குரு பெயர்ச்சி பலன்கள் - கடகம், சிம்மம், கன்னி

Author: தோழி / Labels:

குரு பகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு கடந்த வைகாசி 14ம் திகதி அன்று 38 நாழிகை 51 வினாடி அதாவது 28.05.2013 இரவு 09 மணி 24 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார். மிதுன ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள்.

அடுத்த ஓராண்டு காலத்திற்கு கடகம், சிம்மம், கன்னி ஆகிய மூன்று ராசிகளுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.

கடகம்

நட்சத்திரங்கள் - புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கடக ராசிக்காரர்கள் உயரிய சிந்தனைப் போக்கினை உடையவர்களாக இருப்பார்களாம். இத்தகைய கடக ராசிக்கு 11ம் இடமான இடப ராசியில் இருந்து 12ம் இடமான மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்கிறார். இதனை சாதக சிந்தாமணி பின் வருமாறு கூறுகிறது.

இடமது பன்னி ரெண்டில்
இயல்பாகக் குருவும் வந்தால்
கடமையில் கவனம் தேவை
காசுகள் விரயமாகும்
உடமையாய் சொத்து சேரும்
உடல் நலம் அச்சுறுத்தும்
கலங்காது கனிவாய் வாழக்
குருவருள் கை கொடுக்கும்

இதுவரை இருந்த பதினொராவது கட்டமானது அனுகூலமான பலன்களை தந்திருக்கும். இனி அவற்றில் சிறிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்கும் என்றால் மிகையில்லை.எதிரிகளை இனங்கண்டு ஒதுக்கி விட்டு, நல்லவர்களின் அருகாமையை கொள்வது இடர்களை குறைக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாமாம்.

சிம்மம் 

நட்சத்திரங்கள் -  மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் வரை..

சிம்ம ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகளாகவும், விடா முயற்சியுடையவர்களாகவும் இருப்பார்களாம். இத்தகைய சிம்ம ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடத்தில் இருந்த குரு பகவான் பதினோராம் இடமாகிய மிதுன ராசிக்கு பெயர்ந்திருக்கிறார்.

பதினோராம் இடத்தில் பொன்னன்
பவனிதான் செல்லும் போதில்
அதிகாரப் பதவி கிட்டும்
அரசனின் உதவி கிட்டும்
சதிகார பகைவர் கொட்டம் 
தரைமட்டம் ஆகும்; கொண்ட
மதிபோல் ஆண் பெண்ணுக்கு
மாங்கல்ய யோகம் தானே

இந்த குரு பெயர்ச்சியினால் நற் பலன்களைப் பெறும் ராசிகளில் சிம்ம ராசியும் ஒன்று. இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், பண வரவு உண்டாகும்.  இடமாற்றமும் தொழில் மாற்றமும் முன்னேற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகுமாம்.

கன்னி 

நட்சத்திரங்கள் - உத்திரம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , அஸ்தம், சித்திரை 1ஆம், 2ஆம் பாதம் வரை..

கன்னி ராசிக்கு ஒன்பதாம் வீடான இடப ராசியில் இருந்த குரு பகவான் தற்போது பத்தாம் வீடான மிதுன ராசிக்கு பெயர்ந்திருக்கிறார். இதனை சாதக சிந்தாமணி பின் வருமாறு கூறுகிறது.

பத்திலே குருவும் வந்தால்
பதவியில் மாற்றம் சேரும்
முத்தான வாழ்வில் வந்த
முன்னேற்றம் குறை யலாகும்
கொத்தோடு துன்பம் ஓட
குருவருள் உமக்கு தேவை
உற்சாகத் தோடு வாழ
உயர்குணம் வழி வகுக்கும்

இதுவரை இருந்து வந்த அனுகூல நிலைகள் இல்லாது போகும். பொருள் விரயம் இந்த கால கட்டத்தில் உண்டாகும். எண்ணம், செயல், சொற்களின் கவனம் தேவைப் படும் கால கட்டமாகும். இடமாற்றத்தையும் அதிக செலவுகளோடு அலைச்சல்களையும் கொடுக்கும் கால கட்டமிது. பொதுவில் இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாமாம்.

அடுத்த மூன்று ராசிகளான துலாம், விருச்சிகம், தனுசு ஆகியவற்றின் பலன்களை நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

6 comments:

Anonymous said...

நன்றி

Unknown said...

thanks fro giving wonderful information

Anonymous said...

arumaiyaana thoguppu !

Anonymous said...

தூத்துக்குடியில் சாலையோரம் இருக்கும் மனநலம் குன்றிய மக்களை ஒன்றாக சேர்த்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் மற்றும் பார்வையற்றோர் இல்ல 1 வருட உணவிர்க்காகவும் ஒரு சிறு முயற்சி எடுக்க பட்டுள்ளது .

18 சித்தர்கள் படங்கள் (பிறந்த நட்சத்திரம், அவர்களின் குரு, பிறந்த மாதம் , அவர்களின் ஆயுள் காலம் , அவர்கள் ஜீவ சமாதி அடைந்த இடம் )

12 ஜோதிர்லிங்கம் படங்கள்
பெயர்கள்
ஊர்
மாநிலம்


இது வரை யாரும் கண்டிராத சிவபெருமான் 100 வருடங்கள் முன்பு உள்ள படம் .

இந்த தகவல்கள் மொத்தம் அடங்கிய பெரிய படம் (திக் அட்டையில்)

விற்ப்பனைக்கு உள்ளது .

ஒரு படத்தின் விலை 20-/ரூபாய் மட்டும்

நீங்கள் வாங்கும் ஒவ்வறு படமும் மற்றொருவரின் உணவு மற்றும் உடைக்கு உதவும் .

தொடர்புக்கு
பிரபஞ்சத்தின் சூரியன் அறக்கட்டளை
522/2010
23-G v.v.d வளாகம்
தூத்துக்குடி
9442815669
9442815661
0461-2331669 இதை உங்கள் தளத்தில் வெளியிட்டால் சிலரின் உணவு மற்றும் உடைக்கு உதவியாக இருக்கும் நன்றி

Anonymous said...

மிக்க நன்றி சிவா ஒரு சிறிய வேண்டுகோள் இந்த தகவலை உங்கள் தளத்தில் செய்தியாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . 122 மனநலம் குறைந்த மக்களின் மறுவாழ்வுக்கு உதவுவீர்கள் என்று தாழ்பணிந்து கேட்டு கொள்கிறேன் .

Anonymous said...

மிக்க நன்றி சிவா ஒரு சிறிய வேண்டுகோள் இந்த தகவலை உங்கள் தளத்தில் செய்தியாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . 122 மனநலம் குறைந்த மக்களின் மறுவாழ்வுக்கு உதவுவீர்கள் என்று தாழ்பணிந்து கேட்டு கொள்கிறேன் .

Post a comment