வள்ளல் பெருமானின் மறைவு!

Author: தோழி / Labels:

1874ம் வருடம் ஜனவரி 30ம் தேதி, வள்ளல் பெருமான் தன்னுடைய அணுக்கத் தொண்டர்களுக்கு அருளாசி வழங்கி விட்டு, தான் பத்து பதினைந்து தினங்கள் தனியறை ஒன்றில் இருக்கப் போவதாகவும், அறையின் கதவைத் திறக்க வேண்டாமெனவும், அப்படித் திறந்து பார்த்தால் யாருக்கும் எதுவும் தெரியாது. வெற்று அறையாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு, இரவு 12 மணி அளவில் சித்தி வளாகத்தில் இருந்த மாளிகையின் அறையொன்றில் நுழைந்தார். 

அவரது அணுக்கத் தொண்டர்கள் அந்த அறையின் வெளிப் புறத்தை தாழிட்டுப் பூட்டினார்கள். அதற்குப் பிறகு வள்ளல் பெருமானை யாரும் உயிரோடு பார்க்கவில்லை. ஆம்!, பூட்டிய அறைக்குள் போனவரைக் காணவில்லை. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், அவர் ஜோதியில் ஐக்கியமாகி விட்டதாக ஒரு கருத்து உருவாக்கப் பட்டு இன்று வரை அதுவே நம்பப்படுகிறது. 

அப்போது தென்னாற்காடு மாவட்டத்தின் கலெக்ட்டராக இருந்த J.H.GARSTIN என்பவர் நேரிடையாக சித்திவளாகத்திற்கு வந்து வள்ளல் பெருமானின் மறைவு குறித்து விசாரணை நடத்தி குறிப்பு எழுதியிருக்கிறார். இந்த விசாரணை அங்கிருந்தவர்களிடம் மட்டும் நடத்தப் பட்டிருக்கிறது. வள்ளல் பெருமானை இருந்த அறையினை திறந்து சோதனை எதுவும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.  

J.H.GARSTIN தன்னுடைய அறிக்கையில் வள்ளல் பெருமானின் மறைவைக் குறித்து பின்வருமாறு குறிப்பு எழுதியிருக்கிறார்.

A village of 1, 189 inhabitants lying 23 miles south west of Cuddalore on the Vridhachalam Road. The place is connected with one Ramalinga Paradesi (Swami Ramalingam), a somewhat curious example of a later day Saint who has been almost deified by his followers. Born in 1823 in the Chidambaram Taluk of Vellala parents in humble circumstances, he developed, while still little more than a boy, an undeniable talent for versification, and his poems brought him into notice. They dealt with religious matters; some of them like those of the famous saivite saints of old, were composed in eulogy of the merits of the deities of certain shrines such as the temples at Tiruttani in North Arcot and Tiruvottiyur near Madras; others took for their subject the beauties of the higher life. It was these that led to his becoming gradually regarded as a spiritual guide and teacher. After visiting many of the well-known sacred places of the south, he finally settled at Karunguli, the next village to Parvatipuram. At its height his influence must have been very real, his admirers and disciples, who included even level-headed Government officials, are said to have changed their residence and gone to live where they could be constantly near him. About 1872, the curious octagon-shaped Sabha with the domed roof which is to be seen at Vadalur, a hamlet of parvatipuram, was erected by him from subscriptions. It is said that the spot was chosen because from it are visible the four great towers of Nataraja's shrine at Chidambaram. It is not an ordinary temple, the detail of the worship in it being unusual. Ramalinga Paradesi (Swami Ramalingam) seems to have persuaded his disciples that they would rise again from the dead and he consequently urged that burial was preferable to cremation. Even Brahmins are said to have been buried in this belief and people who died in other villages were in several cases brought to Vadalur and interred there. In 1874, he locked himself in a room (still in existence) in Mettukkuppam (hamlet of Karunguli), which he used for Samadhi or mystic meditation, and instructed his disciples not to open it for sometime. He has never been seen since, and the room is still locked. It is held by those who still believe in him that he was miraculously made one with his god and that, in the fullness of time he will reappear to the faithful. Whatever may be thought of his claims to be a religious leader, it is generally admitted by those who are judges of such matters that his poems, many of which have been published, stand on a high plane, and his story is worth noting as an indication of the directions which religious fervor may still take. 

