நன்றி நண்பர்களே!

Author: தோழி / Labels:

கடந்து போகுமிந்த ஓராண்டில் எனது பதிவுலக செயல்பாடு தொடர்பில்  சில விளக்கங்களை சொல்லிவிடுவது சரியாக இருக்கும் என்பதால் வருடத்தின் கடைசி நாளில் இந்த பதிவினை எழுத நேர்ந்திருக்கிறது.

முந்தைய வருடம் வரை கல்லூரி மாணவி. வீடு, கல்லூரி, படிப்பு, புத்தகங்கள், மடிக் கணினி, இணையம், பதிவுகள், நண்பர்கள்,  என  சிறிய வட்டத்தில் வாழ்க்கை மிக நிம்மதியாய் போய்க் கொண்டிருந்தது. அவை யாவும், இந்த வருடத்தில்  தலை கீழாய் மாறிப் போனது. குருவருளினால் படிப்பு முடிந்த கையோடு  அரசு வேலை கிடைத்து மருத்துவராக வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியவளாகி விட்டேன். 

புதிய சூழல், நியதிகள், இலக்குகள், வேலை நிமித்தமாய் வெளியூர் பயணங்கள் என வாழ்வியல் நெருக்கடிகளுக்கு இடையே பதிவுகளை ஒழுங்கு செய்து, தட்டச்சு செய்து பகிர்வதில் ஏகப் பட்ட குளறுபடிகள். கிடைத்த சொற்ப நேரத்தில் குறைவான பதிவுகளையே இந்த ஆண்டு பகிர முடிந்தது.

மருத்துவ முகாம்கள் என்று வெளியூர் பயணங்கள் தந்த உடல் சோர்வு, மனச்சோர்வு என்றிருந்த சூழலில், சாலை விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பினாலும் பல்வேறு எலும்பு முறிவுகளினால் மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனை வாசம். இந்த காலகட்டத்தில் இணையம் பக்கம் வர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை, நடமாட முடிகிறது. இன்னமும் விடுப்பில்தான் இருக்கிறேன். இடது கை முழுமையான செயல்பாட்டிற்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

இந்த வருடம் தந்த அனுபவங்களும், படிப்பினைகளும் எதிர்வரும் ஆண்டினை புதிய உத்வேகத்தோடு எதிர்கொள்ளும் பக்குவத்தை தந்திருக்கின்றன என்றால் மிகையில்லை எனவே இந்த வருடம் போலில்லாது வருமாண்டில் இயன்ற வரையில் கூடுதல் பதிவுகளை எழுதிட திட்டமிட்டிருக்கிறேன். புத்தாண்டில் சித்தர்கள் இராச்சியம் தவிர "இதுதமிழ்" இணைய தளத்திலும் எனது ஆக்கங்கள்  சிலவற்றை பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை நடந்தவை, இப்போது நடந்து கொண்டிருப்பவை , இனி நடக்க இருப்பவை யாவும் நன்மைக்கே.... எல்லாம் குருவின் திருவருள்.

தொடரும் உங்களின் மேலான புரிந்துணர்விற்கும், அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

31 comments:

Unknown said...

தோழி ,

வாழ்த்துக்கள் மற்றும் கோடி நன்றிகள்!!!

suresh said...

தோழி,
புதிய ஆங்கில ஆண்டுடன் நல்ல வாழ்க்கை பயணம் சிறப்பாக தொடராடும், குரு கப்பும், திருஷ்டியும் செய்துகொள்ளுங்கள். வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.

Unknown said...

தோழி
மனதில் எழுத்தில் பேச்சில் சத்தியம் இருந்தால் நாம் அழிந்தாலும் அவை அழிவற்று என்றும் நிலைத்திருக்கும்
தொடரட்டும் தங்கள் ஆக்கபூர்வமான சேவை

திவாண்ணா said...

நல்ல படி நடக்க வாழ்த்துகள்!

SANGAMES said...

Dear friend,
Greetings. I'm extremely sorry to ask the question. When you become alright than answer it. I prayer to lord shiva and our guru that, "you will get well soon".

துரை செல்வராஜூ said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள். தாங்கள் பூரண நலமடைய வேண்டுகின்றேன். தங்களுடைய பதிவுகள் மீண்டும் தொடர வேண்டும் குருவருளும் திருவருளும் துணை!..
வாழ்க வளமுடன்!..

Unknown said...

Best of luck.

Unknown said...

Best of luck.

திண்டுக்கல் தனபாலன் said...

வரும் ஆண்டில் அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

vazga valamudan...

Arumuga said...

Nalam petru Meentum Tamilluku Thondu Seyya Aandavanai Prarthikiren Thozhi

Arumuga said...

Nalam petru Tamilukku Meendum Sevai Seyya Aandavanai Prarthikiren Thozhi

Almighty Add said...

வெற்றி சிறக்க வாழ்த்துகள்

Almighty Add said...

இந்த ஆண்டில் வெற்றி சிறக்க வாழ்த்துகள்

சின்னப்பயல் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Bogarseedan said...

advanced new year wishes.

Unknown said...

சிறப்புடன் வாழ்க

Unknown said...

aangila puththaadu nalvalthukal thozhi....

Unknown said...

Vaalthukkal..,
Wish you happy new year2014..,

Dr. E.Vadivel said...

Great service to mankind. Let it continue

kimu said...

நல்லதே நடக்கும் :)
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள் தோழி

kimu said...

நல்லதே நடக்கும் :)
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள் தோழி

Unknown said...

புத்தாண்டு நல்வாழ்துகள். குருவருளால் நாலமாக வேண்டுகிறேன்.

Unknown said...

புத்தாண்டு நல்வாழ்துகள். குருவின் அருளால் நலமாக வேண்டுகிறேன்

Unknown said...

For Each And Every MOMENT, There Is A REASON.
My wishes for your healthy and long life.

Jegan Blog said...

Wish you happy New year and my wishes to get well soon and continue the service as you do always.

journey within said...

தோழி, மிக விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Anonymous said...

Ungalin pathivum ungalin manidha kula sevayum endrum thodara iraivanai prathikkiren tholi...nallathe nadakum nallathe nadakum....idhuvum kadandhu pogum

Unknown said...

Maruthuvar thozikku udal nalam pera kadavulin asirvaatham kidaikka pirarthikkeran

S.Puvi said...

இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்

Unknown said...

thangalin pathivugalai thodarnthu padithukondu varugiren
thangalin mell niraya mathippum mariyaathavum anbum vaithullen thangal purana gunammaga iraivanai prathikkiren thozhy.vaazhka valamudan.

Post a comment