரதனைக் கொண்டு
காமென்ற தாள் பூட்டும் கதவின் முன்னே
   காட்டினால் தான் திறக்கும் புதுமைதானே

எலிகளில் மூஞ்சூறு, சுண்டெலி, பெருச்சாளி, வெள்ளெலி, கல்லெலி, சரெவெலி, வயல் எலி, வீட்டெலி என பல வகைகள் உண்டு. போகரின் இந்த ஜாலத்தில் குறிப்பிடப் படும் எலியின் பெயர் கல்லெலி என்பதாகும். இவை பெரும்பாலும் வயல் வரப்புகளில் வளை அமைத்து வாழக் கூடியவை. மற்ற எலிகளைப் போல் இல்லாமல் இவை  தங்கள் வளைகளின் வாசலை சிறு கற்களைக் கொண்டு மூடி இருக்குமாம். அதனலால் இந்த எலிகள் கல் எலி என அறியப் படுகிறது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை இரவில், கல்லெலியின் வளையைத் தேடிக் கண்டுபிடித்து அதன் அருகே ஒரு  தீபத்தை ஏற்றி மறைத்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டுமாம்.வளைக்குள் இருந்து இரை தேடி வெளியே கிளம்பும் கல்லெலியானது தன் வாயில் ஒரு மூலிகை வேரினை கவ்விக் கொண்டு கிளம்புமாம். வளையின் வாயிலை எலி நெருங்கியதும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கற்கள் எல்லாம் உருண்டோடி வளையின் வாசல் திறந்து கொள்ளும் என்கிறார்.

 வெளியில் வந்த கல்லெலி தன் வாயில் இருக்கும் மூலிகை வேரைக் கக்கி விட்டு இரைதேடிப் போய்விடுமாம். இந்த சமயத்தில் தீப ஒளியின் துணையோடு அந்த வேரைக் கண்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இந்த வேருக்கு சாம்பிராணித் தூபம் போட்டு  பூட்டியிருக்கும் கதவின் முன்னே காட்டிட  பூட்டியகதவு தானாக திறந்து கொள்ளும் என்கிறார்.

ஆச்சர்யமான ஜாலம்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பு தான்...

SANGAMES said...

Dear friend,
Greetings. Why do you not answering the mail questions.

Bogarseedan said...

amazing information. Thanks.

S.Chandrasekar said...

இதில் உண்மை இருக்கலாம். குறிப்பாக இந்த எலி குடும்பம், பூகம்பம் வருவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பாக தன் வளையை விட்டு வெளியே ஓடிவிடும். ஆனால் இவற்றை எந்த பொந்துக்குள் உட்கார்ந்து நாம் ஆராய்ச்சி செய்ய?

நான் எழுதய 'அதிசய சித்தர் போகர் ' (கற்பகம் புத்தகாலயம்) என்ற நூலில் பல ஜாலங்களை விளக்கியுள்ளேன். வரும் பொங்கலுக்கு நான் எழுதிய 'போகர் 7000' (லியோ புக்ஸ்) விளக்கவுரை சுருக்கமாக வெளியாகவுள்ளது.

இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய 'புத்தாண்டு வாழ்த்துக்கள்'. தோழியின் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

SANGAMES said...

Dear friends,
Greetings. Anyone have "Lord shiva sahasranamam in tamil" please send it.
Thank you.

தோழி said...

@SANGAMES

பெரும் விபத்து ஒன்றில் குருவருளினால் உயிர் தப்பினாலும், எனது முதுகெலும்பு, நெஞ்சுக்கூட்டு எலும்பு என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் கிடந்தவள், தற்போதுதான் எழுந்து நடமாடும் நிலைக்கு வந்திருக்கிறேன். இன்னமும் எனது இடது கை முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்ல்லை. சிரமத்தினூடே ஒரு கையினால் மட்டுமே பதிவுகளை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன். எனவே தற்போதைக்கு எந்த ஒரு மின்னஞ்சலுக்கும் பதில் அளிக்க இயலாத நிலையில் இருக்கிறேன்.

Unknown said...

தோழி,


தகவலுக்கு நன்றி!!!

தங்களின் பின்னூட்டத்தின் மூலம் தங்களின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது.
சிரமத்தின் மத்தியிலும்,நேயர்களுக்காக பதிவிட்டமைக்கு கோடி நன்றிகள்.
வெகு விரைவில் பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Unknown said...

eesan arul endrum ungaluku endrum irukum...thozhi.....viraivil nalamagi varuveergal.....

Unknown said...

thozhi enaku sivavakkiyar padargal romba pidichi iruku....aanaal naraya song meaning theriyala....so song with meaning book kedaikuma

Aruna said...

@S.Chandrasekar அய்யா, எனக்கிந்த புத்தகத்தை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முடியுமா, தபால் செலவினை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

Aruna said...

@S.ChandrasekarDear Chandrasekhar,

Would you please post me your books to Australia and I could pay for the postage. Please reply.

S.Chandrasekar said...

@Aruna
Dear Aruna,

Thanks for your interest. Please mail me your full address and contact details to chandruselva@gmail.com.

I will pass on the info to respective publishers, Karpagam (Athisaya siththar Bogar) and LEO (Bogar-7000). Then I will revert.

Regards
Chandrasekar

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Thozi,
vannakam
ungal pathippugalai thodarndu vaasika aarvamaaga ullen,
Facebook. Ungal pathivu ulladha

Unknown said...

Maanida uruvil ulla sakthi petra varagal anaivarukku adhiga sodhanai undu.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
பார்வையிட முகவரி
http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_5.html?showComment=1407198730380#c3047236352083437617

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

சகோதர ரே நீங்கள் எழுதிய நூ லி னை எனக்கு மின் அஞ்சலில அனுப்புமாறு வேண்டுகிறேன்(garanm005@gmail.com)
௥௥௥குருவே சரணம்௥௥

Post a comment