இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Author: தோழி / Labels:

சித்திரைத் திருநாள் என ஒரு சிலராலும், தமிழ் புத்தாண்டு என பெரும்பான்மையினராலும் கொண்டாடப்படும் சிறப்பு சித்திரை முதல் நாளுக்கே உரித்தானது.  தமிழர்களின் அடையாளங்களில் முக்கியமான ஒன்றாக இந்த நன்னாள் விளங்குகிறது. இன்று துவங்கும் இந்த தமிழ் வருடத்தின் பெயர் “விஜய” என்பதாகும்.

பன்னிரெண்டு இராசிகளில்  முதலாவது இராசியான மேஷத்தில், சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் காலமே தமிழ் புத்தாண்டின் துவக்கமாய் வகுக்கப்பட்டிருக்கிறது. சித்தர் பெருமக்கள் இந்த தமிழ் புத்தாண்டு தினத்தை எவ்வாறு வரையறுத்திருக்கின்றனர் என்பதைப் பற்றி விளக்கமாய் முன்னரே பதிவு செய்திருக்கிறேன். தேவையுள்ளோர் இந்த இணைப்பில் அந்த தகவல்களை வாசித்தறிய வேண்டுகிறேன். 

இதன் படி இந்த முறை “விஜய” வருடமானது ஆங்கில திகதி 13 - 4 - 2013 அன்று இலங்கை, இந்திய நேரமான பிற்பகல் 11:58  க்கு பிறக்கிறது. இந்த நன்னாளில் குருவை வணங்கி, பெரியவர்களின் ஆசியோடு துவங்கும் எந்த ஒரு காரியமும் நிறைவாய் அமையும் என்பது நம்பிக்கை. இந்த புதிய வருடம் உங்கள் வாழ்வில் நலமும், வளமும் பொங்கும் ஆண்டாய் அமைந்திட எல்லாம் வல்ல குருவருள் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்.
Post a Comment

10 comments:

kc mohan said...

உங்களுக்கும் என் மனமார்ந்த இனிய தமிழ் சின்ஹல புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மோகன்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

kevin said...

விஜய வருடம் இனிதே வரவேற்கிரது

மு.சரவணக்குமார் said...

இந்த நாள் சித்திரைத் திருநாளே என்பதை உணர்ந்த சிலருக்கும், உணர விரும்பிடாத பலருக்கும்....எனது உளம் நிறைந்த “சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்”

ஞானக்குமாரன் said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

S.Puvi said...

தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

kimu said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி

துரை செல்வராஜூ said...

எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லாரும் எல்லா நலன்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வாராக!. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!...

velayutham R said...

@மு.சரவணக்குமார்நீங்க சொல்லி என்ன, அம்மாவே சொல்லிட்டாங்க சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டுன்னு.

rajendran said...

அம்மான்னா என்ன சும்மாவா? அம்மா சும்மா சொன்னாங்க

Post a Comment