(South Arcot Manual by J.H.Garstin, I.C.S., Collector of S.A. District, First Edition, 1878; Second Edition, 1906 as South Arcot Gazetteer by W. Francis, I.C.S., Collector of South Arcot District, pages 316 & 317 :(Published in South Arcot District Gazette - 1878)-Collctorate)

வள்ளல் பெருமானுக்கு முன்னரோ, அல்லது அவருக்கு பின்னரோ யாரும் இப்படி பூட்டிய அறைக்குள் போய் ஜோதியில் கலந்ததாய் வரலாறு இல்லை. சித்த புருஷர்கள் கூட சமாதியானதாகத்தான் குறிப்புகள் உண்டு. நம்பிக்கை என்பதைத் தாண்டி மெய்யறிவோடு யோசிக்கத் தெரிந்த எவருக்கும் வள்ளல் பெருமானின் மறைவு குறித்த சந்தேகங்கள் எழுவது இயல்பே. இந்த சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் சில குறிப்புகளை இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

சுவாமி சித்பவானந்தா என்பவர் ”தர்மசக்கரம்” என்னும் பத்திரிக்கையில் வள்ளல் பெருமானின் மறைவைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“இராமலிங்க வள்ளலார், மிக அண்மையில் மறைந்தவர்.  அவர் தன் உடலைப் பஞ்சீகரணம் செய்து விட்டு ஜோதியில் கலந்து விட்டார் என்னும் நம்பிக்கை அவருடைய அடியார்களுள் ஒரு சிலர்க்கிடையில் இருக்கிறது.  மற்றொரு சிலர் அவர் பூதவுடலை ஜோதியில் கரைத்து விடவில்லை; மற்றவர்கள் போன்று உடலை உகுத்து விட்டுப் பரஞ்சோதியில் கலந்தார் என்று பகர்கின்றனர்.  இப்பொழுது வடலூரில் கட்டு விக்கப்பட்டிருக்கும் ஞான சபைக்கு அருகிலுள்ள மேடையினுள் அவர் உகுத்த பூதவுடலை இரகசியமாக அடக்கம் செய்து விட்டனர் என்று பலர் பகர்ந்து வருகின்றனர். இதன் மர்மம் எதுவாயினும் நமக்குக் கவலையில்லை. இராமலிங்க வள்ளலார் உலகு அறிய வெளிப்படையாக ஜோதியில் கலக்க வில்லை என்பது உண்மை.” 

கருத்து மோதல்கள் என்றாலே உடனே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் அன்றைய கால கட்டத்தில் சுவாமி சித்பவானந்தாவின் இத்தகைய கருத்துக்கு எதிராக யாரும் வழக்குத் தொடர்ந்ததாகத் தெரியவில்லை. மேலும்  1883ல் மார்ச் 18ம் தேதி வெளியான "தத்துவ விவேசினி” என்ற இதழில் வள்ளல் பெருமானார் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்தச் செய்தியை வள்ளல் பெருமானின் அணுக்கத் தொண்டரான காஞ்சிபுரம் வரதராச முதலியார் என்பவர் மறுத்திருக்கிறார். 25 -3 -1883 வெளியான "தத்துவ விவேசினி” இதழில்  இவரின் மறுப்பு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

இவை தவிர வள்ளல் பெருமானார் அவரது எதிரிகளால் கொலை செய்யப் பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. கற்பூர மூட்டைகள் நிரப்பிய அறைக்குள் தந்திரமாக வரவழைக்கப் பட்டு கொளுத்தப் பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனை வலியுறுத்தும் ஆவண, ஆதாரங்கள் எதுவுமில்லை. பின்னாளில் மறைமலை அடிகளார் போன்ற  அறிஞர்களும் தங்கள் ஆய்வின் முடிவில் வள்ளல் பெருமானார் ஜோதியில் கலந்ததாக கூறப்படுவதை நிராகரித்திருக்கின்றனர்.

ஐம்பது ஆண்டுகள், ஒன்பது மாதம் நீடித்த வள்ளல் பெருமானின் வாழ்க்கை, வாழும் போதும் சரி, வாழ்க்கைக்குப் பிறகும் சர்ச்சையானதாகவே இருந்திருக்கிறது. இத்தனை தடைகளையும் தாண்டி அப் பெருமகனார் நமக்கு விட்டுச் சென்ற மெய்யறிவும், மெய்ஞானமும் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கைக் கொள்ள வேண்டியது என்பதில் மட்டும் மாற்றுக் கருத்து இல்லை.

