புலிப்பாணி சித்தர் அருளிய பற்பொடி

Author: தோழி / Labels: ,

பற்களின் ஆரோக்கியமே உடலின் ஆரோக்கியத்தின் அடையாளம். இத்தனை முக்கியத்துவம் பெற்ற பற்களை பராமரிப்பது மற்றும் அவற்றில் பழுது உண்டாகி விடுவதை தடுப்பது போன்ற விழிப்புணர்வு நமது முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது. இதற்கென சில வழிமுறைகளை கைக் கொண்டிருந்தனர். அவைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம்.

அந்த வரிசையில் செயற்கை பொருட்களைத் தவிர்த்து இயற்கை பொருட்களைக் கொண்டு பற்களை உறுதியாகவும் குறை இன்றியும் பேண ஒருவகையான பற்பொடி ஒன்றை தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பார்ப்போம்.

இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாடியே அரக்குடனே சீனிகாரம்
பண்பான துருசுடனே கடுக்காயப்பா
நாடியே மாசிக்காய் வகைவகைக்கு
நலமான வராகனெடை நிறுத்துக் கொண்டு
ஆடியே கடுக்காயுந் தான்றிக் காயும்
அயப்பொடியும் வகைவகைக்கு வராகன் மூன்று
கூடியே எலுமிச்சம் பழச்சாறிட்டு
குணமாக உலரவைத்துப் பொடியாய்ச் செய்யே.

- புலிப்பாணிச் சித்தர்.

பொடியெடுத்து விளக்கிவரப் பலனைக் கேளு
புழுச்சாகு மெயிற்கறையுந் தீரும்பாரு
இடியெடுத்து பல்லிசைவும் பல்லுக் குத்துங்
எரிவான வாய்ப்புண்ணு நாற்றந் தீரும்
வடிவான பல்லொளிவு வசியமுண்டு
வளமான பல்லிலுள்ள வியாதி தீருந்
துடியான போகருட கடாட்சத்தாலே
துலக்கமாய்ப் புலிப்பாணி பாடினேனே.

புலிப்பாணிச் சித்தர்.

அரக்கு, படிகாரம், மயில்துத்தம், மாசிக்காய் இவைகளை வகைக்கு ஒரு வராகன் எடை வீதம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அவற்றுடன் கடுக்காய், தான்றிக்காய், அயப்பொடி ஆகிய இம்மூன்றில் வகைக்கு மூன்று வராகன் எடையில் எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றில் ஊறவைத்து நன்கு உலர்த்தி, பொடியாக அரைத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

இந்த கலவையை கொண்டு பல் துலக்கிவர பற்களில் உண்டாகும் புழுக்கள், ஈறுகளில் உண்டாகும் வீக்கம், பற்களில் ஏற்பட்டுள்ள கறைகள்,  பல்லசைவு, பல் குத்தல், வாய்ப்புண், நாற்றம், பல் சம்பந்தமான நோய்கள் எல்லாம் தீருமாம், அத்துடன் பற்கள் வெண்மையாக மிளிர்வதுடன் வாக்கு வசியமும் உண்டாகுமாம். இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார்.

இந்த சரக்குகள் எல்லாமே தற்போது எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். இயற்கையான இந்த பற்பொடியினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெற்றிடலாம்.

குறிப்பு :- ஒரு வராகன் என்பது தற்போதைய அளவுகளில் நான்கு  கிராம் ஆகும். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

12 comments:

துரை செல்வராஜூ said...

இந்த வகையான மருந்துப் பொருட்களைக் சரியாகக் கூட்டிச் செய்யும் கைப்பக்குவம் எல்லோருக்கும் கூடி வருமா!.. இருப்பினும் நல்ல எளிய மருந்து ஒன்றைத் தந்திருக்கின்றீர்கள். மிக்க நன்றி!...

kc mohan said...

இலங்கை தமிழருக்கு விளங்க கூடிய சிங்கள் மொழியில் மருந்து பெயர்களை கூறினால் நலம்

admins kanna said...

thuthanagam enbathu visam entru enaku therithavarai nan arithullen.?

babu said...

injuction pallpodi endru tamil nadil salem chettiyar k.l.n.s industries 0427-2210863
vitru varugirargal vangi payan adaiyungal.
dgbabu.india.

Linga Rajan said...

மிகவும் நல்ல குறிப்பு.நன்றி.

Linga Rajan said...

மிகவும் நல்ல குறிப்பு.நன்றி.

Linga Rajan said...

good information

Linga Rajan said...
This comment has been removed by the author.
SundarRaj said...

அரக்கு - இதில் சில வகைகள் உள்ளன் என்று கூறுகிறார்கள், எந்த வகை அரக்கு பயன்படுத்தவேண்டும் என்று நீங்கள் சொலுங்கள்

மயில்துத்தம் - இது ஒரு விஷம் என்று கடைக்காரர் சொல்கிறார் ஆகையால் நான் இதற்கு உங்கள் தெளிவை எதிர்பார்கிறேன்.

மேலும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஊறவைக வேண்டும் என்று குறிப்பு உள்ளது ஆனால் நேரம் எவளவு என்று தெரியவில்லை உதாரணம் ஒரு சாமம்மா அல்லது ஒரு நாழிகையா என்று....

மயில்துத்தம் வயிற்ருக்கு சென்றால் ஆபத்து என்று கூறுகிறார்கள் தயவுசெய்து இதற்கு விளக்கம் அளித்தீர்கள் என்றால் பலர் பயன்பெறுவர்.

PULIPANI said...

நண்பர்களே இப்பற்பொடியானது சித்தர் கூறியபடி சக்திவைந்ததே அதில் சிறிதளவும் ஐய்யமில்லை ஆனால் தயவு செய்து இதில் குறிப்பிட்டுள்ள சரக்குகளை சித்தர்கள் முறைப்படி சுத்தி செய்யாமல் சேர்தைரைக்க வேண்டாம் இதை நான் 3 மாதங்களாக உபயோகிக்கின்றேன் நல்ல பலன் கொடுத்துள்ளது.

Raja baskaran said...

Hi PULIPANI,

Good morn,

Can you teach how to prepare that powder.

Raja baskaran said...

Hi PULIPANI,

Good morn,

Can you teach how to prepare that powder.

Post a Comment