மாதவிலக்கு என்பது...

Author: தோழி / Labels: ,

நமது உடலின் கழிவுகள் எப்படி வியர்வையாக, சிறுநீராய், மலமாய் வெளியேறுகிறதோ அப்படியான ஒன்றுதான் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு. அதைத் தாண்டிய முக்கியத்துவம் எதுவும் இந்த நிகழ்வுக்கு இல்லை. பெண்ணாய் பிறந்த எல்லோருக்கும் இது இயல்பான ஒன்றுதான். ஆனால் இதைப் பற்றிய தெளிவுகளை உருவாக்குவதற்குப் பதிலாக தவறான எண்ணப் போக்குகளே காலம் காலமாய் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

மாதவிலக்காகும் பெண்களுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியாக நிறைய ஓய்வு தேவைப் படுகிறது. இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் அந்த நாட்களில் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தனர். நல்ல ஓய்வும், உடல் சுத்தமும் தேவை என்பதன் பொருட்டே மாதவிலக்கு என்கிற பெயர் வழங்கியது.

பெண்களின் உடல் இயங்கியலில் ஏற்படும் இந்த இயல்பான நிகழ்வினைக் குறித்த எனது புரிதல்களையும், அதற்கு நம் சித்தர் பெருமக்கள் அருளிய சில தெளிவுகளையும் பொதுவில் வைப்பதே இந்த குறுந் தொடரின் நோக்கம்.

பெண்களின் கருப்பையில் உள்ள கருமுட்டையும், அதனை பாதுகாக்க வேண்டி உருவான மற்ற நீர்மங்களும் சிதைந்து பிறப்பு உறுப்பின் வழியே குருதிப்போக்கு ஏற்படுவதையே மாத விலக்கு என்கிறோம். இத்தகைய போக்கு குறிப்பிட்ட நபரின் உடல் அமைப்பினைப் பொறுத்து மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். ஒரு நாளில் குறைந்தது ஐம்பது மில்லி லிட்டர் முதல் 80 மில்லி லிட்டர் ரத்தம் இவ்வாறு வெளியேறும். இவை நம் உடலின் கெட்ட ரத்தம் என்றொரு தவறான நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.

பருவம் எய்திய பெண்களுக்கு இந்த மாதவிலக்கு 21 நாள் முதல் 45 நாட்களுக்குள் நிகழும். இது அவ்வந்த நபரின் வயது, உடல் அமைப்பு, அவர் வாழும் சூழல் மற்றும் அவர்களுடைய உளவியல் போன்ற கூறுகளைப் பொறுத்து முன் பின் நிகழலாம். மேற்சொன்ன காரணங்களினால் மிகக் குறைவான விழுக்காடு பெண்களுக்கு மட்டுமே சரியான சமயத்தில் அதாவது 21 நாட்களில் மாதவிலக்கு உண்டாகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மாதவிலக்கு சுழற்சி என்பது என்ன?, அது எதனால் நடை பெறுகிறது? எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்கும் அசைபடம் ஒன்றினை இணைத்திருக்கிறேன்.சுருக்கமாக சொல்வதென்றால் பெண்ணின் சூலகத்தில் உருவான கருமுட்டையானது வளர்ச்சி அடைந்து முதிர்ந்த நிலையில் கருப் பையில் வந்து சேர்கிறது. இவ்வாறு வந்த கருமுட்டையை பாதுகாக்க வேண்டி கருப்பையானது சில நீர்மங்களை உருவாக்கி கருமுட்டையை பாதுகாக்கிறது. மேலும் கருவறையின் சுவர்கள் தடித்து கருமுட்டையின் வளர்ச்சிக்குத் தேவையான குருதியை நிரப்பி வைக்கிறது.

இந்த காலகட்டத்தில் கருத் தரிப்பு நிகழாவிட்டால், அந்த கருமுட்டையானது சிதைந்து அழிந்து கருப்பை உருவாக்கிய நீர்மங்களோடு சேர்ந்து குருதியாக பிறப்பு உறுப்பின் வழியே வெளியேறுகிறது. இந்த நிகழ்வு சுழற்சி முறையில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனையே மாதவிலக்கு சுழற்சி என்கிறோம்.

மேலும் விவரங்களோடு அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

12 comments:

துரை செல்வராஜூ said...

பலருக்கும் உள்ள சந்தேகங்களைப் போக்கும் வண்ணம் கருத்தான பதிவு!..

திண்டுக்கல் தனபாலன் said...

தவறான எண்ணம் உண்மை...

இயற்கை...

S.Puvi said...

பல பெண்கள் இவ்விடயம் தொடர்பாக தாழ்வுணர்வுகளைக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக அமையும்.

yogi said...

என்ப வென்று சொல்வது இரய்வனுடைய படைய்பை .

geethasmbsvm6 said...

நிச்சயமாய் உங்கள் மூலம் பலருக்கும் பயன் கிடைக்கும். வாழ்த்துகள். எல்லாப் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்.

