அஞ்சனா தேவியின் அருளைத் தரும் மந்திரம்.

Author: தோழி / Labels: , ,

சித்தர் பெருமக்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தைப் பற்றியும், அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்கான மந்திரம் மற்றும் தந்திரத்தை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். சித்த மரபில் வாலை என்கிற பெண் தெய்வ வழிபாடு பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். வாலை தெய்வம் எத்தனை சக்தி வாய்ந்தது, அதன் மகத்துவம் பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் "அஞ்சனா தேவி" அல்லது "அஞ்சனை தேவி". இந்த தெய்வத்தைப் பற்றிய தகவல்கள் என பார்த்தால்  அரிதாய் ஒன்றிரண்டு குறிப்புகளே எனக்குக் கிடைத்திருக்கிறது.  ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும். 

சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில்  நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர் 12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....

ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு
அருளான அஞ்சனா தேவிமூலம்
பேச்சப்பா பேசாத மவுனமூலம்
பிலமான புலத்தியனே சொல்லக்கேளு
மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்
முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி
காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று
கண்ணார நூறுருவிற் காணலாமே.

காணுகிற விதமென்ன மைந்தாகேளு
கற்பூர தீபஒளி சோதிபோலே
தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று
சோதியெனு மஞ்சனா தேவியென்று
பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு
பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி
ஊணிமன மொன்றாக நீறுசாத்தி
உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.

பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண
பதிவான இருதயமே வாசமாகி
முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே
முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்
கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று
காணுதடா அண்டபதங் கண்ணிநேரே
உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்
ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.

ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி
ஊசாடு மஞ்சனா தேவிமூலம்
நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி
நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு
சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு
திருவான அஞ்சனா தேவிதன்னால்
கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்
காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.

கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து
கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு
பொன்னான பூமிநடுப் பாதளத்தில்
பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்
முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்
மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்
மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு
மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.

மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது  அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க... 




Post a Comment

22 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பாடல்.... நன்றி....

DHIVA DHIVAKAR said...

mudalil u dal nilai yai nangu kavanikavum

கர்ம யோகி said...

நன்றி தோழி!! மனக்கதவுகள் வலைப்பதிவை தொடருமாறு வேண்டிக்கொள்கிறேன்..

harimanigandan v said...

திரு. மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அஞ்சனப்பிரயோகம் அனுபவங்களை
http://www.mediafire.com/?dvmehc01tt2ri6a#1, ( 1 hrs speech)
About: Mystic Selvam Ayya : http://sadhanandaswamigal.blogspot.in/2011/08/mystic-selvam.html

Manikandan Lekshmanan said...

அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்

Senthil Kumar said...

அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள் பல .......
ஒரு சிறு உதவி வேண்டுகிறேன் .....
ஐயப்பனின் மூல மந்திரம் தியான மந்திரம் தெரிவிக்க வேண்டுகிறேன். எந்த மந்திரத்தை ஒரு லட்சம் தடவைக்கு மேல் கூறினால் பலன் கிடைக்கும் தயவு செய்து கூறவும்.
நன்றி

Author said...

Thank you for valuble info :)

In which direction and what time is good to do.

-Saravanan B

SEKAR said...

தோழி,

உங்களுள்ளுறையும் நம்மீசன் உங்களை விரைவில் குணமாக்கி உங்கள்

தமிழ்ப்பணியைத் தொடர்வார்.

jayakrishna said...

GOOD...

lakshmipathy welcomes u said...

என் குரு மகான் அகத்தியரிடம் இப்பதிவுகளை கொண்டுவரும் ஆத்மாவின் நலத்திற்காக நான் பிராத்திக்கிறேன் , நன்றி

Subash S.p said...


தோழி,பேருறை என்பது என்னமூலிகை என
தெரியப்படுத்தவும்.

subash.sps5@gmail.com

parthi d said...

Sivavakkiyam songs with meaning kedaikuma

Rajan Jothimani said...

The description of effects of the meditation process coincides with experience of third eye. I think that is what being said here. Thanks for the very good post

parthi d said...

Agathiyare portri portri

cctv watching camera said...

Ellam sivam

cctv watching camera said...

Ellam sivam

Jeeva R said...

உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் பதிவுகள் முதல மாதிரி செய்ய மட்டின்கிரிங்க சோர்ந்து போய்விடாதிர்கள் தோழி

Jeeva R said...

உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் பதிவுகள் முதல மாதிரி செய்ய மட்டின்கிரிங்க சோர்ந்து போய்விடாதிர்கள் தோழி

revathy said...

what happened mam.how is your health.

Karthik Navish said...

Vanakkam thozhi naan pudhiyathaga arimugam aagiren en peyar karthik.. ungalakku mudhalil en panivana vanakkangal . Neengal tharum apoorvamana ariyavagai thagavalgalukku mikka nanri. Ungal sevai thodara en vazhthukkal ungalukku udal nalam sari illai enru arindhen neengal paripoorana kunam adaiya iraivanai vendugiren. Nanri thozhi

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான பகிர்வுகள்..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

Pradeep said...

Iniya Pongal Nal Vaazhthukkal...

Post a Comment