அகத்தியர் அருளிய பொன்னாங்காணி தைலம்

Author: தோழி / Labels: ,

எள் + நெய் என்பதே எண்ணெயாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர்.  தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் அல்லது தைலம் எனப்படும்.

இவ்வாறு தயார் செய்யப்படும் தைல வகைகளில் ஒன்றான "பொன்னாங்காணி தைலம்" தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

ஆமப்பா பொன்னாங்காணித் தைலங்கேளு
அப்பனே காணிச்சாறு படியிரண்டு
நாமப்பா கரிசாலைச் சாறுபடியொன்று
தாமப்பா யெள்ளெண்ணெய் படியிரண்டு
தப்பாம லாவின்பால் படியிரண்டு
வேமப்பா மதுரமது பலமிரண்டு
விருதான முலைப்பாலா வரைத்துப்போட்டே.

- அகத்தியர்.

போடாப்பா மெழுகுபதந் தனில்வடித்து
புகழாக முழுகிவரத் தீருநோய்கேள்
நீடப்பா நேத்திரநோய் தொண்ணூற்றாறும்
நிலைமைகெட்ட காசமெல்லா நீங்கிப்போகும்
வாடப்பா பித்தமெல்லாம் வாங்கிப்போகும்
வளமாகு நேத்திரங்க ளொளியேபீனும்
நாடப்பா வுஷ்ணநோ யெல்லாந்தீரும்
நயமான கீழ்க்காய்நெல்லித் தைலக்கேளே.

- அகத்தியர்.

பொன்னாங்காணிச் சாறு இரண்டு படி, கரிசலைச் சாறு ஒருபடி, கரிசாலைச் சாறு ஒரு படி, எள் எண்ணெய் இரண்டு படி. பசும்பால் இரண்டு படி ஆகியவற்றை ஒரு மண் சட்டியில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.  பின்னர் அத்துடன் அதிமதுரம் இரண்டு பலம் எடுத்து கல்வத்தில் இட்டு தாய்ப்பால் விட்டு அரைத்துச் மண் சட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் மண் சட்டியினை அடுப்பில் ஏற்றி மெழுகு பதத்திற்கு வரும் வரையில் நன்கு காய்ச்சி வடித்து எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

தினமும் காலை வேளையில் இந்த கரைசலில் போதுமான அளவு எடுத்து தலையில் பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும். இப்படி முழுகிவந்தால் தொண்ணூற்று ஆறு வகையான கண்நோய்கள்,  காச நோய், பித்த நோய்கள், உஷ்ண நோய்கள் குணமாவதுடன், கண் பார்வைத் திறனும் அதிகரிக்கும் என்கிறார் அகத்தியர். இந்த தைலத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. 

தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

7 comments:

S.Puvi said...

தகவலுக்கு நன்றி.
எண்ணெய்க்கு விளக்கம் சூப்பர்

astro student said...

I have read all your post and it is wonderful. Siddhars told various kayakalpa to live longer life. is there any medication/pathiyam they have told to reverese diabetes or prediabetes. I believe in siddhars and siddhar. Please share it if you have anything thanks

kc mohan said...

கரிசலை, கரிசாலை தற்போதைய பெயர் என்ன?

jana said...

arumai

துரை செல்வராஜூ said...

மக்களுக்கு ஏற்ற அருமையான தைலம்!... விஷயம் அறிந்த எல்லா தமிழர்களுக்கும் மிகவும் பரிச்சயமானது!...மீண்டும் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!..

S.Chandrasekar said...

The botanical name of Karisaalai is
Wedelia chinensis. It is the usual மஞ்சள் கரிசாலை. அதன் சாறு எடுத்து பசும் நெய் கலந்து உள்நாக்கின் மேலே தடவினால் கபம் எல்லாம் வந்துவிடும். Sinus problem எடுப்பதால் அதற்க்கு chinensis என்ற specie பெயர் பெற்றது.

krishana sawmy said...

anaittum arumayana tahavalhal

Post a Comment