தும்பிக்கையான் பாதம் பணிவோம்!

Author: தோழி / Labels: , ,

"காணபதம்" அல்லது கணாபத்யம் என்றழைக்கப் படும் மரபின் தனிப் பெருங்  கடவுளான விநாயகரின் அவதார தினம் இன்று. ஒவ்வொரு வருடம் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி விநாயகரின் அவதார தினமாக கொண்டாடப் படுகிறது. ஆறு வெவ்வேறு வழிபாட்டு மரபுகள் ஒன்றிணைந்து இந்து மதமாய் உருவெடுத்த போது விநாயகர் இந்து மதத்தின் முழு முதற் கடவுளாக அங்கீகரிக்கப் பட்டார். 

ஓம்காரத்தின் சூட்சும வடிவம்தான் விநாயகர் என்று சொல்வோரும் உண்டு. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த விநாயகரை சித்தர் பெருமக்களும் போற்றித் துதித்தனர். அநேகமாய் சித்தர் பெருமக்கள் அனைவருமே தாங்கள் அருளிய நூல்களின் முதல் பாடலில் விநாயகரை துதித்துப் போற்றியே துவங்கியிருப்பது சிறப்பு. இது தொடர்பான தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் இந்த இணைப்பில் அவற்றை காணலாம்.

விநாயகரின் அவதார தினமான இன்று  அகத்தியர் அருளிய "கணபதி யந்திர" வழிபாட்டு முறை ஒன்றினைப் பற்றிய தகவலை பகிர்வது பொருத்தமாய் இருக்கும். இந்தத்  தகவல் அகத்தியர் அருளிய “அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

பாரப்பா சிவயோகம் பூரணமேயாகும்
பத்திகொண்டு பூரணமே கெதியென்றெண்ணி
நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
சகல உபசாரமதாய்ப் பூசைபண்ணி
போத்திநன்றாய்ப் பூரணத்தில் மனதைநாட்டி
புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேள்
பார்த்திபனே ஓம் நமோகுரு கிலியும்
ஸ்ரீகுரு கணபதி சுவாகாவென்று
புத்தியுடன் பதினாறு உறுவே செய்தால்
நேத்திரத்தின் பேரொளிபோல் மூலநாயன்
நிச்சயமாய் உனதுவசம் வசியமாமே.

ஆமப்பா கணபதியை வசியம்பண்ணி
அதன்பிறகு அஷ்டாங்க யோகம்பார்த்தால்
தாமப்பா தன்வசமா யஷ்டகர்மம்
சச்சிதா னந்த பூரணத்தினாலே
ஓமப்பா அறுபத்து நாலுசித்தும்
உண்மையுடன் தானவனாய்த் தானேசெய்வாய் .
வாமப்பா பூரணத்தின் மகிமையாலே
வரிசையுட னட்டாங்க வரிசைகேளே.

இந்த பாடல்களில் உள்ள தகவல்களைக் கொண்டு வரையப் பட்ட யந்திரத்தை கீழே உள்ள படத்தில் காணலாம்.
இந்த யந்திரத்தினை மூன்று அங்குலம் சதுரமான வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிடலாம். இதற்கு  செப்பாலான ஆணியினை பயன் படுத்திட வேண்டுமாம். உடல் சுத்தியுடன் கிழக்கு முகமாய் அமர்ந்து குருவினை வணங்கி, இந்த யந்திரத்தை தகட்டில் கீறிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து, அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை செய்ய வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 16  தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டும் என்கிறார்.

"ஓம் நமோ குரு கிலியும் ஸ்ரீ குரு கணபதி சுவாகா" 

இம்மாதிரி பூசை செய்து வந்தால்  கணபதியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும், அதன் பின் அஷ்டாங்க யோகம் செய்தால் அவை சித்தியாகும் என்கிறார். மேலும் இதனால் அறுபத்தி நான்கு சித்தும் கைகூடிவரும் என்கிறார் அகத்தியர். இது போன்று விநாயக வணக்கதின் முக்கியதுவத்தும் சித்தர் இலக்கியங்களில் நிறையவே விரவிக் கிடக்கிறது. 

இந்த நல்ல நாளில் விநாயகப் பெருமானின் பாதம் பணிந்து அவரது பேரருள் நம் எல்லோருடைய வாழ்விலும் நிலைத்திருக்க வேண்டி வணங்கிடுவோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

13 comments:

S.Raja said...

அஷ்டாங்க யோகம் என்றால் என்ன? எண்பது தெரிந்தால் ....
இதை பயன் உள்ளதாக்கிகொள்வேன்.

விநாயகர் சமாதியைக் பற்றி மேலும் ஏதேனும் தகவல்
கிடைத்ததா தோழி.

நன்றி,
இராஜரத்தினம் ச

jaisankar jaganathan said...

தோழி விநாய்கர் அகவல் இல்லாமல் ஏன் இப்படி?

துரை செல்வராஜூ said...

வணக்கம் தோழி!.. அனைவருக்கும் ஸ்ரீவிநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!..

சிவனேசு said...

மிகவும் பயனுள்ள தகவல் தோழி, பகிர்வுக்கு நன்றி

kimu said...

நன்றி தோழி

gurumurthy said...

Siththars always encourages "Jeeva karunyam". They never recommend to use silk. ("Pattu")In this also, I didn't find the word "Pattu". Please avoid such own findings.

arul said...

very useful information

SACHIN tendulkar said...

@ raja i think attanga yogam means iyamam niyamam asanam pranayam prathiyakaram so and so

Realstatistix and Analytix said...

one important info here may be - the word "guru" in the mantra is to be pronounced as "kuru" and not the "gu-ru" that we normally do...Please check and then confirm...

SRINIVASAN R said...

Instead of creating this yanthra can I get one ganapathi yantram and do pooja ? Srinivasan

SRINIVASAN R said...

Instead of creating this yantra can I buy one ganapathi yantram and do pooja ?

SRINIVASAN R said...

Instead of creating this yanthra can I get one ganapathi yantram and do pooja ? Srinivasan

Sridhar R J said...

நல்ல ஒளி உண்டாம். வாக்கு, மனம், உயிர், உடல்,ஞானம் இவை ஐந்தும் தூய்மை பெற்று நல்ல ஒளி சூழ்ந்து வாழ்க........ தோழி.

Post a Comment