தாம் வாழும் காலத்தைத் தாண்டிய சிந்தனைப் போக்கு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தவர்களின் மீது உருவாகும் இயல்பான ஆச்சர்யத்தினால் அவர்களின் மீது தொன்ம சித்திரங்களை உருவாக்கி, அப் பெருமக்களை மிகை மனிதர்களாக்கி மகிழ்வது நம் இயல்பு. அத்தகைய மிகையான கதைகளுக்கு  வள்ளல் பெருமானாரும் விதிவிலக்கில்லை. அவர் மீது புனையப் பட்டிருக்கும் அற்புதங்களோ, அதிசயங்களோ என்னை ஈர்க்கவில்லை. அதன் பொருட்டே அத்தகைய கதைகளை இந்த தொடரின் நெடுகே தவிர்த்திருக்கிறேன். 

இன்று வள்ளல் பெருமானாரை குருவாய் கருதிச் செயல்படுவோர் எத்தனை தூரம் அவரின் நெறிகளுக்கு நேர்மையானவர்களாக இருக்கின்றனர் என்பது கேள்விக்கும் விவாதத்திற்கும் உரியது. அவர் எதையெல்லாம் நிராகரித்தாரோ அதையெல்லாம் அந்த மாமனிதரின் மீது புகுத்தி அவரை நவீன சைவராக காட்டிடும் முயற்சிதான் நிதர்சனத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. வள்ளல் பெருந்தகையின் பேரைச் சொல்லி பணம் பண்ணுவோர் இன்னொரு பக்கம் செழித்தோங்கிக் கொண்டிருப்பதும் வருந்தத்தக்கது.

என் வரையில் மெய்யான மெய்யறிவை தேடித் தெளிந்த அந்த மெய்ஞான குருவுக்கு என்னாலான  மிகச் சிறிய காணிக்கையாக இந்த தொடரை சமர்ப்பித்து  நிறைவு செய்கிறேன். இந்த தொடரில் ஏதேனும் கருத்துப் பிழையோ அல்லது தகவல் பிழையோ நேர்ந்திருப்பின் அதற்காக எனது வருத்தங்களை பதிவு செய்திட விரும்புகிறேன். தவறுகளை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்.

குருவடி சரணம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

33 comments:

srini srirangam said...

One time ST.VALLALAR gave ARUL ASI thro'JEEVA ARULNADI TANJORE.At that time ST. VALLALARhas confirmed that he made himself IKKIAM AT JOTHY. So nobody has taken his life. That is the truth. Srini Srirangam

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

குருவடி சரணம். நன்றி தோழி. அற்புத பதிவுகள் என்னையும் கவர்ந்தன.

Remanthi said...

அற்புதமானது உங்களின் இந்த படைப்பு... வாழ்த்துக்கள் தோழி... :)

Saran K Advaithan said...

வள்ளல் பெருமான் ஜோதியில் கலக்கவில்லை என்பதை சித்தர்களோடு தொடர்புடைய தங்களை போன்றவர்கள் சொல்லும் போதுதான் கஷ்டமாக இருக்கிறது,தாங்கள் சித்தர்களோடு தொடர்பில் உள்ளீர்களா என்று ஐயமும் வருகிறது,வள்ளல்பெருமான் மரணமில்லா பெருவாழ்வை உலகுக்கு எடுத்து சொன்னவர், அவருக்கு தெரியாதா மரணமில்லாமல் எப்படி வாழ்வதென்று,வெறும் உலகவாசிகளின் கருத்தை தயவுசெய்து பகிராதீர்கள்,சற்குருவே சரணம்,

malar vizhi said...

வள்ளலாரே அறைக்குள் எதுவும் தெரியாது என்று சொல்லி உள்ளே சென்றிருக்கிறார் . இது எந்த "சித்தி" என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

malar vizhi said...

வள்ளலாரே அறைக்குள் எதுவும் தெரியாது என்று சொல்லி உள்ளே சென்றிருக்கிறார் . இது உண்மை என நீங்கள் ஆவணபடுத்தி உள்ளீர்கள். எதனால் அப்படி சொன்னார். எந்த அறிவியல் சாதனத்தின் படி அப்படி சொல்லியிருப்பார். தெளிவு படுத்தவும்.

gopal said...

Dear Thozhi,

Vallalar has clearly explained about three kinds of body. Sutha dhegam, Pranava Dhegam and Nyana Dhegam. Our human body will get changed to these three kinds of body gradually, when discipline mentioned by Vallalar is followed strictly.
In his own poems, he has mentioned in so many places about the spiritual path to achieve that level.
One need not have to believe what the followers say, but atleast you should have fully gone through what vallalar said about his level.
It is really sad that you did not do so.

S.Puvi said...

தொடருக்கு நன்றிகள்

Nathigavaathi Aanmigavaathi said...

