வள்ளல் பெருமான் - நெடுந்தொடர்

Author: தோழி / Labels:

திரு அருட் பிரகாச வள்ளலார் என அறியப் படும் மருதூர் இராமலிங்கம் பிள்ளை அவர்களைப் பற்றிய எனது தேடல், சேகரிப்புகள், புரிதல்கள், தெளிவுகள் ஆகியவைகளை பதிவாக்கும் முயற்சிதான் இந்த தொடர். வெகு நாட்களாகவே எழுத நினைத்திருந்தது இப்போதுதான் சாத்தியமாயிற்று. 

இந்த தொடரின் நெடுகே நான் முன் வைக்கும் தகவல்கள் மற்றும் அது தொடர்பான கருத்துக்கள் யாவும் எனது தனிப்பட்ட புரிதல்களே, எனவே இது தொடர்பில் யாருக்கும் வருத்தமேற்பட்டால் அதற்காக எனது வருத்தங்களை தொடரின் ஆரம்பத்திலேயே பதிவு செய்திட விரும்புகிறேன்.

சித்தர்களைப் பற்றிய தகவல்களை தேடிச் சேகரித்துக் கொண்டிருந்த வேளையில்தான் எனக்கு வள்ளல் பெருமானைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. மற்ற பிற சித்தர் பெருமக்களைப் போலவே வள்ளல் பெருமானும் தான் சார்ந்த சமூகம் மற்றும் சமயத்தின் நிறை குறைகளை தயக்கமின்றி பேசவும், அதனை ஒப்புக் கொள்ளவும் கூடியவராக இருந்ததே என்னை அவர் பால் ஈர்த்தது.

ஆணும் பெண்ணும் சமம் என்பதில் துவங்கி  சாதிய நடைமுறைகளையும் அதன் சடங்குகளையும் எதிர்த்தது, வேதம், ஆகமம், இதிகாசம், புராணங்கள் என தன்னுடைய சமயம் முன் வைத்த பல கூறுகளை ஆராய்ந்து அதில் காணப்படும் சூதுகளை நிராகரித்தது என பல வகையில் தான் வாழ்ந்த காலத்தின் கலகக் குரலாகவே வள்ளல் பெருமானை நாம் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது.

இதனால் பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறார். மதவாதிகளின் எதிர்ப்பு, வழக்குகள், விவாதங்கள், அச்சுறுத்தல்கள், கேலிப் பேச்சுகள் என அவதூறுகளின் ஊடே தான் திடமாய் நம்பிய கருத்துக்களை முன் வைத்த நேர்மையான ஆளுமையே இன்றளவும் அவர் பேசப் படுவதற்குக் காரணம் என நினைக்கிறேன். 

ஐம்பத்தி ஒரு ஆண்டுகளே வாழ்ந்த இப் பெருமகனாரைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் அவரின் நூல்களின் ஊடேதான் நாம் அவரை அணுகக் கூடியதாகவும், அறியக் கூடியதாகவும் இருக்கிறது. அந்தப் பயணத்தின் ஊடே எனக்குப் புரிந்த அல்லது தெளிந்தவைகளை மட்டும் இனி வரும் நாட்களில் தொடராய் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பாக தொடர அமையும் என்பதில் சந்தேகமே இல்லை...

தொடர வாழ்த்துக்கள்...

S.Puvi said...

பதிவுகள் தொடரட்டும்........
பதிவுகளுக்கு நன்றிகள்

jaisankar jaganathan said...

திண்டுக்கல் தனபாலன் வந்துட்டாரே. என்சாய்

Settu.v Settu.v said...

Arutpernjothi aandavar arul purivsraaga

Sivamjothi said...

வள்ளல் பெருமான் அனைவரும் மரணமிலா பெருவாழ்வு பெற விரும்பினார்.
அதை மக்களுக்கு விளக்கி அவர் பெறுங்கள்.

anbu said...

வள்ளலார் பற்றிய கட்டுரை அதுவும் நெடுந்தொடர் என்ற குறிப்புடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தங்களது கட்டுரைகளில் தென்படும் கடும் உழைப்பு, தேடுதல், சொற்திறன், அழகு தமிழ் உருவாக்கிய ஆவலே இது.
வள்ளற்பெருமான் துணை நின்று அருள் புரியட்டும்
வாழ்த்துக்களுடன்

கண்ணதாசதாசன் said...

வள்ளலாரைப் பற்றியும் அவருடைய நெறிமுறைகள் பற்றியும் அறிந்துகொள்வது என் நெடுநாளைய ஆவல்!
மிக்க நன்றி!

எண்ணியெண்ணிப் பார்த்ததில்
இவர்வழி தான் சரியென்று
அன்னை உரைத்தாளடா!-தெய்வ
அன்னை உரைத்தாளடா!

Palani Sankaran said...

you are welcome to present your findings.

Remanthi said...

வாழ்த்துக்கள்...

Azhagu Chozhan said...

வணக்கம்
பலநாள் பகிர்வை படித்தாலும், முதல் முறை கருத்தை பதிகிறேன்.
சிறந்த சேவை, வாழ்க வளமுடன்

suriya raja said...

nandrikal

suriya raja said...

nandrikal

tamilvirumbi said...

தோழி ,

தாங்கள் தொடர போகும் ,வள்ளலார் குறித்த நெடுந்தொடர் ,வலைமனையின் வாசகர்களை ஆன்மீக வழியில் பயணிக்க வைக்கும் என்று உளமார எண்ணுகிறேன் .

"பெண்ணினுள் ஆணும் ஆணீனுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருள்பெருஞ்சோதி"

தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி.

renga nathan said...

பதிவுகள் தொடறட் டும் வாழ்த்துக்கள்

Aswin Chittan said...

வள்ளல் பெருமானார் தனது திருவருட்பாவில்
"மூவரும் தேவாரம் முத்தரும் சித்தரும் யாவரும்
அறிந்திடா இயல் எனக்களிதனை " என்று கூறி உள்ளாரே அதன்
பொருள் என்னவாக இருக்கும்

ganesh raja said...

அடக் கடவுளே, சுத்த ஞானிகளை தூஷணம் செய்தேனோ நு வருந்தியவரை தூஷிச்சு இப்படி ஒரு கட்டுரையா,கடவுளுக்கே அடுக்காது .

Post a Comment