நந்தீசர் அருளிய நெல்லிக்காய் கற்பம்!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் பல நூறு வகையான கற்ப வகைகளை நமக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். நம் முன்னோர்களின் இந்த அரிய  செல்வங்களின் பெருமையை உணராமல், அவற்றை போற்றிப் பாதுகாத்து மேம்படுத்த தவறிவிட்டோம். இந்த கற்ப வகைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அவற்றை வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

அந்த வரிசையின் இன்று நந்தீசர் அருளிய நெல்லிக்காய் கற்பம் பற்றி பார்ப்போம். இந்த தகவல் "நந்தீசர் சர்வகலைஞானம்"  என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல்கள் பின்வருமாறு...

பேணிப்பார் நெல்லிக்காய் முத்தல்வாங்கி
பேரான பால்விட்டு யவித்துக்கொண்டு
வூணிப்பார் நிழலுலர்த்திச் சூரணித்து
வுத்தமனே சுத்திகெந்தி சரியாய்க்கூட்டி
பேணிப்பார் தேனதிலே குழைத்துவெருகடி
பேரான மண்டலந்தா னுண்டாயானால்
ஆணிப்பார் முன்னெடுத்த தேகமையா
ஆச்சரியம் சிவசத்தி தேகமாச்சே.

- நந்தீசர்.

முற்றிய நெல்லிக்காயாக பார்த்து எடுத்து அதனைப் பசுப்பாலில் அவித்து பின்னர் நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். நன்கு உலர்ந்ததும் அதனைச் சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்துடன் சம அளவாக சுத்தி செய்த கந்தகம் சேர்த்து தேனில் குழைத்து வெருகடி அளவு உண்ண வேண்டுமாம்.

இவ்வறு தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடலானது சிவசக்தி தேகமாவதுடன் காயசித்தியும் உண்டாகும் என்கிறார் நந்தீசர்.

ஒரு மண்டலம் - 48 நாட்கள்.

வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது. 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

10 comments:

xxx said...

kenthagam endral?

S.Puvi said...

Thanks 4 post

yeshraja said...

இதற்க்கு பத்தியம் எதாவது கூறப்பட்டுள்ளதா ?

தோழி said...

@xxx

கந்தகம் பற்றிய விவரங்கள் இந்த இணைப்பில் இருக்கிறது.

xxx said...

@தோழி
thagavaluku nandri

Venu said...

தோழி கந்தகத்தை எவ்வாறு
சுத்திசெய்வது?
விளக்கவும்

k.c.sivaraj said...

Thanks

k.c.sivaraj said...

Thanks

k.c.sivaraj said...

Thanks

தினேஷ் நடராஜ்() said...

நல்ல தகவல்.. நன்றி..

Post a Comment