போடா வென்னைகளா!!!!பொழப்ப பாருங்கடா??

எவன் எப்படி போன என்னடா வென்னைகளா???

வள்ளல் வந்து சொல்லட்டும்......வள்ளல கூப்பிடுங்க???இந்த மனுஷன் எதுக்கு இப்படி சாக அடிகறார்????

நந்தர் யசோதா said...

இந்த அற்புதமான சிருஷ்டியில் எத்தனையோ அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்ந்தன.நிகழ்ந்து

கொண்டிருக்கின்றன.எமது புலனுக்கும் சிற்றறிவுக்கும்
உட்பட்டவற்றை எமது மனமானது ஏற்றுக்கொள்கிறது இல்லை அறிவியல் தெளிவுபடுத்தினால் ஏற்றக்கொள்கிறோம்.இது மனதின் தந்திரம்.கருந்துளை பற்றி அறிவியல் கூறுவதை நம்புகிறோம்.ஆனால் யோகிகளும்,சித்தர்களும் ஏற்கனவே பிரளயத்தின் போது அண்டசராசரங்கள் ஓரு இடத்தில் ஓடுங்குவதாகவும்,படைப்பின் போது அதிலிருந்து எல்லாம் தோன்றுவதாகவும் கூறியிருக்கிறார்கள். இது போலவே யோகியானவன் தன் ஆத்ம சாதனைகள் மூலம் தன்னுயிரை எப்படி எந்தநேரத்தில் விடவேண்டும் என்பதையறிவான்.சாதனை புரிபவர்கள் அறிவார்கள்.ஞானிகள் அறிவார்கள்.சாதாரணமானவர்கள் நாம் அறியாததால் மறுப்பது எமது துரதிஷ்டம்.பக்திமானாகவும் பின்பு சிறந்த யோகியாகிய வள்ளலார் தன் விருப்பப்படி விட்டு இறையடி சேர்ந்தார்.தடயங்களைத் தேடும் நாம் தேடிக்கொண்டேயிருப்போம். நன்றி.

jaisankar jaganathan said...

அருமை

Sara said...

Anbullam konda Thoziku,

Ennai porutha varai neengal 99% vallalar patri eduthu uraithathu mutrilum unmai melum, vallal peruman thanaga ve than seedargalai antha araikul sendru, kathavai thaz poda solli utharavittar. Annal antha ariku povatharku munnal oru "UNMAI PATHIRIKAI" ONDRAI EZUTHI ULLAR. Melum athu mukkiyamaga makkalidathil poi sera vendu enpathu avarathu kurikol. Neengal athai eppadiyavathu thedi ingu pathipikkum padi panivanbudan kettu kolgiren. Melum antha unamai pathirikai www.siththarkal.com vasagargaluku pala thelivinai unndakkum.

Nandri,
Saravanan.R

jaisankar jaganathan said...

பட்டினத்தாரின் சிஷ்யர் பத்ருகிரியார் ஜோதியில் ஐக்கியமாகவில்லையா?
திருஞானசம்பந்தர் ஜோதியில் ஐக்கியமாகவில்லையா?

malar vizhi said...

இதில் ஆவணபடுதியுள்ள G.H.Garstin அவர்களின் அறிக்கைக்கு பின்னர் அந்த கதவை யாரும் திறக்கவில்லையா? வள்ளலாரின் மறைவு குறித்து விசாரிக்க வந்தவர்கள் அந்த கதவை திறந்து பார்க்காமல் போய் விட்டனரா? சோதனை செய்யாமல் இருக்க அவர்களை ஏன் வரவழைக்க வேண்டும். ஒருவர் காணமல் போய் விட்டார், அது குறித்து அரசாங்கத்தில் இருந்து வருபவர்கள் விசாரணையின் போது அவர் அந்த அறைக்குள் இறுதியாக சென்றார் என்று தெரியவரும் பொழுது, ஏன் அந்த அறையை திறந்து பார்க்கவில்லை.

Muthu Nagarajan said...

"பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு"

"நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே
உலவையிரண் டொன்று விண்"

ஔவை குறளில் பஞ்ச பூதங்களைப் பற்றிய குறிப்பு.

