குருபெயர்ச்சி என்றால் என்ன?

Author: தோழி / Labels:

சித்தர்களின் சோதிட இயல் பெரும்பாலும் வாக்கிய பஞ்சாங்க கணித அடிப்படையில் அமைந்தது. ஒவ்வொருவரும் தங்களின் பெயர்களில் சோதிட நூல்களை அருளியிருப்பதால் நாம் பொதுவில் சித்தர்களின் சோதிட இயல் என்றே குறிப்பிடுவோம். நாம் இதுவரை குரு பகவானைப் பற்றியும் அவரது அம்சங்களை பற்றியும் பார்த்தோம்.

கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது 12 ராசிகளின் அமைப்பை காட்டும் கட்டம். இதில் ஒவ்வொரு ராசியின் பெயரும் அதன் அதிபதியின் பெயரும் குறிப்பிடப் பட்டிருப்பதை காணலாம். இதில் ஒன்பதாவது ராசியான தனுசு மற்றும் பன்னிரண்டாவது ராசியான மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பகவான் அதிபதியாகிறார். சூரியனையும், சந்திரனையும் தவிர்த்து மற்ற கோள்கள் ஒவ்வொன்றும் இரண்டு ராசிக்கு அதிபதியாக இருப்பதையும் நீங்கள் அவதானிக்கலாம்.
குரு பகவான் ஒரு ராசியில் ஒருவருட காலம் வாசம் செய்கிறார் என்று நேற்று பார்த்தோம். அவர் எந்த இராசியில் வாசம் புரிகிறாரோ அங்கிருந்து மற்ற ராசிகளை அவர் பார்க்கும் பார்வையினைப் பொறுத்தே பலன்கள் எழுதப் படுகிறது. இவை ஒரு கணித சூத்திரத்தின் கச்சிதத்தோடு சித்தர் பெருமக்களால் அருளப் பட்டிருக்கிறது. குரு பகவான் இடப இராசியில் இருந்து அடுத்த ராசியான மிதுன ராசிக்கு பிரவேசிப்பதையே குரு பெயர்ச்சி என பரபரத்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப் பெயர்வதால் அடுத்த ஒருவருட காலம் மிதுன ராசிக்கும் அங்கிருந்து அவர் பார்ப்பதனால் மற்ற ராசிகளுக்கும் உண்டாகப் போகும் பலன்களைச் சொல்வதே குரு பெயர்ச்சி பலன்கள் என்கிறோம்.

வாக்கிய பஞ்சாங்க கணிதத்தின் படி  குருபகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு வைகாசி 14ம் திகதி அன்று 38 நாழிகை 51 வினாடி அதாவது 28.05.2013 இரவு 09 மணி 24 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார். மிதுன ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள்.

எல்லாம் சரிதான், குரு பெயர்ச்சி பலன்களை பார்ப்பதற்கு முன்னர் குரு பகவான் அருளும் நன்மை, தீமைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?...

விவரங்கள் அடுத்த பதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விளக்கம்... மேலும் அறிந்து கொள்ள தொடர்கிறோம்...

துரை செல்வராஜூ said...

குரு பெயர்ச்சி என்று தலைப்பிட்டு - ஆலமர் செல்வன் என புகழப்படும் தட்க்ஷிணாமூர்த்தி இடம் மாறி அமர்வது போல படம் வெளியிடும் கருத்துக் குருடர்கள் சிந்திக்க வேண்டும்!..

Anonymous said...

aavaludan aduttha pathivinai ethirpaarthu !

Advocate P.R.Jayarajan said...

adutha pathivu mukkiyamana onru... viraivil yethirpaarkinrom....

Yuvaraj said...

என் பெயர் யுவராஜ் . நான் 15.06.1992 அன்று பிறந்தேன். என்னுடைய ராசி விருட்சுகம் நஞ்சத்திரம் கேட்டை . என்னுடைய ஜாதகம் எப்படிபட்டது என்று எனக்கு தயவுசெய்து கூறுங்கள். என்னுடைய e-mail id: yuvaraj.ramesh@gmail.com

Post a comment