தமிழர்கள் வாழ்வில் தீ வளர்த்து செய்யும் சடங்குகள் எப்போது துவங்கியது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை. ஆனால் அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் இந்த சடங்குகள் குறித்த தகவல்களை அளித்திருக்கின்றனர். வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல பெயர்களால் வழங்கப் படும் இந்தத் தீச்சடங்கு குறித்த அறிமுகங்களையும் அவற்றின் வகைகளையும் ஏற்கனவே பல பதிவுகளின் ஊடே பகிர்ந்திருப்பதால், நேரடியாக சத்ருஜெய ஹோமம் பற்றி பார்ப்போம்.
புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் ஹோமச் சடங்குகள் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசித்து விட வேண்டுகிறேன்.
அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து இந்த தகவல்கள் சேகரிக்கப் பட்டது.
கெடியான நாற்கோண குண்டம்செய்து
தயங்காதே நாயுருவி சமித்துவாங்கி
திறமாக அக்கினியேதான் வளர்த்து
மயங்காமல் புவனையுட மந்திரந்தன்னால்
மகத்தான கொடியறுகா லோமம்பண்ணு.
- அகத்தியர்.
செய்யப்பா நூத்தெட்டு ஆகுதியேசெய்ய
சிறுமையோடு சதிநோக்கும்சத்ருகள் சிதறிப்போகும்
போமடா சதிகளெலாம் முனைக்கண்டபோதே
பொல்லாங்கு செயல்களெல்லாம் நில்லாதையா
சொல்லடா சொல்லுதற்கு நாவேயில்லை
சத்ருஜெய ஓமத்தின் பெருமைதானே.
- அகத்தியர்.
இந்த ஹோமத்திற்கு நாற்கோண ஹோம குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம். பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த ஹோம குண்டத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.
ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில் நாயுருவி குச்சிகளை இட்டு தீ வளர்க்க வேண்டும், அப்படி தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை கூறியவாறே தீயை வளர்க்க வேண்டும்.
நன்கு வளர்ந்த தீயில் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே கொடியறுகினைப் போட வேண்டுமாம். இப்படி 108 தடவை மந்திரம் சொல்லி கொடியறுகினைப் போடவேண்டும் என்கிறார்.
இப்படி செய்வதன் மூலம் இந்த ஹோமத்தை செய்தவரின் எதிரிகள் இல்லாது நீங்குவதுடன், சதிச் செயல்கள், பொல்லாங்குகளினால் எவ்வித துன்பமும் விளையாது என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தை எவரும் செய்து பலனடையலாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
10 comments:
அருமையான தகவல் நன்றிகள் பலப்பல !
Thanks for rare information...
thanks for sharing
The homams mentioned here are easy to understand but they have to be performed under the direction of mantreega sastrigal.
Please don't try and individually experiement on trial basis! Mantreegam cannot be taught and learnt through visual correspondence.
தோழி எனக்கு ஒரு சந்தேகம் "ஜ" என்கிற எழுத்து சமஸ்கிருத எழுத்து தமிழ் சித்தர்கள் எப்படி இதை பயன்படுத்தி இருப்பார்கள்
திரு. வினோத் அவர்களே:
பீஜம் என்பது பாரத தேசத்தைப் பொருத்தவரை ஒன்றே. அதில் வடமொழி/ தென் மொழி என்று ஏதும் இல்லை. Beejam என்பது தெய்வீக ஆகர்ஷ ஒலி சப்தங்களின் வெளிப்பாடு.
'ஜெகதீஸ்வரி' என்ற சொல்லை தென் மொழியில் எழுதினால் 'சகதீசுவரி' என்று ஒலிக்கும். அது கேட்கவே அவலட்சணமாக இருக்கும்.
அகத்தியர் சமஸ்கிருதத்தில் பல நூல்கள் எழுதியுள்ளார். உலகம் சமநிலை பெற தென்புலம் வந்தவர், இங்கே பொதிகை மலையில் முருகனருளோடு தமிழை வளர்த்தார். மந்திரங்களுக்கு உச்சாடனம்தான் முக்கியம். தமிழ் இலக்கிய ஆய்வில் 10கிமு முதல் 5கிபி வரை பலமுறை எழுத்துக்கள் மாறியுள்ளது தெரிகிறது.