ஆதியில் சுத்தவெளி விண்ணாகவும் (1) அதிலிருந்து அடர்த்தி அதிகமாகி காற்று (2), வெப்பக்காற்று (நெருப்பு) (3), நீர் (4), மண் (5) என்ற பஞ்ச பூதங்களாக பரிணமித்து பின் ஓரறிவு முதல் ஆறறிவுடைய மனிதன் வரை பரிணமித்தது என்று வேதாத்திரி மகரிஷி அவர்களின் புத்தகங்களில் படித்து இருக்கிறேன். அத்வைத தத்துவத்திற்கு அவர் அளித்திருக்கும் எளிய சிறந்த விளக்கம். இந்த தத்துவத்தையே தான் நம்புகிறேன்.

சுத்தவெளியே மெய்பொருள் என்னும் பட்சத்தில் பஞ்ச பூதங்களால் ஆன உடலையும் வெளியாக (Reverse Engineering) மாற்ற முடியும் என்றும் நம்புகிறேன். வள்ளலார் போன்ற சித்தர்களுக்கு எதுவும் சாத்தியம் என்பது என் கருத்து. சமீபத்தில் பார்த்த வலைப்பூவிலிருக்கும் காணொளியை பார்க்கவும். http://www.machamuni.com/?p=1026

அதோடு ஆழ்கடலில் வெளிச்சத்திற்காக தன் உடம்பிலிருந்து ஒளியை வெளிப்படுத்தும் பலவகை உயிரினங்கள் உள்ளன. இதை bioluminescence என்று கூறுவார்கள். இணையத்தில் பல காணொளிகளை காணலாம்.

ஈரறிவுடைய உயிரினங்களால் முடியுமெனில் மனிதனாலும் முடியவேண்டும். நாம் முயற்சிபதில்லை. சமீபத்தில்

விஞ்ஞானிகள் மெய்ஞ்ஞானத்தை அறியாமல் இயற்கையின் பல இரகசியங்களுக்கு விடை கிடைக்கப் பெறமாட்டார்கள்.புரியாத புதிராகத்தான் இருக்கும்.

சமீபத்தில் சுனாமியின் போது அந்தமான் தீவுகளில் இருக்கும் பழங்குடியினர் அழிந்திருக்க கூடும் என்று பலர் நினைத்தனர். ஆனால் அவர்கள் உயரமான பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பாகவே இருந்தனர். பல விஞ்ஞான கருவிகளை வைத்துக் கொண்டும் பலத்த பாதிப்புக்குள்ளானது நவ நாகரீக மனிதம் தான்!!!

malar vizhi said...

கேள்விகள் கேக்க மட்டும் சொல்றீங்க, பதில் தர மாட்றீங்க. கேள்விகளை கேக்க தான் தெரியுமா? :)

தோழி said...

@malar vizhi

தேடாமல் யாரும் தெளிய முடியாது. குருவருளை வேண்டி வணங்கித் தேடலை துவக்குங்கள்.... தெளிவு கிடைக்கலாம்.

vijayan said...

// இக்கட்டுரையில் ஜோதியில் கலந்ததாக ஆதாரம் இல்லை என்று
கூறபட்டுள்ளது.

நம் வரலாறு ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் ஜோதியாகி இறைவனிடம் கலந்தார் என்றும், சித்தர் பத்ரகிரியார் திருவிடைமருதீரில் ஜோதியாகி இறைவனிடம் கலந்தார் என்கிறது.

// சித்த புருசர்கள் சமதியானதாக குறிப்பு உண்டு

சித்தராகவும் , நாயன்மாராகவும் போற்றப்படும் திருமூலர் என்ன கூறுகிறார் தெரியுமா..

"சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதி தானில்லை தானவ னாகிற்" என்கிறார்.

சமாதிக்கு மேல்நிலையே ஜோதி ஆவது.

திருஞானசம்பந்தர் பெருமான் தான் மட்டும் ஜோதியாகாமல் தன் கல்யனதிருக்கு வந்த அனைவரையும் ஜோதியாகினார் என்று நம் வரலாறு தெரிவிக்கிறது.

இதை எல்லாம் ஆராய்ச்சி கட்டுரையில் ஜோதியில் கலந்ததாக ஆதாரம் இல்லை என்று குறிபிட்டது ஆராய்ச்சியின் ஆழத்தினை அறிய முடிகிறது

சிம்ம வாகனி said...

@vijayan

// நம் வரலாறு ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் ஜோதியாகி இறைவனிடம் கலந்தார் என்றும், சித்தர் பத்ரகிரியார் திருவிடைமருதீரில் ஜோதியாகி இறைவனிடம் கலந்தார் என்கிறது. //

சார்.. ஆண்டாள் பற்றிய தகவல் இது..

