மின்னூல் - காலங்கிநாதர் அருளிய "பூஜாவிதி 85”

Author: தோழி / Labels: ,

நண்பர்களே,

மிகவும் பழமையான சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியில், பதினாறாவது படைப்பாக காலங்கிநாதர் அருளிய "பூஜாவிதி 85” என்ற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.

காலங்கி நாதர் திருமூலரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சொல்வதை விட கேட்பதே சிறந்தது என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதனால் பல்வேறு சித்தர் பெருமக்களை தேடிச் சென்று பலதகவல்களை அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் காஞ்சியம்பதியில் சமாதியடைந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது.

இத்தனை பெருமை கொண்ட சித்த புருஷரின் இந்த நூலானது அவரது பரந்து பட்ட அனுபவத்தின் தொகுப்பாக விளங்குகிறது. கணபதி பூஜை முதல் நவக்கிரக பூஜை, மூலிகை வித்தை, யந்திர பூஜைகள், மருந்துகள், கற்பவகைகள், மைகள், வாதவித்தைகள், குளிகைகள் போன்ற பல அரிய தகவல்களையும் அதன் முறைகளையும் தெளிவாக விளக்கி கூறியிருக்கிறார்.

"ஆமப்பா பூசைவிதி மார்க்கந் தன்னை
அன்பு வைத்து கைமுறைகள் அதிகம் சொன்னேன்
ஓமப்பா கைமுறைகள் அதிகம் சொன்னேன்
உண்மையுள்ள பூசையது நுணுக்கமெத்த"

தமிழ் அறிந்த அனைவரும் இத்தகைய பெருமை வாய்ந்த நூலின் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் மின் நூலாக தொகுத்திருக்கிறேன். இத்தகைய முயற்சிகளின் வெற்றி என்பது இத்தகைய நூல்கள் எத்தனை பேரைச் சென்று அடைகிறது என்பதில்தான் இருக்கிறது. எனவே தயவு செய்து இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல...

மேலான எனது குருவினை பணிந்து இந்த நூலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


என்றும் நட்புடன்,

தோழி..
www.siththarkal.com

தொடர்புக்கு:-
siththarkal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

14 comments:

S.Puvi said...

நன்றி

Unknown said...

thanks a lot...

jana said...

supper thanku very much

maanthreega guru said...
This comment has been removed by the author.
maanthreega guru said...
This comment has been removed by the author.
maanthreega guru said...
This comment has been removed by the author.
Remanthi said...

அருமை...

Sathiyamoorthy Rajarathinam said...

nalvazhthugal.kindly request to post tamil version after proof reading.a great endeveour.

Sathiyamoorthy Rajarathinam said...

nalvazthugal.a great endaevour.tamil version need be posted with correct spelling pl.

s mosaas said...

உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள், இந்த மின்னூலை உரைநடையுடன் தொகுத்து அளித்தால், உங்கள் சேவையால் நாங்கள் முழுப்பயன் அடைவோம்.
நன்றி

s mosaas said...

தோழி,
உங்கள் பணி மேன்மையடைய வாழ்த்துக்கள்,
உங்கள் மின்னூல் தொகுப்பை உரை நடையுடன் இருந்தால் என்னை போன்றோர் பயனடைவோம். நீங்கள் முயற்சி செய்தால் முடியும்...........
நன்றி

Krishnamurthy said...

Respected Thozi,
Will you please get me the copy of slokas pertains to child Bala and her POOJA method in Sanskrit.my email I.d is skmurthy1949@yahoo.co.in. Pl help me.
With regards,
S.krishnamurthy.

Maduraifolks said...

awesome....good work

Prajeeth Prasadan said...

நன்றி

Post a Comment