சமரச சன்மார்க்க சங்கமும், சர்ச்சைகளும்!

Author: தோழி / Labels:

வள்ளல் பெருமானாரின் அமைப்பு ரீதியான புதிய முயற்சி சாமான்ய மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது. பல்கிப் பெருகிய ஆதரவுடன் அமைப்புகள் பெரிய அளவில் வளரத் துவங்கிய போது அதை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பல் வேறு திட்டமிடல்கள் தேவைப் பட்டன. தன்னுடைய கொள்கைகளை பின் பற்றுவோருக்கான நியதிகளை 1872 ல் வள்ளல் பெருமான் வகுத்தளித்தார். அவை “நித்திய கரும விதிகள்” எனப்பட்டன.

ஒழுக்கம் என்பது ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து துவங்கிட வேண்டும் என்பதில் வள்ளல் பெருமானார் உறுதியாக இருந்தார். காலையில் துயிலெழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்வது வரையிலான ஒவ்வொரு செயலும் எவ்வாறு கடைபிடிக்கப் பட வேண்டும் என்பதை வள்ளல் பெருமானார் தீர்மானமாய் வகுத்தளித்தார். இயற்கையோடு இணைந்த பெருவாழ்வு என்பதாக அவருடைய நியதிகள் அமைந்தன.

இந்த நியதிகள் இல்லறத்தாருக்கு ஒரு வகையாகவும், துறவறம் மேற்கொண்டவர்களுக்கு இன்னொரு வகையாகவும் வரையறுக்கப் பட்டிருந்தன. இதனை உறுதியாக கடைபிடிக்க வேண்டுமெனவும் வள்ளல் பெருமானார் வலியுறுத்தினார். தன்னுடைய தெளிவுகள் மனித குலத்தை அதன் எல்லா பிரச்சினைகளில் இருந்து மீட்டெடுத்து அவர் தம் துயரைத் துடைக்கும் என உறுதியாக நம்பினார். ஆனால் நடைமுறையில் அந்த நம்பிக்கையை செயல்படுத்துவது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை.

இந்த கால கட்டத்தில் இறந்தவர்களை தன்னால் உயிர்ப்பிக்க முடியுமென  வள்ளல் பெருமான் கூறிய ஒரு கருத்து பலத்த சர்ச்சையையும், எதிர்ப்பினையும் உண்டாக்கியது. இது தொடர்பான ஒரு கிருத்துவ பாதிரி ஒருவரின் எதிர்க் கருத்து பின் வருமாறு ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறது.

"ஏமாற்று வித்தைக்காரன் ஒருவன் வடலூர் வட்டாரத்தில் உலவுகின்றான். செத்தாரை எழுப்பப் போவதாகப் பறை சாற்றுகின்றான். மக்கள் சென்னை போன்ற இடங்களிலிருந்து வந்தபடி இருக்கிறார்கள். அண்மையில் கள்ளர் அவன் திரட்டி வைத்திருந்த செல்வத்தைச் சூறையாடிச் சென்றனர். ஆகவே இப்போது பணம் திரட்ட இப்புது வழியைக் கண்டுபிடித்திருக்கிறான்”.

ஒரு பக்கம் சைவ சமயத்தின் பழமை வாதிகளின் எதிர்ப்பு என்றால் மறுபுறம் கிருத்துவ பாதிரிமார்களின் இத்தகைய எதிர்ப்பினையும் அவர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இதற்கிடையே அவருடன் இருந்தவர்களில் சிலர் அவருடைய எண்ணங்களுக்கு எதிரானவர்களாய் இருப்பதாகவும் வள்ளல் பெருமானார் கருதினார். இத்தகைய பல முனை எதிர்ப்புகள் அவரை கடுமையான மன உளைச்சலில் தள்ளியது. இதனை அவர் எழுதிய கடிதங்கள் சிலவற்றின் ஊடாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

திரு.அப்பாசாமி செட்டியார் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் தான் உருவாக்கிய அமைப்புகளில் நிலவும் குளறுபடிகளைப் பற்றிய தனது ஆதங்கத்தினை பின் வருமாறு உரைக்கிறார்.

”இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையில் இருக்கிறவர்கள் எல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேல் பழிஇல்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் படவேண்டும்.”

மேலும்......

"கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினாலும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம். அப்படிப் பட்டவர்களை ஒரு பேச்சுமில்லாமல் இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது.”

