குரு பகவானும், பரிகாரங்களும்.

Author: தோழி / Labels: ,

வணிக மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கைச் சூழலில் பரிகாரம் என்ற வார்த்தைக்கு பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு என்பதாகவே கற்பிக்கப் பட்டு விட்டது. இதன் அடிப்படையில்தான் ஒரு பிரச்சினைக்கு அவரவர் செல்வ நிலைகளுக்கு ஏற்ப பல விதமான பரிகாரங்கள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

என்னுடைய வாசிப்பனுவத்தின் படி, பரிகாரம் என்பது ஒரு போதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகவோ, மாற்றாகவோ இருக்க முடியாது. ஏனெனில் பரிகாரம் என்பது ஒரு வகையான ஆறுதல் மட்டுமே. 

இருட்டில் நடக்கிறவனுக்கு கை விளக்குப் போலவும், கரடு முரடான பாதையில் நடக்கிறவனுக்கு காலணி போலவும்தான் இந்த பரிகாரங்கள் பயன்படும். மற்றபடி விதிக்கப் பட்ட பாதையில் அவரவர் பயணித்தே ஆக வேண்டும். எனவே பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என நினைத்து பெரும் பொருட் செலவில் பரிகாரங்களை செய்வதற்கு முன்னர் இதை மனதில் கொள்ள வேண்டுகிறேன். 

குரு பகவானின் பெயர்ச்சியினால் நமக்கு உண்டாகும் நன்மைகளை மேம் படுத்திக் கொள்ளவும், தீமைகளின் பாதிப்பினை குறைத்துக் கொள்ளவுமே இந்த பரிகாரங்கள் கூறப் படுகின்றன.சித்தர் மரபிலும் சரி, அதைத் தாண்டிய பிற ஞான மரபிலும் சரி, இறைவனை மனதில் இருத்தி துதித்திருப்பது மட்டுமே எல்லா இடர்களுக்கும் பரிகாரமாய் சொல்லப் படுகிறது. புறவழிபாடுகளையோ, சடங்குகளையோ சித்தரியலும் சரி, ஞான மரபும் சரி நிராகரிக்கின்றன. 

அந்த வகையில் சில தியான மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

தியான சுலோகம் (தமிழ்)..

"குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"தேவாநாஞ்ச ரிஷீணாஞ்ச
குரும் காஞ்சன ஸநிபம்|
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||"

இவை தவிர குரு பகவானின் கவசம் ஒன்று எனது பாட்டனாரின் குறிப்புகளில் இருந்து தேடி எடுத்தேன். மிகவும் அரிதான இந்த கவசத்தை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் குரு கோரை நேரத்தில் இந்த கவசத்தை பாராயணம் செய்தால் குருபகவானின் பேரருளுக்கு பாத்திரமாகலாம் என்ற குறிப்பு எழுதப் பட்டிருக்கிறது.

இந்நேரத்துக்கு குரு கோரை நேரம் என்பது என்னவென்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும். ஹோரை பற்றிய விவரங்களை முந்தைய பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். எனவே தயை கூர்ந்து இந்த இணைப்பில் சென்று ஹோரை பற்றிய அறிமுகத்தினை வாசித்துவிட்டு இந்த பதிவினை தொடர்ந்தால் புரிதலுக்கு ஏதுவாயிருக்கும். 

அந்த பாடல் இதுதான்....

குரு கவசம்..

சீரியன் மனத்துள் வேண்டும்
சித்தி தந்து அளித்துச் செய்யும்
பாரியல் கருமம் கூட்டிப்
பரவுமெய்ஞ் ஞான வாழ்வு
மேரியல் செல்வப் பேறும்
யாவையும் ஒருங்கு நல்கும்
தேரியல் அறிஞன தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி

அரும் பிருகற்பதிப் பேர்
ஆண்டகை சென்னி காக்க
வருந்திரு நெற்றி காக்க
வானவர் குரவன் கன்னம்
விரும்பினன் காக்க நாட்டம்
வேண்டுவ தருவோன் காக்க
பருங்குமிழ் பொருவு நாசி
பண்ணவன் அரசன் காக்க

பாட்டு அமர்செவ்வாய் வேத
பாரகன் காக்க துண்டம்
கூட்டு முற்றிவன் காக்க
குலவரைப் புயம் இரண்டும்
வேட்டமர் சுகம் தந்து ஆள்வோன்
விரும்பினன் காக்க செங்கை
வாட்டும் வச்சிரங் கைக்கொள்ளும்
வானவன் வழாது காக்க

பருவரை பொருவு மார்பம்
பயிலுங்கீட் பதி புரக்க
விருதனம் வாக்கு வல்லோன்
என்றும் வந்து எய்திக் காக்க
வருசுகம் நல்கும் நாதன்
வயங்கு எழில் வயிறு காக்க
பொருவரு நீதி வல்லோன்
பொற்புஉறு நாபி காக்க 

