நலம் பல தரும் "சண்முகயந்திரம்"

Author: தோழி / Labels: , ,

எதிர்பாராத நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பதிவுகளை குருவருளினால் எழுதத் துவங்கி இருக்கிறேன். அந்த வகையில் இந்தப் பதிவினை தமிழ் கடவுளாம் முருகனை பணிந்து அவரைப் பற்றிய ஒரு தகவலுடன் துவங்குகின்றேன்.

எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை  யந்திர வடிவில் வழிபடும் வழக்கம் நம்மிடையே காலம் காலமாய் இருந்து வருகிறது. இலங்கையில் கதிர்காமம் கோவிலில் மூலவர் யந்திரமாகவே இருக்கிறார். இது பற்றிய தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

உலோகத் தகட்டில் கோடுகளாகவும், முக்கோணங்களாகவும் கீறப்படும் இந்த யந்திரங்கள் சூட்சுமமான பல அர்த்தங்களை  தன்னகத்தே கொண்டவை.இந்த யந்திரங்களை உயிர்ப்பிக்க மந்திரங்கள் அவசியம் ஆகிறது. மந்திரங்களினால் உயிர்ப்பிக்கப் படும் யந்திரங்கள் சக்தி கேந்திரமாய் விளங்குகின்றன.யந்திரம் மற்றும் அதை உயிர்ப்பிக்கும் மந்திரம் ஆகியவற்றை அறிந்து உணர்ந்து தெளிவதையே தந்திரம் என்கிறோம்.

இத்தகைய யந்திர வழிபாட்டினைப் பற்றிய தகவல்கள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் இருந்து சிலவற்றை ஏற்கனவே இங்கே பகிர்ந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் அகத்தியர் அருளிய "சண்முக யந்திரம் " பற்றிய தகவலை பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தகவல் "அகத்தியர் 12 000 " என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

பாரப்பா சண்முகனார் பூசைகேளு
பத்தியுடன் முக்கோணம் பதிவாய்ச் செய்து
நேரப்பா அறுகோணந் தன்னிலேதான்
நிசமான ஓம்மென்றே நன்றாய்ப்போடு
காரப்பா அதனிடையின் வெளியிலேதான்
கருணையுடன் சரவணபவா வென்றேதான்
சேரப்பா அட்சரத்தை நாட்டிக்கொண்டு
சிவசிவா அதனைச் சுற்றி ஓம்போடே.

போடப்பா சுற்றியே ஓங்காரம்போட
நன்மையுள்ள சக்கரமுஞ் சித்தியாச்சு
வீடப்பா பிலப்பதற்கு சக்கரத்தைச்சுத்தி
விருத்தமென்ற வளையமடா மூன்றுபோடு
கோடப்பா கீற நன்றாயக் கோட்டைபோட்டு
குறிப்பாக நால்வாச லிட்டுக்கேளே.

கேளப்பா வாசலிற் தேவதையைக்கேளு
கீழ்வாசலில் பிரமனுட பீஷம்போடு
தாளப்பா தென்வாசல் மாலின்பீஷம்
தயவான மேல்வாசல் ருத்திரபீஷம்
வாளப்பா வடவாசல் மயேசன்பீஷம்
மைந்தனே வாசலிலே தேவதைகள்நாட்டி
ஆளப்பா சதாசிவன்போல் நீயிருந்துகொண்டு
அன்பாகச் சக்கரத்தைப் பூசைசெய்யே.

செய்யப்பா பூசைவிதி தன்னைநன்றாய்
செப்பமுடன் செய்வதற்குத் திருவைநோக்கி
கையப்பா கால்முகங்கள் சுத்திசெய்து
கருரணைபெற விபூதியுத் தளமாய்ப்பூசி
வையப்பா சக்கரத்தைப் பீடமீதில்
மார்க்கமுடன் தானிருத்தி வைத்துமேதான்
மெய்யப்பா தூபமொடு தீபஞ்செய்து
வேதாந்தப் புருவமதில் சிம்மென்றுநில்லே.

நில்லப்பா மனதறிவால் வணக்கமாக
நினைவாகப் சண்முகர்க்குப் பூசைசெய
சங்கையுடன் ஓம்கிலி சிம்மென்றோதே
ஒமெனவே சண்முகர்க்குப் பூசைசெய்து
சோல்லப்பா மூலமென்ற அக்கினியினாலே
சிவசிவா புருவநடுக் கமலம்நோக்கி
நல்லப்ப நல்மனதாய் நோக்கமானால்
நாதாந்த சண்முகனார் தெரிசனையாம்பாரு.

பாரப்பா யோகபூசை அறிவானந்தம்
பதிவான தீபமென்ற மனக்கண்பார்வை
நேரப்பா வாசியென்ற அமுதபானம்
நிலையான பிர்மமாமாயே மாய்கைமாழும்
கருவான சூட்சமடா நாதவித்து
காத்து மனக்கண்ணாலே தன்னைக்காணே
அட்டாங்க யோகமுடன் மௌனயோகம்
அட்டசித்து னித்தனையு மறியலாச்சே.

இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான சில முன்னெடுப்புகளும், முறைகளும் உண்டு. அதன்படியே அவற்றினை கீறிட வேண்டும்.

இந்த யந்திரத்தினை ஆறங்குல (6"x6") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கீறிய தகட்டினை, பீடம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை தொடங்க வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, உடல் தூய்மை செய்து,  திருநீறு அணிந்து சுகாசனத்தில்  கிழக்கு முகமாய் அமர்ந்து மனதை ஒரு முகமாக்கி, குருவை பணிந்து "ஓம்கிலி சிம்" எனும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டுமாம்.

