போகர் அருளிய பலாசு கற்பம்

Author: தோழி / Labels: , ,

நீடித்த இளமையோடும், நோயற்ற உடல் நலத்துடன் வாழ சித்தர்கள் பல கற்பவகைகளை அருளியிருக்கின்றனர். அவற்றினைப் பற்றி முன்னரே பல பதிவுகளில் விரிவாக விளக்கியிருப்பதால் இன்று நேரடியாக கற்பத்தைப் பற்றி பார்ப்போம். புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் கற்பங்களைப் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம். 

பலாசு என்பது மர வகையினைச் சேர்ந்த ஒரு மூலிகை. இந்த பலாசு மரத்திற்கு புரசு என்ற வேறொரு பெயரும் உள்ளது. நவகோள்களில் ஒன்றான இராகுவின் அம்சமாய் இந்த மரத்தினை குறிப்பிடுவர். பலாசு மூலிகையினை வைத்து கற்பம் செய்திடும் முறை ஒன்று போகர் அருளிய "போகர் 12000" என்ற நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

போகாமல் பலாசுனுட கற்பங்கேளு
புகழ்ந்தவேர்ப் பட்டையிலை காய்பூவோடு
நோகாம நிழலுலர்த்தா யுலர்த்திடித்து
நேரிசையாய் வடிகட்டிச் சூரணமேசெய்து
வேகாமல் வெள்ளாட்டுப்பாலிற் வெருகடிகொள்ளு
விரைந்துமே மண்டலந்தான் கொண்டாயானால்
சாகாமலிருக்கலாஞ் சதுர்முகவன் படைப்பு
தகர்ந்துமே சமாதியினி லிருந்திடாயே.

- போகர்.

பலாசு மரத்தின் வேர், பட்டை, காய் மற்றும் பூ ஆகியவற்றை எடுத்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அவற்றை நன்கு இடித்துச் சூரணமாக செய்து சிமிழில் சேமித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்தில் இருந்து *வெருகடி அளவு எடுத்து வெள்ளாட்டுப்பாலில் குழைத்து உண்ண வேண்டுமாம்.

இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் மரணமில்லாத வாழ்வு கிடைக்கப் பெறும் என்றும் ஒரு மண்டல காலம் உண்டபின் சமாதி நிலையில் இருப்பது மேலும் நன்மையை உண்டாக்கும் என்கிறார் போகர்.

ஒரு மண்டலம் - 48 நாட்கள்.

*வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

சூரணம்ஈரமானவைகளை காய வைத்தும், காய்ந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது. 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

4 comments:

Nan avan illay said...

அன்புள்ள சகோதரி,
எனது நண்பன் ஒருவனுக்கு (வயது 25)
இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழப்பு ஏற்பட்டுள்ளது ...
மீண்டும் அந்த சிறுநீரகத்தை செயல்பட வைக்க முடியுமா?
சித்தர்கள் இதை பற்றி ஏதேனும் சொல்லி இருகிறார்களா ?

sumathi said...

Ask him to follow from this site http://anatomictherapy.org/tindex.html

Ram said...

பலாசு என்பது butea frondosa?

ராம்குமாரவேல் said...

@Nan avan illay

Please refer the below link

http://naturalfoodworld.wordpress.com/2010/06/15/kidneystone/

Post a Comment