"அவர் மருதூர் இறைவனிடம் முறையிட அங்கே கிளம்பிய ஜோதியில் இருவரும் முக்தி பெற்றனர். " பத்திரகிரியாரும் முக்தி பெற்றார். மீண்டும் வருவார் என்றோ ஒளியுடம்பு என்ற பேச்சுக்கோ இடமில்லை.. நேரடியாக முக்தி நிலை.. :)

இந்ததகவல் இந்த இணைப்பில் உள்ளது.

"அப்போது ஓர் ஜோதி தெரிந்தது. ஆண்டாள், அரங்கனுடன் கலந்தாள். " அத்துடன் ஆண்டாள் முக்தி அடைந்து விடுகிறார் ஒளியுடம்போ மீண்டும் வருவதோ கிடையாது..

இந்ததகவல் இந்த இணைப்பில் உள்ளது.

என்னது..... ஆண்டாளும், பத்ரகிரியாரும் ஒளித்தேகம் பெற்றார்கள் என்று சொல்ல வருகிறீர்களா என்ன கொடுமை இது விஜயன் சார்ர்ர்ர்...

அல்லது....

இது போல் வள்ளலார் ஒளியுடம்பு பெறவில்லை... இறுதி நேரத்தில் இறைவனுடன் கலந்து முக்திதான் அடைந்தார் என்று சொல்ல வருகிறீர்களா விஜயன் சார்ர்ர்?

// சித்தராகவும் , நாயன்மாராகவும் போற்றப்படும் திருமூலர் என்ன கூறுகிறார் தெரியுமா..

"சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதி தானில்லை தானவ னாகிற்" என்கிறார்.

சமாதிக்கு மேல்நிலையே ஜோதி ஆவது. //

முதலில் அந்த திருமூலர் பாடலை முழுமையாக படியுங்கள்.. இதோ பாடல்..

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சாமதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

இங்கு சொல்லப்படும் சமாதி என்பது அட்டாங்க யோகத்தின் எட்டாவது படிநிலையான சமாதி நிலை.. :) இந்த அட்டாங்க யோகத்தால் கிடைக்கும் அட்டமா சித்திகளும் சமாதி நிலையை அடைந்தால் கிடைக்கும் என்பதே திருமூலர் பாடல்..

அட்டாங்க யோகமும் அதன் படிநிலைகளும் பற்றிய திருமூலர் பாடல்கள் இந்த இணைப்பில் உள்ளது. இதில் உள்ள இத்தனை பாடல்களில் இரு வரியை மட்டும் முன்வைத்து பேசுகிறார் விஜயன் அவர்கள்.

விஜயன் சார்ர்ர்ர்..... எதனையும் முழுமையாக படித்தால் மட்டுமே தெளிவு கிடைக்கும்..

// திருஞானசம்பந்தர் பெருமான் தான் மட்டும் ஜோதியாகாமல் தன் கல்யனதிருக்கு வந்த அனைவரையும் ஜோதியாகினார் என்று நம் வரலாறு தெரிவிக்கிறது. //

செவிவழிக்கதைகள் மட்டுமே.. :D

// இதை எல்லாம் ஆராய்ச்சி கட்டுரையில் ஜோதியில் கலந்ததாக ஆதாரம் இல்லை என்று குறிபிட்டது ஆராய்ச்சியின் ஆழத்தினை அறிய முடிகிறது //

திருஞான சம்பந்தர் ஜோதியில் கலந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. ஆதாரங்கள் அற்ற கதையை ஆராய்ச்சியில் இணைப்பார்களா விஜயன் சார்ர்ர்?? அப்படி ஜோதியில் கலந்தார் என்றாலும் கூட ஒளிதேகம் இன்றுவரை ஒளியுடம்புடன் இருக்கிறார் என்பதற்கெல்லாம் இடமே இல்லை... :)

விஜயன் சார்ர்ர்ர்.. தாங்கள் ஆய்வு செய்தால் செவிவழிக்கதைகளை மட்டும் தான் முன்வைத்து ஆய்வு செய்வீர்களா? இப்போது தங்கள் ஆய்வின் திறனும் தங்கள் அறிவின் முதிர்ச்சியின் ஆழமும் மிகத்தெளிவாக புரிகிறது..

மீண்டும் வரலாற்றை சரியாகப்படித்து வள்ளலார் ஒளிதேகம் பெற்றான் என்பதற்கு வேறு ஆதாரம் கிடைக்கிறதா என்று பாருங்கள்.. செவிவழிக் கதைகளை தூக்கிக் கொண்டுவராதீர்கள்.. ஏன் எனில் செவிவழிக் கதையினைக் கொண்டுவந்தால் இராவணனுக்குப் பத்துத் தலையும் இருபது கையும் உள்ளதை நீங்கள் ஏற்பதாக ஆகிவிடும்.. :)

மிண்டும் சந்திக்கலாம்.. :)

velayutham R said...