தொடர்ந்து இம்மாதிரி பூசை செய்து வந்தால் யோக பூசை, அறிவானந்தம், தீபம் என்ற மனக்கண் பார்வை, வாசி என்ற அமிர்த பானம், பிரம்ம மய நிலை, மாயை நீங்குதல், நாதவித்து சூட்சுமங்கள், மனக்கண்ணால் தன்னை அறிதல். அட்டாங்க யோகம், மௌன யோகம், அட்டமா சித்துக்கள் ஆகியவை சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

ஆர்வமும், நம்பிக்கையும் உள்ளவர்கள் குருவினை பணிந்து வணங்கி முயற்சிக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

39 comments:

arul said...

thanks for sharing

Dinesh Nataraj said...

நீங்கள் குணமடைந்து மீண்டும் பதிவு தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி...

revathy said...

how r u mam. how is your health. get well soon mam.
k.s.revathi

Unknown said...

மீள் வருகைக்கு மிக்க நன்றி தோழி...

துரை செல்வராஜூ said...

தங்களுக்கு பூரண நலத்தை எம்பெருமான் தந்தருள்வானாக!.. எல்லாரையும் ஷண்முகப்பெருமான் காத்தருளட்டும்!..

Unknown said...

நன்றி

Unknown said...

hi how r u ?how is your health .god bless u

Unknown said...

வாழ்க வளமுடன்

S.Puvi said...

பதிவுகளுக்கு நன்றிகள்.
உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

Unknown said...

Welcome Back

Unknown said...

Welcome back.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பகிர்வு! நலமுடன் தொடர வாழ்த்துக்கள்!

Unknown said...

HOLLOW MAM HOW IS YOUR HEALTH I PRAY TO
GOD ALWAYS GOOD HEALTH

prashan.sun said...

Take care mam

Unknown said...

today

Unknown said...

Today

Unknown said...

take care your health first OK

raman said...

Thanks and we pray god Narasimhar to speedy recovery and give strength to contine the good well informations.

அருள்முருகன் said...

just now i saw the post, make your self healthy, and my i pray to guru to give u complete good health without any affect.

get well soon
om siva siva om

Unknown said...

thozhi seppu thakadil varainthu jepikkalama?

Unknown said...

this is all to sight the LIGHT within ..... All of us .. is it not ?

Unknown said...

சகோதரி, முருகன் தங்கள் உடல் நலம் காப்பான்.
நன்றி. நன்றி. நன்றி.

Unknown said...

சகோதரி, முருகன் தங்கள் உடல் நலம் காப்பான்.
நன்றி. நன்றி. நன்றி.

Unknown said...

Thozhiku enathu vanakam. Yanthirangal kirum prathiyega murai endha padhil podapattulathu enru koorinaal padhithu thelivu peruven. Ungal bathilukaga kathirukiren.

Unknown said...

விரைவில் குணமடைய வேண்டும் என்று நாம் கடவுள் வேண்டிக்கொள்வோம்
தமிழ் செல்வன்,கோயம்புத்தூர்

Unknown said...

தங்களை சோதித்த இறைவன் மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவருவர் .கவலைவேண்டாம் .மன திடத்துடன் இறைப்பணி செய்ய எனது பிரார்த்தனைகள்.

Anonymous said...

Nandri .... Ungal Nalla Seithiku

Anonymous said...

Nandri .... Ungal Nalla Seithiku

Unknown said...

தங்களுக்கு தம்பணா மந்திரம் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்
மின்னஞ்சல் sinsha_1986@yahoo.co.in
snsha20@gmail.com

நன்றி
தீ. சிந்துபாணி

Unknown said...

wellcome

Unknown said...

wellcome

Unknown said...

நல்லது..... ஆனால் எந்திரத்தின் நடுவே இனையத்தல விளம்பரம் இருக்கிறது அதை கீழே எழுதிருந்தால் அது எனக்கு கொஞ்சம் எடுத்து கொள்ள உதவியாக இருந்திறுக்கும் பரவாயில்லை அடுத்த முறை இது போன்ற முக்கியமான படங்களுக்கு விளம்பரங்களை கீழே கொடுத்தால் உபயோகமாய் இருக்கும்.. நன்றி....

Unknown said...

நல்லது..... ஆனால் எந்திரத்தின் நடுவே இனையத்தல விளம்பரம் இருக்கிறது அதை கீழே எழுதிருந்தால் அது எனக்கு கொஞ்சம் எடுத்து கொள்ள உதவியாக இருந்திறுக்கும் பரவாயில்லை அடுத்த முறை இது போன்ற முக்கியமான படங்களுக்கு விளம்பரங்களை கீழே கொடுத்தால் உபயோகமாய் இருக்கும்.. நன்றி....

gopalakrishnan said...

Welcome god bless you

gopalakrishnan said...

Shall I get Bathrakali Thiyanam

Unknown said...

தாங்கள் விரைவில் குணமடைய முருகனைப் பிரார்த்திக்கிறேன்...

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

மீண்டும்இணைந்தமைக்கு வழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பதிவு மிகவும் பையனுள்ளது வாழ்க வளமுடன்

BALA KUMAR said...

Lord Murugan will be with us.please continue writing..... BALAKUMAR

அ.அபிராம் said...

நன்றி நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்கள் சேவை தொடர்ந்ததற்கு மிகவும் நன்றி

Post a comment