படர்தாமரைக்கு ஓர் எளிய தீர்வு!

Author: தோழி / Labels: ,

தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.

இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.

தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது. 

இந்த படர்தாமரை பிரச்சினைக்கு அகத்தியர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். "அகத்தியர் வைத்தியகாவியம்" என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப் பட்டது.

சாகுமாம் படு தாமரைக்குக்கேளு
சாதக மாம்வேரின் பட்டை  
காவதிக மதுக்காரை வேரும்வித்தும்
கழஞ்சிரண்டு பழச்சாற்றில் கரையஆட்டே
ஆட்டியே பாக்களவாய் மூன்றுகட்டி
யப்பனே யுள்ளுக்கும் மேலும்பூசு
வாட்டியே யுதிர்ந்துவிடும் பாரே.

- அகத்தியர்.

மாமரத்தின் வேரின் பட்டையும், மதுக்காரை வேரும் அதன் விதையும் ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றில் இரண்டு கழஞ்சு அளவில் எடுத்து பழச்சாறு விட்டு நன்கு அரைத்து பாக்களவு உருண்டைகளாக மூன்று உருண்டைகள் உருட்டி உண்ணவேண்டுமாம். மிகுதியை படர்தாமரை பாதிப்பு உண்டான இடங்களில் பூசிவர குணமாகும் என்கிறார்.

மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.

குறிப்பு : ஒரு கழஞ்சி என்பது சற்றேற 5 கிராம் ஆகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

14 comments:

Advocate P.R.Jayarajan said...

வாழ்த்துகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க நன்றி தோழி...

arul said...

thanks for sharing an useful post

SACHIN tendulkar said...

ஹ்ருதய பலஹீனத்துக்கு ஏதாவது மருத்துவ முறை உண்டா ! இருந்தால் சொல்லவும்

N.R.P said...

பழச்சாறு என்பது எந்த பழத்தின் சாறு

N.R.P said...

பழச்சாறு என்பது எந்த பழத்தின் சாறு

தோழி said...

@N.R.P

பொதுவில் சித்த மருத்துவத்தில் பழச்சாறு என்னும் பதம் எலுமிச்சம் பழத்தின் சாற்றையே குறிக்கும்.

Ragavendirar Kannaniran said...

பழச்சாறு என்பது lemon பழத்தின் சாறு

Muthu Murugan said...

Thikkuvaai ku ethenum maruthuvam unda?

தேடல் said...


ஒளியுடல் ஆக்கும் இரகசியம் - 3
அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரமும் ஆச்சரியமான அதன் பயன்களும் வருமாறு
http://saramadikal.blogspot.in/2013/06/3.html
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
இவண் ,

சாரம் அடிகள்
94430 87944

Anonymous said...

how long should we do this? and how many times in a day?. Please let me know.

N.R.P said...

நன்றி தோழி

N.R.P said...

நன்றி தோழி

siva kumar said...

enthana nal ethumari sayanum
enthana time orunalaiku sayanum

Post a Comment