சித்த மருத்துவத்தில் தேவையான சரக்குகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ புடம் போட்டோ, வறுத்தோ, எரித்தோ, ஊதியோ வெளுக்குபடிச் செய்து எடுத்துக் கொள்வது பற்பம் அல்லது பஸ்பம் எனப்படும். உலோகங்களை பற்பமாக்கி அவற்றை மருந்தாகக் கொடுக்கும் வழக்கம் சித்தரியலில் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்திலும் கூட ஏழு வகையான பற்பங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.
அந்த வகையில் அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்ற நூலில் வெள்ளியைப் பற்பமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம். இந்த பற்பம் "ரசிதம்" எனப் படுகிறது.
செய்யவே இன்னம் ஒரு பற்பம் கேளு
செயமாக வூதசட்டி வெளி தன்னை
துய்யதாய் குகையில் இட்டு உருகும்போது
துரையான வெளியிடை மகிழம்பூச்சார்
அய்யனே இரண்டு இடை விட்டு இறக்கி
அப்பனே வெய்யது மடிந்து போகும்
பொய்யல்ல அப்பொடியை முன்சாற்றாலே
புகழாக அரைத்து பில்லை உலர்த்திக் கேளே.
உலர்த்தியதோர் வில்லைக்கு கவசம் கேளே
உண்மையுடன் முட்கா வேளை வேரைத் தானும்
பிலக்கவதை முன்னீரால் அரைத்துக் கட்டி
பிரியமுடன் குகையில் இட்டுச் சில்லும் மூடி
உலர்த்தி நன்றாய் மண்சீலை வலுவாய்ச் செய்து
உள்ளபடி நூறெருவில் புடத்தைப் போடு
பெலத்ததோர் ரசிதம் என்ற வெள்ளி பற்பம்
பெருமையுள்ள வெண்ணையிலே கொடுத்துப் பாரே.
கொடுத்து மிகப் பார்க்கையிலே தீரும் நோய்கேள்
குணம் இல்லாக் காசமொடு இரத்த காசம்
அடுத்து நின்ற மேகம் சயம் மந்தகாசம்
அப்பனே திப்பிலியலகலும் சொன்னோம்
தெடுத்து மிகப் புளி புகையைத் தவிர்க்க வேணும்
சுயமாக வேளைக்குப் பணவிடையி பாதி
கடுத்து நின்ற பவுத்திரமும் மூலைச் சூலை
காணாமல் ஓடுமடா கண்டு பாரே.
வெள்ளியின் எடைக்கு சரி சமனாக மகிழம் பூச்சாறு விட்டு உருக்க வேண்டுமாம். பின்னர் உருக்கிய வெள்ளியை பொடியாய் ராவி மகிழம்பூச் சாறுவிட்டு அரைத்து வில்லைகளாக்கி உலர்த்தி சேமித்துக் கொள்ள வேண்டுமாம். முட்கா வேளை வேரினை எடுத்து மகிழம்பூ சாறுவிட்டு அரைத்து முன்னர் உலர்த்தி சேமித்த வில்லைக்கு கவசமாய் இட்டு மேலே சீலைமண் செய்து நன்றாக காயவைத்து, நூறு வறட்டிகளைக் கொண்டு புடம் இட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர். (புடங்கள் பற்றிய எனது முந்தைய பதிவில் நூறு வறட்டிப் புடம் பற்றிய தகவல் இருக்கிறது.) இப்படி செய்தால் அந்த வில்லைகள் நீறி பற்பம் ஆகியிருக்குமாம். இதுவே "ரசிதம்" என்று அழைக்கப்படும் வெள்ளி பற்பம்.
இப்படி தயார் செய்யப் பட்ட வெள்ளி பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு அரைப்பண எடை அளவில் எடுத்து வெண்ணையில் குழைத்துக் காலையும், மாலையும் தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர காசம், இரத்த காசம், மேகம், சயம், மந்த காசம் ஆகியவை குணமாகும்.
இந்த வெள்ளி பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு அரைப்பண எடை அளவில் எடுத்து சம அளவு திப்பிலியுடன் கலந்து தினமும் ஒரு வேளையாக தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர பவுத்திரம், மூலச் சூடு ஆகியவை நீங்கும் என்கிறார்.
பத்தியமாக மருந்துண்ணும் நாட்களில் புளி, புகை போன்றவைகளும் தவிர்க்க வேண்டுமாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment
6 comments:
இணைப்புகளுக்கும் நன்றி... வாசித்தேன்... தொடர வாழ்த்துக்கள்...
சுலபமான கற்ப முறை ஒன்று கூடவா அகத்தியர் சொல்லவில்லை? அதாவது சஞ்சீவினி மூலிகைபோல்!
அது போக யாழ்ப்பாணத்தில் அறுகு மற்றும் துளசி தவிர வேறு ஒரு மூலிகையும் கிடைக்காது
``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.
what is 'Koshdam"
I have been seeing this site for more than 2 years. I wanted a solution for Kan drusti, could you please help on this
Post a Comment