சித்தர்களின் சோதிட இயல் என்பது வாக்கிய கணித பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், அதனூடே விளக்கப் பட்ட குரு பகவானின் அம்சங்களை பற்றியும் இதுவரையில் பார்த்தோம்.
இந்த இடத்தில் குரு பகவானின் உருவம் எத்தகையது என்பதைச் சொல்லும் ஒரு பாடலை பகிர விரும்புகிறேன். இந்த பாடல் பழந்தமிழ் நூலான “சாதக சிந்தாமணி” என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.
இந்த இடத்தில் குரு பகவானின் உருவம் எத்தகையது என்பதைச் சொல்லும் ஒரு பாடலை பகிர விரும்புகிறேன். இந்த பாடல் பழந்தமிழ் நூலான “சாதக சிந்தாமணி” என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.
கண்ணு முடலும் பொன்னிறத்திற்
றடித்த தேகன் கபமுள்ளோன்
எண்ணும் புத்திய னொண்குருவாம்
எழிலார் வடிவன் கபவாதன்
இரவி முதலா லயஞ்சலந்தீ
விகாரங் கோச மணையெச்சில்
பெரிது புதுமை தீனைவு
நடுவு பலத்த கிழிந்ததுகில்
கருது செம்பு மணிபொன்வெண்
கலமே வெள்ளி முத்திரும்பாம்
தெரிசுன் சுங்கன் சேய்மதிமால்
பொன்திரேக் காணஞ் சசியாதி.
இயல்பில் சாந்த குணம் கொண்டவரான குருபகவான், பொன்னிறமான கண்களையும், பெருத்த தேகத்தை உடையவராக உருவகப் படுத்தப்பட்டிருக்கிறார். கபம் தொடர்பான நோய்களுக்கு அதிபதி குருபகவான்.
தற்போதைய அமைப்பின் படி குருபகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார் இத்தகைய பெயர்ச்சி பற்றி புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
பாரப்பா பரமகுரு நாலேழ்பத்துபகருகின்ற கோணமுடன் தனமும் லாபம்
சீரப்பா சென்மனுக்கு யோகம் செப்பு.
செந்திருமால் தேவியுமே பதியில் வாழ்வாள்
கூறப்பா குடினாதன் கண்ணுற்றாலும்
குவளயத்தில் வேகுபேரை ஆதரிப்பான்
ஆரப்பா ஆறெட்டு பன்னிரண்டு
அறைகின்றேன் தின்பலனை அன்பால்கேளே.
- புலிப்பாணி சித்தர்.
கேளப்பா யெட்டுக்கு வேசிகள்ளன்
கெடுதியுள்ள மனைவிபகை நோயால்கண்டம்
ஆளப்பா அரசர்பகை பொருளுஞ்சேதம்
அப்பனே அவமானம் கொள்வண்டம்பன்
தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு
தார்வேந்தர் பகையுமுண்டு ரோகமுண்டு
கூறப்பா ஈராறில் எங்கோனாட்சி
குற்றமில்லை சென்மனுக்கு யோகங்கூறே.
- புலிப்பாணி சித்தர்.
வலிமை யான இடங்களான 4, 7, 10 ஆகிய நிலைகளில் குருபகவான் நிற்பாரானால் குறிப்பிட்ட அந்த ஜாதகர் பெரும் யோகம் பெற்றவராக இருப்பதுடன், சாதகரின் வீட்டில் தனலக்ஷ்மி வாசம் செய்வாளாம்.
முக்கியத்துவம் வாய்ந்த 6, 8, 12 போன்ற இடங்களில் குருபகவான் நிற்பாராக இருந்தால் ஜாதகருக்கு உண்டாகும் பலன்களாவது, ஜாதகருக்கு எட்டாம் இடத்தில் குரு நிற்பாராயின் ஜாதகர் பெண்பித்தராகவும், திருடனாகவும் இருப்பதுடன் நோய்களால் கண்டம் போன்றவைகள் உண்டாகுமாம். இதுபோன்று ஆறாம் இடத்தில் குரு பகவான் நிற்பாராக இருந்தால் மனைவி/கணவருடன் சுமூகமான உறவு இல்லாதிருப்பதுடன் அரசாங்கத்துடன் பகையும் உண்டாகுமாம். இது போல் குரு பகவான் 12-ம் இடத்தில் நிற்பாராராக இருந்தால் அது குருபகவானின் உச்சஸ்தானம் என்று சொல்லப் படுகிறது இதனால் ஒரு கெடுதலும் நேராது என்றும் மிக யோகமான வாழ்வும் உண்டாகும் என்கிறார்.
இனி வரும் பதிவுகளில் இந்த குருபெயர்ச்சியினால் ஒவ்வொரு இராசிக்கும் என்ன பலன்கள் உண்டாகும் எனபதைப் பற்றி பார்ப்போம்..
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...