எங்கும் சென்று அளிக்கும்ஈசன்
எழிற்கடி புரக்க ஊருத்
தங்கு புண்ணியன் புரக்க
சங்கமெய்ஞ் ஞானம் ஈயும்
புங்கவன் புரக்க பாதம்
புகல் உலகெல்லாமாகும்
அங்கணன் புரக்க மேனி
அமர் குருப் புரத்து காக்க

காலையும் உச்சிப் போதும்
கதிரவன் குடபான் மேவு
மாலையும் வானோர் போற்ற
வருகுரு கவசம் என்னும்
நூலை அன்போடு உரைக்கும்
நுண்ணியன் வேட்டாங்கு எய்திச் 
சோலைஅம் தரு விண்ணாட்ட 
சுரரையும் வெற்றி கொள்ளும் 

மறைமிகு கலைநூல் வல்லோன் 
வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன்
நாட்டினுக்கு அதி பனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் 
நீடு போகத்தை  நல்கும் 
இறையவன் குரு வியாழன் 
இருமலர்ப் பாதம் போற்றி போற்றி.!

குரு கவசம் முற்றும்.

இந்த அரிய பாடலை எழுதியவர் யாரென தெரிந்தவர்கள் கூறினால் நன்றியுடையவளாக இருப்பேன். 

இத்துடன் குரு பெயர்ச்சி பற்றிய தொடர் நிறைவடைந்தது.

தேவையுள்ளவர்கள் இந்த பதிவினை அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். தேவையுள்ளவர்களுக்கு இந்த இணைப்பினை பகிர்ந்திடுமாறு வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

14 comments:

arul said...

thanks for sharing this rare song

tamilvirumbi said...

தோழி ,

தங்களின் பிரதான குரு பெயர்ச்சி பலன்கள் ,பிரமிக்கத்தக்க வகையில் கூறப்பட்டுள்ளது .மிக்க நன்றி.

யாவர்க்கும் குரு கவசத்தை பாராயணம் செய்வதற்கு ,அளித்தமைக்கு மிகவும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் .

kimu said...

மிக்க நன்றி தோழி .

Unknown said...


நவகோள் வசிய யந்திரம்


ஜாதகத்தில் கோள்கள் எப்படி இருந்தாலும் அவைகள் வசபடுத்தி இது நன்மைகளை பெற்றுத்தரும் .
இவை அனைத்தும் நம் பீடத்தில் கிடைக்கும்
வாருங்கள் நன்மையை மட்டும் பெற்று செல்லவும்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்ப்வ்ரும் ஜோதி

நன்றி
சாரம் அடிகள்
http://saramadikal.blogspot.in/

துரை செல்வராஜூ said...

அவன் தாள் வணங்குதல் - (அதற்கும் அவன் அருள் வேண்டும்!)அது ஒன்று தான் உண்மையான பரிகாரம். நன்றி - தங்களுடைய நெறியான பதிவுகளுக்கு!

Unknown said...

நவகோள் வசிய யந்திரம்


ஜாதகத்தில் கோள்கள் எப்படி இருந்தாலும் அவைகள் வசபடுத்தி இது நன்மைகளை பெற்றுத்தரும் .
இவை அனைத்தும் நம் பீடத்தில் கிடைக்கும்
வாருங்கள் நன்மையை மட்டும் பெற்று செல்லவும்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

நன்றி
சாரம் அடிகள்
94430 87944
http://saramadikal.blogspot.in/2013/06/blog-post_1491.html

Unknown said...

தோழி,

நல்ல பயனுள்ள தகவல், உங்கள் தகவல்களுக்கும், சேவைக்கும் பாராட்டுக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

http://anmikam4dumbme.blogspot.in/2013/06/blog-post_9997.html

மிக்க நன்றி...

Unknown said...

ஒளியுடல் ஆக்கும் இரகசியம் பாகம் -2
http://saramadikal.blogspot.in/2013/06/2_8645.html
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
இவண்

சாரம் அடிகள்
94430 87944

ashok said...

tell about 4veedhas pls

siva said...

hi madam

your information is very use full

SHRI BALAJI said...

HOW I GET A NAVAKOL VASIYA ENTHIRAM.

balaicrc@gmail.com

thank you

Bala

SHRI BALAJI said...

HOW I GET A NAVAKOL VASIYA ENTHIRAM.

balaicrc@gmail.com

thank you

Bala

SHRI BALAJI said...

HOW I GET A NAVAKOL VASIYA ENTHIRAM.

balaicrc@gmail.com

thank you

Bala

Post a comment