குரு

Author: தோழி / Labels:

எந்த ஒரு தினசரியாகட்டும், வாராந்திரி ஆகட்டும், மாதாந்திரி ஆகட்டும் புரட்டுகிற பக்கமெல்லாம் குரு பெயர்ச்சி பற்றிய விளம்பரங்களும், பலன்களும் என பரபரப்பாக காட்சி அளிக்கின்றன. ஒருவரோ ஒரு ராசிக்கு பயமுறுத்தும் பலன்களைச் சொல்கிறார், மற்றவரோ அதே ராசிக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டப் போவதாக பலன் எழுதுகிறார். இவற்றில் எது உண்மை, எது பொய் என்ற குழப்பம் இந்த பலன்களின் நம்பகத் தன்மை மீது ஒருவித சந்தேகத்தினையும் உருவாக்கி விடுகிறது. வர்த்தக ரீதியாக இதை அணுகிடுவோர் ஒரு போதும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதேஇல்லை.

சோதிட இயல் பற்றி சித்தர் பெருமக்கள் பரந்து பட்ட அளவில் தகவல்களை அருளியிருக்கின்றனர். இவை புத்தகங்களாகவும் அச்சேறி இருக்கின்றன. நம்முடைய பதிவிலும் கூட சோதிடவியல் பற்றிய தகவல்களை முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். 

இனி வரும் நாட்களில் குரு பகவான் குறித்தும், அவரின் இயல்புகள், நகர்வுகள், அதனால் உண்டாகும் பலன்கள், அதற்கான பரிகாரங்கள் பற்றி சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களைப் பார்க்க இருக்கிறோம். குருவின் மகத்துவம் பற்றி பல்வேறு பழந்தமிழ் நூல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. புலிப்பாணி சித்தர் குருவின் மகத்துவத்தினை பின்வருமாறு கூறுகிறார்.

ஓமென்ற வியாழனுக்கு ஆட்சிகேளு
உண்மையுடன் தனுமீன மிரண்டேயாகும்
காமென்ற கற்கடகம் உச்சமாகும்
கனமில்லா மகரமது நீச வீடாம்
போமென்ற விருச்சிகமும் பகையதாகும்
புகழ்பெற்ற மற்றேழு ராசிநட்பாம்
நாமென்ற போகருட கடாக்ஷத்தாலே
நயமாக புலிப்பாணி நவின்றிட்டேனே.

குருவானவர் சோதிட இயலில் ஐந்தாவது கோளாக குறிக்கப் படுவதுடன். பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார். அவையாவன...

வியாழன், அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டனப்பான், குரு, சிகண்டிசன், சீவன், சுருகுறா, தாரபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகற்பதி, வீதகன், பொன், மறையோன், வேதன், வேந்தன் என்பனவாகும்.

குருவின் குண இயல்புகள் மற்றும் அவரின் அம்சங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க... 
Post a Comment

13 comments:

jana k said...

sister nallai gurupairchi thankgalin pathivai migavzm avaludan ethir nokiyulom valga alamuden !

N.R.P said...

விரைவில் வந்தமைக்கு நன்றி
பணிகள் சிறப்பாக நடந்தேறியதா

N.R.P said...

விரைவில் வந்தமைக்கு நன்றி
பணிகள் சிறப்பாக நடந்தேறியதா

Unknown said...

K

Unknown said...

K

Bogarseedan said...

Welcome back. Interesting information.

Unknown said...

நன்றி தோழி.......
சில நாட்கள் கழித்து
உங்களது பதிவுகளை பார்ப்பது....
" ஊருக்கு சென்ற தந்தை
கையில் பையுடன்
வரும்பொழுது,,
தோன்றும் உணர்வே மேலிடுகிறது...
இனம் புரியாத சந்தோஷம் ..
காரணமே இல்லாமல்
மகிழ்வோடு இருக்கிறேன்...
நன்றி தோழி....

மு.சரவணக்குமார் said...

மீண்டும் பதிவுகளை எழுத ஆரம்பித்தமைக்கு நன்றி.

S.Puvi said...

சோதிடக்கலை தற்பொழுது வியாபாரப்பொருளாகிவிட்டது.
தங்ளின் பதிவுகளுக்கு நன்றிகள்

kimu said...

நன்றி தோழி.

Anandhan said...

ஐயா என் பெயர் ஆனந்தன்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அரசூர் கிராமம் வசித்து வருகிறேன்.நான் விநயகர் கோவில் பணியில் இருக்கிறோம் எப்படி கட்டுவது என்ன பெயர் வைப்பது என்று தெரியவிலலை தயவு செய்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் kranandhan@yahoo.co.in,kranandhan.guru@gmail.com,9941813517,944525088

Anonymous said...

Good topic thozhi.. I will wait for your next post.

Thank you

Anonymous said...

விருச்சிகம் வீடு பகை என்ற தகவல் எனக்குப் புதிது .நன்றி தோழி !

Post a comment