வள்ளலார் சாதாரண உலோகத்தை தங்கமாக மாற்றுவார் என்றும் செய்திகள் உண்டு. அது உண்மையா? பொய்யா? தோழி.

SIVANADIMAI VELUSAMI said...

@jaisankar jaganathan
திருஞான சம்பந்தர் சோதியில் பலர் பார்க்க கலந்தார் ,இவரும் அப்படி செல்லவேண்டியது தானே இவர் கொள்கைகள் சைவத்திற்கு முற்றிலும்

மாறானது இவர் ஏதோ பாடல் பாடியிருக்கலாம் ஆனால் இவர் ஒரு தனி

சமயம் காண ஆசைப்பட்டு வெற்றி கண்டவர் .தில்லை தீட்சிதர்களோடு

கூட்டுவைத்து ஆறுமுக நாவலர் அடித்தார் என்று பொய் கேஸ் போட்டவர்

இந்து முஸ்லிம் கிறித்துவம் சமணம் புத்தம் என்று எல்லா மதக்கலவை

தான் இவர் வைத்துள்ள சன்மார்க்க சபை. மிக்சியில் போட்ட மிக்சுடு (mixed )

ஜூஸ் தான் விவரம் புரியாமல் மக்கள் பின்தொடர்வது என்பது தமிழகத்தின்

தலைஎழுத்து .நேர்மையானவர் என்ன என்று சொல்லி விட்டு செல்வது தானே .தலைவன் என்பவன் தான் சொன்ன வழியில் நடந்து காட்டுபவனே

SIVANADIMAI VELUSAMI said...

@malar vizhi
திருஞான சம்பந்தர் சோதியில் பலர் பார்க்க கலந்தார் ,இவரும் அப்படி செல்லவேண்டியது தானே இவர் கொள்கைகள் சைவத்திற்கு முற்றிலும்

மாறானது இவர் ஏதோ பாடல் பாடியிருக்கலாம் ஆனால் இவர் ஒரு தனி

சமயம் காண ஆசைப்பட்டு வெற்றி கண்டவர் .தில்லை தீட்சிதர்களோடு

கூட்டுவைத்து ஆறுமுக நாவலர் அடித்தார் என்று பொய் கேஸ் போட்டவர்

இந்து முஸ்லிம் கிறித்துவம் சமணம் புத்தம் என்று எல்லா மதக்கலவை

தான் இவர் வைத்துள்ள சன்மார்க்க சபை. மிக்சியில் போட்ட மிக்சுடு (mixed )

ஜூஸ் தான் விவரம் புரியாமல் மக்கள் பின்தொடர்வது என்பது தமிழகத்தின்

தலைஎழுத்து .நேர்மையானவர் என்ன என்று சொல்லி விட்டு செல்வது தானே .தலைவன் என்பவன் தான் சொன்ன வழியில் நடந்து காட்டுபவனே

SIVANADIMAI VELUSAMI said...

@?????? ?????
திருஞான சம்பந்தர் சோதியில் பலர் பார்க்க கலந்தார் ,இவரும் அப்படி செல்லவேண்டியது தானே இவர் கொள்கைகள் சைவத்திற்கு முற்றிலும்

மாறானது இவர் ஏதோ பாடல் பாடியிருக்கலாம் ஆனால் இவர் ஒரு தனி

சமயம் காண ஆசைப்பட்டு வெற்றி கண்டவர் .தில்லை தீட்சிதர்களோடு

கூட்டுவைத்து ஆறுமுக நாவலர் அடித்தார் என்று பொய் கேஸ் போட்டவர்

இந்து முஸ்லிம் கிறித்துவம் சமணம் புத்தம் என்று எல்லா மதக்கலவை

தான் இவர் வைத்துள்ள சன்மார்க்க சபை. மிக்சியில் போட்ட மிக்சுடு (mixed )

ஜூஸ் தான் விவரம் புரியாமல் மக்கள் பின்தொடர்வது என்பது தமிழகத்தின்

தலைஎழுத்து .நேர்மையானவர் என்ன என்று சொல்லி விட்டு செல்வது தானே .தலைவன் என்பவன் தான் சொன்ன வழியில் நடந்து காட்டுபவனே

SIVANADIMAI VELUSAMI said...