நான் ஒரு எழுத்தாளராக இருந்தாலும், தமிழில் குறைபாடு உள்ளது என்பதை மந்திரங்கள் படிக்கும்போதுதான் தெரிந்துகொண்டேன். எந்த சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் பலருக்கும் சிரமம் உண்டு. பீஜ ஒலி மாறினால் மந்திரத்திற்கு பலன் இல்லை, கெடுபலன் வரலாம். மந்திர சொற்களை 'கனம்' குறையாமல் பாடவேண்டும்.
அப்படி உச்சாடனம் செய்வது ஒரு கலைதான். வேதங்களை சப்தநயத்துடன் ஓதும் புலவர்களை 'கனபாடிகள்' என அழைப்பதுண்டு.
போகர் பாடல்களிலே நான் ஆய்வு செய்தவரை, இப்போது பேசும் தெலுங்கு வார்த்தைகளும் சில இடம்பெற்றுள்ளன, அது எப்படி? சித்தர்களின் காலத்தில் முரண்பாடுகள் இல்லை போலும்...! தமிழ் வளர்த்த அகத்தியர் வடமொழியாளர் அன்றோ...?
@த . வினோத் அந்தியூர்nanbarey ja enra eluthey ingu illayeh
நீங்கள் சொல்வது சரி. அதைத்தான் சொல்கிறேன் 2500 வருடங்களில் உயிர், மெய், மற்றும் சார்பு எழுத்துக்கள் எல்லாம் மாற்றம் கண்டு வந்துள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளார்கள். தமிழில் மொத்த எழுத்து என்றால்: உயிர்-12, மெய்-18, ஆயிதம்-1. இவ்வளவே. ஆனால் உயிர்மெய் என்ற derivatives சேர்த்து நாம் 216 என்கிறோம், அது தவறு. They are not new alphabets.
சமஸ்க்ருதத்திலும் ஏனைய மொழிகளில் உள்ளது போல் ka, kha, ga, gha, jna போன்ற அமைப்பு தமிழில் இல்லை என்பதால், அதில் 'கனம்' வராது. ஆக தமிழ் மொழியில் மென்மையான வடிவம்தான் உண்டு. பயம் என்பதை payam என சொல்லவேண்டும், சக்கரம் என்பதை sakkaram என சொல்லவேண்டும். நாம் பிற மொழிபேசும் மாநிலங்களிலிருந்து வருவதால் அதன் தாக்கம் தமிழில் அதிகமாகவே தெரியும். இலங்கை, மலேசியா, சிங்கபூர், இங்கெல்லாம் உள்ள தமிழ் மக்கள் இன்னும் நல்ல உச்சரிப்போடு பேசிவருகிறார்கள்.
ஆனால் மந்திர பீஜங்கள் எழுதும்போது இது சிக்கலாக போய்விடும் என்பதால் 'ஜ, ஷா, ஹ, க்ஷ, ஸ' போன்ற எழுத்துக்களை, அந்த பிரத்யேக காரணத்திற்காக பயன் படுத்துகிறோம். இதை conjunct /consonants என்று கொள்ளவேண்டும். மேல் சொன்ன கணக்கில் இவை வராது. சித்தர்களின் பல பாடல்களை நான் ஆய்வு செய்துள்ளேன் அதில்லேலாம். பல எழுத்தக்கள் சில இடங்களில் போலியாகவும், சப்த அழகுக்காகவும், ஓசை நயத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டது தெரிகிறது. ஆனால் பீஜ எழுத்துக்கள் அப்படியே தான் வருகிறது. 20 நூற்றாண்டுகளுக்கு மேல் புலிப்பாணி சந்ததியினர் அதன் நூல் பிரதியை புதுபிக்கும்போது திருத்தங்கள் எப்படி செய்யவேண்டும் என்பதையும் போகர் தன் பாடலில் தெளிவாக சொல்லியுள்ளார்.
அகத்தியர் கூறிய பாடல்களை, அதில் இருப்பதை அப்படியே ஏற்போம், தமிழ் வளர்த்த அவரே இதை exceptions அடிப்படையில் செய்திருக்கலாம். நாம் அதில் ரிஷி மூலம் நதி மூலம் ஆராயாமல் விட்டுவிடுவோம். Etymologist மட்டுமே தக்க விடை சொல்ல இயலும்.
என் சிற்றறிவுக்கு தெரிந்த நீண்ட விளக்கத்தை அளித்து உங்கள் பொறுமையை சோதித்தேனோ?
nice
ஒரு பிரச்சனைக்கு வழி சென்னால் அதையே ஒரு பிரச்சனையாக்குவது சரியா? ? ?
Post a Comment