Unknown said...

மிகமிக பயனுள்ள பகுதி தோழி குறிப்பாக பென்கள் அறியவேன்டி பகுதி

Unknown said...

மிகமிக பயனுள்ள பகுதி தோழி குறிப்பாக பென்கள் அறியவேன்டி பகுதி

S.Chandrasekar said...

சில வருடங்கள் முன்பு வரை இந்த விலக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் எதையும் தொடமாட்டார்கள், சமயர்கட்டில் வேலை செய்யமாட்டார்கள், கருவேப்பிலை/துளசி செடி பக்கம் போகமாட்டார்கள், தூரமாக உட்கார்ந்து ஒய்வு எடுப்பார்கள். ஆனால் இன்று அது நவீன நாகரிகத்தின் வேண்டாத தருணமாகி விட்டது. முன்பு இதை விலக்கு, தீட்டு, தூரம் என்று பல பெயர்களால் அழைத்தனர். எல்லா ஜாதியினரும் பின்பற்றினர். இன்று ஏதும் இல்லை. இப் பெண்கள் துணியோ, காற்றோ ஆண்கள் மீது படக்கூடாது.

இன்று அதை மூடநம்பிக்கையாக தள்ளிவிட்டனர். இவர்களுடைய விலக்கு துணியை மறைவாக வைத்திருந்தனர். இன்றோ நாப்கின் தெருவில் கிடக்கிறது, நாய் காக்கை கவ்விக்கொண்டு போகிறது. இது அப்பெண்ணிற்கு தோஷம், திருஷ்டி, சூன்யம் வந்து சேரும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

Just for info ஒன்றை சொல்லுகிறேன். சமீபத்தில் நான் புத்தகம் எழுதும்போது என் ஆய்வில் ஒன்றை கண்டேன். சித்தர், மாந்த்ரிக செய்வினை பற்றி சொல்லும் போது, சில மூலிகைகளை அரைத்து அதில் 'பெண்ணின் விலக்கு சீலை' யை திரியாக திரித்து நினைத்து சில மந்திரங்களை சொல்லி அந்த திரியை பற்றவைக்கவேணும் என்கிறார்.

தெருவில் கிடக்கும் நாப்கின்ஸ் யார் கைக்கு போகுமோ தெரியாது. அதை கழுகு கவினால் 'பட்சி தோஷம்' வரும், அப்பெண்ணின் கரு நிற்காது, உடலும் கர்பப்பையும் பலவீனமாகும். இதையெல்லம் தான் அந்த காலத்தில் 'மடி''ஆச்சாரம்''சுத்தம்' என்று சொன்னார்கள். நம்முடைய சமத்துவ முற்போக்கு சிந்தனயில் இது அடிபட்டுபோனது.

காரணங்கள் சொல்லாமல் சம்ப்ரதாயம் என்றனர். சொன்னால் நிரூபணம் கேட்பார்கள். சிதத்ர்கள் சொன்ன பல விஷயங்களை நாம் நிரூபணமா கேட்கமுடியும்...?

jai said...

நண்பர் சந்திர சேகர் அவர்களுக்கு ,
பதிவின் முதல் பத்தியை திரும்பவும் ஓரு முறை படிக்கவும் .அதன் பிறகும் தங்கள் ஐயம் தீர வில்லையா?
மாத விலக்கு நாளில் ஓய்வு தேவை என கூறினால் ஏற்று கொள்வோமா?அதற்கான தான் இந்த தீட்டு என்ற காரணத்தை முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் .

jai said...

நண்பர் சந்திர சேகர் அவர்களுக்கு ,
பதிவின் முதல் பத்தியை திரும்பவும் ஓரு முறை படிக்கவும் .அதன் பிறகும் தங்கள் ஐயம் தீர வில்லையா?
மாத விலக்கு நாளில் ஓய்வு தேவை என கூறினால் ஏற்று கொள்வோமா?அதற்கான தான் இந்த தீட்டு என்ற காரணத்தை முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் .

S.Chandrasekar said...

திரு ஜெய் அவர்களே, விலக்கு என்பது ஒய்வு நாட்கள்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கில்லை. என் பதிவில் நான் கூறியதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறன். அன்றும் இன்றும் உள்ள வித்தியாசங்களை பற்றி அங்கலாய்த்து குறிப்பிட்டேன். இன்று நடப்பது நவீன கால கூத்து.

நிற்க. என்னுடைய சமீபத்திய நூல் "போகர் 7000 - விளக்கவுரை" (ரூ.120) சென்ற மாதம் பொங்கலன்று வெளியானது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். இதை லியோ புக்ஸ், சென்னை வெளியிட்டுள்ளனர்.

Unknown said...

வயது வந்தவர்கள் அனைவரும் தெரிந்த வைக்க வேண்டிய மிக முக்கிய வாழ்க்கை பாடம் !

Post a comment