@malar vizhi
திருஞான சம்பந்தர் சோதியில் பலர் பார்க்க கலந்தார் ,இவரும் அப்படி செல்லவேண்டியது தானே இவர் கொள்கைகள் சைவத்திற்கு முற்றிலும்

மாறானது இவர் ஏதோ பாடல் பாடியிருக்கலாம் ஆனால் இவர் ஒரு தனி

சமயம் காண ஆசைப்பட்டு வெற்றி கண்டவர் .தில்லை தீட்சிதர்களோடு

கூட்டுவைத்து ஆறுமுக நாவலர் அடித்தார் என்று பொய் கேஸ் போட்டவர்

இந்து முஸ்லிம் கிறித்துவம் சமணம் புத்தம் என்று எல்லா மதக்கலவை

தான் இவர் வைத்துள்ள சன்மார்க்க சபை. மிக்சியில் போட்ட மிக்சுடு (mixed )

ஜூஸ் தான் விவரம் புரியாமல் மக்கள் பின்தொடர்வது என்பது தமிழகத்தின்

தலைஎழுத்து .நேர்மையானவர் என்ன என்று சொல்லி விட்டு செல்வது தானே .தலைவன் என்பவன் தான் சொன்ன வழியில் நடந்து காட்டுபவனே

SIVANADIMAI VELUSAMI said...

@Saran K Advaithan
திருஞான சம்பந்தர் சோதியில் பலர் பார்க்க கலந்தார் ,இவரும் அப்படி செல்லவேண்டியது தானே இவர் கொள்கைகள் சைவத்திற்கு முற்றிலும்

மாறானது இவர் ஏதோ பாடல் பாடியிருக்கலாம் ஆனால் இவர் ஒரு தனி

சமயம் காண ஆசைப்பட்டு வெற்றி கண்டவர் .தில்லை தீட்சிதர்களோடு

கூட்டுவைத்து ஆறுமுக நாவலர் அடித்தார் என்று பொய் கேஸ் போட்டவர்

இந்து முஸ்லிம் கிறித்துவம் சமணம் புத்தம் என்று எல்லா மதக்கலவை

தான் இவர் வைத்துள்ள சன்மார்க்க சபை. மிக்சியில் போட்ட மிக்சுடு (mixed )

ஜூஸ் தான் விவரம் புரியாமல் மக்கள் பின்தொடர்வது என்பது தமிழகத்தின்

தலைஎழுத்து .நேர்மையானவர் என்ன என்று சொல்லி விட்டு செல்வது தானே .தலைவன் என்பவன் தான் சொன்ன வழியில் நடந்து காட்டுபவனே

VALLALAR RAMALINGAM said...

வள்ளலாரின் மரணமிலா பெருவாழ்வு என்பது சத்தியம், சத்தியம், சத்தியம்... மேலும் அறிந்துக்கொள்ள www.vallalarr.blogspot.in என்ற தளத்திற்குச் செல்லவும்.

renga nathan said...

பதிவிற்கு நன்றி தோழி

கடவுளை தேடும் இடம் இதுவா ? said...

வள்ளல் பெருமான் அவர்களுக்கும் இந்த உலகு அறியா ஓர் குரு பெருமான் உண்டு.இது சத்தியம்! சத்தியம்! அவர் யார் என்று ஆராய்ந்தால் இந்த ரகசியம் புலனாகும்.இந்த ஒன்று மட்டுமே இங்கு என்னால் சொல்ல இயலும்.

Badhey Venkatesh said...

Sister , u r writing ill abt vallalar raising doubts that his body was interned inside sathya gnana sabhai

pl read my article " vallalars grand finale - part 3 in my blog 1008 petallotus.wordpress.com which details what happened inside that room on 30.1.1874

the details of transfiguration of his body to grace body

your writings are subject to suspicion - u dont have iota of experience - you are highly theoretical

BGV - 1008petallotus.wordpress.com

Jaya velu said...

நன்றி தோழி!

kesavan kesav said...

@சிம்ம வாகனி apo vallalarrum athey pol than jothiyil kalanthu iruppaar pola evlo anbana manithar avar vaakku poikkathu

kesavan kesav said...

anbum karunayum niraintha magaan vallal peruman..........................avar poi uaraippathaal avaruku enna payan aathalaal avar vaakku poikkathu thedungal kandu adaiveer varum varudam 2016 jan yil iraivanin thiru arulaa ulagariyaa siddhar perumaan marayavirukiraar ...sinthai thelintharku avarai kaanum paakkiyam undu....................

mss.mohandas said...

good information sister

Post a Comment