சி. இராமலிங்கம் (திருவருட்பா உரைநடைப் பகுதி - பக்கம் - 436)

இத்தகைய சர்ச்சைகளினால் மனம் வெறுத்துப் போன வள்ளல் பெருமான் ஒரு கட்டத்தில் தான் உருவாக்கிய தருமசாலையில் இருந்து வெளியேறி மேட்டுக் குப்பத்தில் ஒரு வைஷ்ணவரின் இடத்தில் தங்கிட ஆரம்பித்தார். இக் கால கட்டத்தில் அவர் எழுதிய பாடல்கள் பலவும் அவரது மன உளைச்சலையும், தான் உயிரோடு இருப்பது குறித்த கவலையையும் சொல்வதாக இருக்கின்றன. அத்தகைய இரண்டு பாடல்களை மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும் 

                   ( திருவருட்பேறு - ஆறாம் திருமுறை )

இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின் 

                   (பிரியேன் என்றல் - ஆறாம் திருமுறை )

இத்தகைய சூழலில்தான் வள்ளல் பெருமான் திடீரென ஒரு நாளில் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டு ஜோதியில் கலந்ததாக கூறப் படுகிறது. அந்த விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

11 comments:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

தற்கொலையா?

Inquiring Mind said...

கிறித்துவம் இந்தியாவில் காலூன்றியது முதல், உலக மக்களின் துன்பங்களை போக்கும் காவலராக (Saviour) பலர் முயன்றிருக்கின்றனர்.. அதில் ஒருவர் வள்ளலார்.. தான் உணர்ந்த கருத்துக்கள் எல்லாரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே அறவழியன்று.. ஏனென்றால், தனக்கு உகந்தவை மற்றவர்களுக்கு ஆகாததாகலாம்.. அதனால்தான் அவரவர் வாழும் இடம், தொழில், சமூகம் சார்ந்து, வாழ்க்கையும் கோட்பாடுகளும் அமையும்.. எல்லாருக்கும் பொதுவான கோட்பாடுகளை உருவாக்குவது என்பது, கிறித்துவத்தை போன்ற ஒரு மதத்தினை நிறுவும் முயற்சியே யாகும்..

புத்தர் 2500 வருஷங்களுக்கு முன்னரே இதனை செய்து தோற்றுவிட்டார்.. கடந்த நூற்றாண்டுகளில், பசவன்னர், வள்ளலார், அய்யாவழி போன்றவர்கள் இதே முறையை முயன்று தோற்றுவிட்டனர்..

சனாதனமாக நிலைபெறும் தர்ம்மே என்றும் இருக்கும்..

Remanthi said...

வள்ளல் பெருமான் மிக உன்னதமான மனிதர்...சுயத்திலையே வாழ்ந்த மக்கள் அவரையும் மனம் புண்படுத்தி விட்டனர்

Jobs said...

நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/

dgsivam said...

தற்கொலைக் கிடையாது. வள்ளற் பெருமானார் ஏற்கனவே இறவா நிலைப்பெற்றவர், அவருக்கு பசி, தூக்கம், பயம். நோய், இது போன்றவைகள் கிடையாது. அவர் நடந்தால் நிழல் கீழே விழாது என்பார்கள்.

AMAR said...

பொய் சொல்லி வரும் பெயரையும் ,புகழையும் சிறிதளவும் சிவனடியார்கள் ஏற்பதில்லை தோழி ,உங்கள் மீது எனக்கு கோபம் வருகிறது,..

SIVANADIMAI VELUSAMI said...

@Inquiring Mind
திருஞான சம்பந்தர் சோதியில் பலர் பார்க்க கலந்தார் ,இவரும் அப்படி செல்லவேண்டியது தானே இவர் கொள்கைகள் சைவத்திற்கு முற்றிலும்

மாறானது இவர் ஏதோ பாடல் பாடியிருக்கலாம் ஆனால் இவர் ஒரு தனி

சமயம் காண ஆசைப்பட்டு வெற்றி கண்டவர் .தில்லை தீட்சிதர்களோடு

கூட்டுவைத்து ஆறுமுக நாவலர் அடித்தார் என்று பொய் கேஸ் போட்டவர்

இந்து முஸ்லிம் கிறித்துவம் சமணம் புத்தம் என்று எல்லா மதக்கலவை

தான் இவர் வைத்துள்ள சன்மார்க்க சபை. மிக்சியில் போட்ட மிக்சுடு (mixed )

ஜூஸ் தான் விவரம் புரியாமல் மக்கள் பின்தொடர்வது என்பது தமிழகத்தின்

தலைஎழுத்து .நேர்மையானவர் என்ன என்று சொல்லி விட்டு செல்வது தானே .தலைவன் என்பவன் தான் சொன்ன வழியில் நடந்து காட்டுபவனே

SIVANADIMAI VELUSAMI said...

