வாழ்த்துக்களும்..! வணக்கங்களும்..!!

Author: தோழி / Labels:

இந்த சித்தர்கள் இராச்சியம் வலைத்தளம் அழகாகவும் சிறப்பாகவும் மிளிர பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிவருபவரும், தமிழில் பங்கு வணிகம் என்னும் வலைத்தளத்தை ஸ்தாபித்து அதன் மூலம் ஆயிரக் கணக்கான பங்கு வணிகர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவரும், என் இனிய நண்பருமான திரு. எம். சரவண குமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்.

ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை ஸ்தாபித்தவர். அந்தத்தளம் தனது ஆயிரம் பதிவுகளைக் கடந்து சாதனையும் படைத்தது.

பங்கு வணிகத்தில் ஈடு பட்டுவரும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு உதவி வரும் திரு. எம். சரவண குமார் அவர்கள் சீரும், சிறப்புடனும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல குருவருளை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.


முருகனின் பெயர்கொண்டு
முனைப்போடு உழைப்பவரே,
பங்குச் சந்தையிலும்
தமிழைப் பவனிவர வைத்தவரே!

எம் வயதிற்கொப்ப
உம் அனுபவங்களையும்
அனுபவங்களின் அறிவையும்
பதிவுகளில் பகிர்ந்தவரே!

இணையம் தந்த இமயமே!
துணையாய் இருந்து
உயர வழிகாட்டிடும்
உற்ற தோழரே!

முதல் சந்திப்பிலேயே
பெரியோர் முதல் சிறியோர் வரை
சரிசமனாய் மதிக்கும் - உந்தன்
உயரிய பண்பு கண்டு
வியந்து தான் போனேன்..!

கைபிடித்து நடக்கும் குழந்தையாய்
கவரில் போகும் கடிதமாய்
இலட்சியம் நோக்கி
நடைபோட - பலருக்கு
பாதை போட்டுத்தந்து
வாழ வழிகாட்டி
வளர உரம் ஊட்டி
அழுத்திச் சொல்லித்தந்த
"ஆசானே"

இவ்வினிய நன்னாளாம்
உங்கள் ஜனன நாளில்
குருவருளை நான் வேண்டுகிறேன்!
சிந்தை, எண்ணம்,
சொல், செயல்,
குடும்பம்,
வாழ்க்கை,
தொழில்
என அனைத்திலுமே
மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும்
நிம்மதியுடனும்
தொடர்ந்து
வெற்றி நடை போட
குருவருள் என்றும் உமக்கு
குறைவின்றிக் கிடைக்கட்டும்!
வாழ்த்தி வணங்குகிறேன்!
Post a Comment

15 comments:

S.Puvi said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தவமணிப் புதல்வன் said...

திரு மு. சரவணகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

N.R.P said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

உங்கள் நண்பருக்கு வாழ்த்துகளும் உங்களூக்கு எனது நன்றிகளும் அவரின் வலைதளத்தை எங்களுக்கு அறிமுகப்படித்தியதற்காக

இராஜராஜேஸ்வரி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

திரு. எம். சரவண குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

துரை செல்வராஜூ said...

துணையாய் இருந்து இணையம் தந்தவருக்கும் கனிவாய் தமிழில் நல்வாழ்த்து வழங்கும் நல்ல உள்ளம் என்றும் வாழ்க!..

N.R.P said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Unknown said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Saravanan Thangavelu said...

Many many Happy Returns of the Day, Mr. Saravanakumar.

Your esteemed Blog link Needed.,

Thanks and Warm Regards.

PT SARAVANAN

Unknown said...

many more happy returns of the day

Rajakumaran said...

Vathukal saravankumar.

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே .இன்று போல் என்றும் வாழ்க ..

jscjohny said...

வாழ்த்துக்கள் தோழரே!

Unknown said...

en eniya piranthanal vazhthukkal

Post a comment