குழந்தைப் பேறு!... பிரம்மமுனியின் தீர்வு!!

Author: தோழி / Labels: ,

நமது சமூகத்தில் திருமணமாகி ஒரு கால கட்டத்திற்குள் குழந்தைச் செல்வங்களை பெற்றெடுத்து விடுவது தொடரும் மரபாக இருக்கிறது. இந்த கால கட்டத்தை தாண்டிய குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் சமூகத்தின் கவனிப்புக்கும், பேச்சுக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது. அந்த தம்பதியர் எதிர் கொள்ளும் மன அழுத்தமும், கவலையும் சொல்லி மாளாது. அலோபதி மருத்துவம் இதற்கு பல்வேறு தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை செலவு பிடித்தவை.

பல நூறு வருடங்களுக்கு முன்னர் சித்தர் பெருமக்கள் இதற்கான பல தீர்வுகளை அருளியிருக்கின்றனர். அத்தகைய தீர்வுகள் சிலவற்றை  முந்தைய பதிவுகளில் நீங்கள் காணலாம். அந்த வரிசையில் இன்று "பிரம்மமுனி" அருளிய வைத்திய முறை ஒன்றினை பார்ப்போம். 

இந்த தகவல் “பிரம்மமுனி வைத்திய காவியம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

வார்த்தநாள் முதல்மறு மூன்றுநாளும்
மைந்தனே ஆரையிலைகிளுவை யிலைரெண்டும்
ஆத்துமே ஐவேலி இலையுங்கூட்டி
அரைத்தாவின் பால்வெண்ணை தன்னில்கொள்ளு
ஏத்துமே ஆறாம்நாள் எண்ணெய்மூழ்கி
ஏழாம்நாள் நாயகனோடிணங்கச் சொன்னோம்
போத்தரிய மலடியுமோ பெருவாள்பிள்ளை
பெண்மலடோ உலகத்தில் இல்லதானே

- பிரம்ம முனி.

கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள் தலை முழுகி அதற்கு மறுநாள் முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ஆரை இலை, கிளுவை இலை, ஐவேலி இலை ஆகிய மூன்றையும் சம எடை எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து வெண்ணையில் குழைத்து சாப்பிட வேண்டுமாம். பின்னர் ஆறாவது நாள் எண்ணை வைத்து தலை முழுகி அதற்கு மறுநாள் முதல் இல்லறத்தில் ஈடுபட்டு வர, மலடி என்று சொல்லப்பட்ட பெண்ணாக இருந்தாலும் கெர்ப்பம் உண்டாகுமாம். மேலும், நிஜத்தில் மலட்டுத்தன்மை உள்ள பெண்கள் என்று யாருமே இல்லை என்கிறார் பிரம்ம முனி. 

இதற்கு எவ்வித பத்தியமும் சொல்லப்பட வில்லை.

தேவையுள்ளோர் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம். மற்றவர்கள் தேவையுள்ளோருக்கு இந்த தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

12 comments:

Unknown said...

nice post..

arul said...

கர்பபை கட்டி கரைய சித்தர் மருந்து கூரவும்

Agfgroup Farook said...

really nice

saravanan said...

ithai entha poluthil saappita vendumentru kooravillaiye...kalaiyil verum vayitril sappita vendumaa? allathu unavuku pin saapita vendumaa? entru koorungal

madh umitha said...

Enudaya cousin..got baby now. My cousin getting more vomiting, what to do , please tell me.
Toomuch vomiting, what type food she can eat?

please help

madh umitha said...

Please help

gopi said...

@madh umithadear madhu..ask ur sister to eat...4gm ginger with honey in empty stomach in morning...

gopi said...

@madh umithadear madhu..ask ur sister to eat...4gm ginger with honey in empty stomach in morning...

maddy said...

Keerai vagaigal patri sonnal nandraga irukum ivaru peyarai nan kelvi patadillai

mahi sakthi said...

Intha 3 keerauum enga kedaikum....plz tell...

Unknown said...

இந்த இலைகள் எங்கு கிடைக்கும் .எப்படி உண்ண வேண்டும்

balaa subramani said...

இந்த இலைகள் எங்கு கிடைக்கும் .எப்படி உண்ண வேண்டும்

Post a Comment