@Remanthi
திருஞான சம்பந்தர் சோதியில் பலர் பார்க்க கலந்தார் ,இவரும் அப்படி செல்லவேண்டியது தானே இவர் கொள்கைகள் சைவத்திற்கு முற்றிலும்

மாறானது இவர் ஏதோ பாடல் பாடியிருக்கலாம் ஆனால் இவர் ஒரு தனி

சமயம் காண ஆசைப்பட்டு வெற்றி கண்டவர் .தில்லை தீட்சிதர்களோடு

கூட்டுவைத்து ஆறுமுக நாவலர் அடித்தார் என்று பொய் கேஸ் போட்டவர்

இந்து முஸ்லிம் கிறித்துவம் சமணம் புத்தம் என்று எல்லா மதக்கலவை

தான் இவர் வைத்துள்ள சன்மார்க்க சபை. மிக்சியில் போட்ட மிக்சுடு (mixed )

ஜூஸ் தான் விவரம் புரியாமல் மக்கள் பின்தொடர்வது என்பது தமிழகத்தின்

தலைஎழுத்து .நேர்மையானவர் என்ன என்று சொல்லி விட்டு செல்வது தானே .தலைவன் என்பவன் தான் சொன்ன வழியில் நடந்து காட்டுபவனே

SIVANADIMAI VELUSAMI said...

திருஞான சம்பந்தர் சோதியில் பலர் பார்க்க கலந்தார் ,இவரும் அப்படி செல்லவேண்டியது தானே இவர் கொள்கைகள் சைவத்திற்கு முற்றிலும்

மாறானது இவர் ஏதோ பாடல் பாடியிருக்கலாம் ஆனால் இவர் ஒரு தனி

சமயம் காண ஆசைப்பட்டு வெற்றி கண்டவர் .தில்லை தீட்சிதர்களோடு

கூட்டுவைத்து ஆறுமுக நாவலர் அடித்தார் என்று பொய் கேஸ் போட்டவர்

இந்து முஸ்லிம் கிறித்துவம் சமணம் புத்தம் என்று எல்லா மதக்கலவை

தான் இவர் வைத்துள்ள சன்மார்க்க சபை. மிக்சியில் போட்ட மிக்சுடு (mixed )

ஜூஸ் தான் விவரம் புரியாமல் மக்கள் பின்தொடர்வது என்பது தமிழகத்தின்

தலைஎழுத்து .நேர்மையானவர் என்ன என்று சொல்லி விட்டு செல்வது தானே .தலைவன் என்பவன் தான் சொன்ன வழியில் நடந்து காட்டுபவனே

Arul Murugan said...

வணக்கம்
தங்களது வலைப்பக்கம் நன்றாக இருக்கிறது..
சித்தர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பெறுகின்றனர்
அவை
1.சன்மார்க்கச் சித்தர்கள்
2.ஞானச் சித்தர்கள்
3.காயச் சித்தர்கள்
இவர்களை பற்றி விரிவாக கூற முடியுமா.

SIVANADIMAI VELUSAMI said...

ஓம் நமசிவாய

சித்தர்களைப் பற்றி ஆராய்ச்சி தேவையில்லை நண்பரே பெரியபுராணம் படியுங்கள் நாயன்மார்களுக்கு மட்டுமே நம் சைவத்தில் குருபூஜை உண்டு சித்தர்களுக்கு கிடையாது . ஏனெனில் சித்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு அவர்கள் முக்கியம் இல்லை என்பதால் தான் .அவர்கள் வழி ஆன்மாவை வழிநடத்துவது அல்ல .இந்த இறைவன் கொடுத்த உடலை எப்படியெல்லாம் பாதுகாப்பது என்று இறைவனுக்கு சவால் ஏவல் சொல்வது போல தான் இவர்கள் செயல் அமைந்தது இறைவனையும் இறை அடியார்களையும் தவிர மற்றவர்கள் மூலம் ஆவது ஒன்றும் இல்லை .போற்றி ஓம் நமசிவாய

Post a Comment