குறி சொல்வது எப்படி?

Author: தோழி / Labels: ,

பண்டைய தமிழக வாழ்வியலில் ”குறி” கேட்டல், ”குறி” சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்று. 

இன்றைக்கு இத்தனை தூரம் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் நம்முடைய சமூகத்தில் இத்தகைய குறி சொல்வோர் நிறையவே செல்வாக்குடன் காணப்படுகின்றனர். உண்மையில் இவர்களின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் நேரமில்லை.

குறி சொல்வதில் பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதில் முக்கியமானதாகவும், இலகுவானதாகவும் புலிப்பாணி சித்தர் வரையறுத்துச் சொல்லியிருப்பதை குறிப்பிடலாம்.

இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய “பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாரடா ஆடையொட்ட சமூமைப்பா
பண்பான நின்றிடந் தீஞ்சமூலி
சேரடா கருச்சீலை யிந்த மூன்றும்
செம்மையாய் கருக்கியல்லோ மைபோலாட்டி
சீரடா சுடலையென்ற தயிலஞ் சேர்த்துச்
ஈஷ வீரடா அனுமாரை தியானஞ் செய்து
விதமாகத் திலகமிட்டுக் குறிதான் சொலே.

- புலிப்பாணி சித்தர்.

சொல்லடா அஞ்சனாதேவி புத்ரா
சொகுசான வாயுமைந்தா புருஷரூபா
வல்லவா அனுமந்தா ராம தூதா
வந்துகுறி சொல்லென்று வணங்கி கொள்ளு
இல்லப்பா நினைத்ததெல்லாஞ் சொல்வான் பாரு
என்னசொல்வே னவனுடைய குறிதான் மைந்தா
நல்லப்பா போகருட கடாட்சத்தாலே
நலமாகப் புலிப்பாணி பாடினேனே.

- புலிப்பாணி சித்தர்.

ஆடையொட்டி சமூலம், தீஞ்சமூலி, கருப்புத் துணி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து எரித்து கருக்கி, அதனை கல்வத்தில் இட்டு சுடலைத் தைலம்வார்த்து நன்கு மைபோல அரைத்து அதனை ஒரு மைபதமானதும் அதில் சுடலைத் தைலம் சேர்த்து நன்கு அரைத்து சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.  

பின்னர் குறிசொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து "அஞ்சனா தேவி புத்திரா வாயு மைந்தா புருஷரூபா வல்லவா அனுமந்தா இராம தூதா வந்து குறி சொல்லு" என்ற மந்திரத்தினை செபித்து மையினைத் திலகமாக இட்டு குறி சொல்ல வேண்டுமாம். அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம். இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார்.

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

14 comments:

jscjohny said...

super post! god bless you!

”தளிர் சுரேஷ்” said...

வியப்பான தகவல்! பகிர்வுக்கு நன்றி!

arul said...

nice post

S.Chandrasekar said...

இந்த மையைத்தான் சாமகோடாங்கி (குடுகுடுபை காரன்)நெற்றியில் திலகமாய் பூசிக்கொண்டு சொல்வான், நாம் இதை முயற்சி செய்ய வேண்டாம். இது போன்ற குறி சொல்லும் அமைப்பு ஜாதகத்திலோ/குடும்பத் தொழிலாகவோ இருந்தால் மட்டுமே இது வாய்க்கும். சுடலை மை/தைலம் என்பது முதல் சாமத்தில் மயானத்திர்க்குப்போய் மண்டையோட்டிலிருந்து தயார் செய்யும் மை. இவற்றைப்பற்றி அதர்வணவேதம் நிறைய சொல்கிறது. இந்த செயல்களை குருவில்லாமல் ஒருவர் செய்ய முற்பட்டால் அவருக்கு கெடுபலன் ஏற்படும்.

தோழி இதுபோன்ற பல விஷயங்களை பாடல்கள் மூலம் ஆய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளதை பார்த்தால்,அவருடய உழைப்பு மிகுந்த வியப்பாய் உள்ளது.

kirhmuru said...

OM OM SAKTHI... Mikka nandri.. :)aanal antha porulghalai segharikka atthagaiya sulabam illaiyea... eppadi segharippathu?

LOVESTAR KANNAN said...

thozhi, ningal kuriya poritkalai epadi sekaripathu. allathu veru ethenum elithil kidaikka kudiya porutkalai kondu kuri solla mudiuma ?? thayavu seithu vilakkam tharavum.... endrum natpudan iraa.kannan

LOVESTAR KANNAN said...

veru ethavathu elithil kidaikka kudiya porutkal allathu manthirangal undaa ?

Unknown said...

thohikku vanakkam,
aadai yotta endru padalil varukirthu.....neengal aadaiyotti endru kurippittu ulleerkal sarithana...thavaru irunthal mannikkavum

Unknown said...

வியக்க வைக்கும் பதிவுக்கு நன்றி

S.Chandrasekar said...

Sudalai Mai is also called as Chandala Mai.

S.Chandrasekar said...

நூறு வயதான அண்டங் காக்கை பிடித்து வந்து, அதன் தலை இடித்துப் பார்த்தால் அதில் நீலாஞ்சன கல் இருக்கும். அதை மையுடன் வைத்து பதனம் செய்துகொள்ளனும். இதை இட்டுக்கொண்டு குறி சொல்லலாம், வேண்டய ஜாலங்கள் செய்யலாம். இது ஒரு எளிய முறை அல்லவே. Why many people are interested to say kuri? I think a hunt for the old crow begins now.

தமிழன் said...

Thank u nanbarea! Nengal veadham patri peasuvathu enaku puthumayaga irukirathu! Veadham padika aavalai ullean! Athai seia nan yarai anuga vendum! Athu tamil molizi vayilaga irukuma? Plz help me ! I want learn vedham

Unknown said...

kuri solpavarkalidam kurikettal athu kandippaga nadakkuma

Vetrivel said...

ஆருமை

Post a comment