புலிப்பாணி சித்தர் அருளிய விசக்கடி வைத்தியம்

Author: தோழி / Labels: , ,

விஷக்கடி மருத்துவ முறைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அவற்றை மீள் வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசித்தறியலாம். 

அந்த வரிசையில் இன்று புலிப்பாணி சித்தர் அருளிய வைத்திய முறை ஒன்றினை இன்றைய பதிவில் பார்ப்போம்.இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாடியதோர் விசங்களெல்லாந் தீரவேதான்
பண்பாக எட்டிப் பழந்தன்னை வாங்கி
கூடியதோர் சட்டியிலே வேணமட்டுங்
குணமாகத் தானெடுத்து வேப்பெண்ணெய் விட்டு
நாடியே அடுப்பேற்றி வேகவைத்து
நலமாக உருட்டியதைச் செப்பில் மூடி
தூடியே விசந்தீண்டி வந்தபேர்க்குத்
தூதுளங் காயளவு கொடுத்திடாயே.

- புலிப்பாணி சித்தர்.

எட்டிப் பழங்கள் சிலவற்றை எடுத்து ஒரு மண் சட்டியில் இட்டு, அது மூழ்கும் வரை வேப்பெண்ணெய் விடவேண்டுமாம். பின்னர் மண் சட்டியினை அடுப்பில் ஏற்றி வேப்பெண்ணெய் வற்றும் வரை நன்கு காய்ச்சி எடுத்து செம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.  

பின்னர் எந்தவகையான விஷக் கடியானாலும், சிமிழில் சேமித்து வைத்த மருந்தில் இருந்து தூதுளங்காய் அளவு எடுத்து, பாதிக்கப் பட்டவருக்கு உண்ணக் கொடுக்க வேண்டுமாம். இவ்வாறு உண்ணக் கொடுத்தால் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம்  நீங்கி விடும் என்கிறார் புலிப்பாணி சித்தர். இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை.

தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி...

kimu said...

பயனுள்ள பதிவு
நன்றி தோழி

Bala Priya said...

Arumai

Bala Priya said...

Arumai

geethasmbsvm6 said...

ஹூம், மூன்றாம் முறையாகக் கொடுக்கிறேன். இப்போவானும் போகுதானு பார்க்கணும். :(

அருமையான பதிவுகளைத் தொடர்ந்து அளித்து வரும் தோழிக்கு நன்றி.

geethasmbsvm6 said...

போயிருக்குனு நினைக்கிறேன். :))))

Balaji Moun said...

Supperb

Balaji Moun said...

Supperb

Balaji Moun said...

Supperb

srkumar said...

Thanks .. good one.

Post a Comment