வள்ளல் பெருமானின் ஆன்மிக அனுபவங்களை, அதில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகளை நமக்குச் சொல்லும் ஆவணமாய் இருப்பது அவருடைய பாடல்களே. சற்றேறக் குறைய ஆறாயிரம் பாடல்கள் ஆறு தொகுதிகளாய் “திருவருட்பா” எனும் தலைப்பில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. இதனை அவருக்கு நெருக்கமாய் இருந்த சீடர்களே தொகுத்து பதிப்பித்தனர்.இது தவிர அவரது தனிப்பாடல்கள் ஒரு திரட்டாக தொகுக்கப் பட்டிருக்கின்றன.
துவக்கத்தில் இந்த பாடல்களை நூலாக தொகுப்பதில் வள்ளல் பெருமானுக்கு ஆர்வம் இல்லையென்பதும், மிகுந்த சிரமத்திற்கிடையேதான் அவரது சீடர்கள் போராடி அவரிடம் அனுமதி பெற்று அவரது பாடல்களை ஆறு தொகுதிகளாய் தொகுத்தனர் என்பதும் பலரும் அறியாத சுவாரசியமான தகவல்.
வள்ளல் பெருமான் எழுதிய உரைநடை நூல்கள் “மனுமுறை கண்ட வாசகம்”, “ஜீவகாருண்ய ஒழுக்கம்”.
தமிழகத்தில் 1836 ல் அச்சு இயந்திரங்களின் மூலம் நூல்களை பதிப்பிக்க ஆங்கில அரசு அனுமதித்தது. அதன் பிறகுதான் தமிழில் நூல்களை அச்சிட்டு பதிப்பிக்கும் முயற்சிகள் ஆரம்பமாயின. தமிழில் உரைநடை நூல்களை பதிப்பித்த முன்னோடிகளில் வள்ளல் பெருமானும் ஒருவர் என்பது பலருக்கு புதிய செய்தியாக இருக்கும்.
“ஒழிவிலொடுக்கம்” (1851), “மனு முறை கண்ட வாசகம்”(1854), “தொண்ட மண்டல சதகம்”(1855), “சின்மய தீபிகை”(1857) ஆகிய நூல்களை வள்ளளார் பதிப்பித்திருக்கிறார். இந்த நூல்கள் இந்து மதம் தொடர்பான அவர் காலத்தைய எண்ணப் போக்கினையும், அப்போது நிலவிய சமூக வாழ்வியல் சூழலையும், சமூக கூறுகளையும் நமக்கு அறியத் தருவனவாய் இருக்கின்றன.
இந்த பாடல் தொகுப்புகள், உரை நூல்களைத் தவிர வள்ளல் பெருமான் தன் நண்பர்களுக்கு எழுதிய பல கடிதங்கள் நமக்கு ஆவணமாய் கிடைத்திருக்கின்றன. இந்த தகவல்களின் அடிப்ப்டையில் அவரது ஆன்மிக வாழ்வினை நாம் நான்கு கால கட்டங்களாக அணுகுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
சென்னையில் வாழ்ந்த இளமைக் காலம் (1825 - 1858)
கருங்குழியில் வாழ்ந்திருந்த காலம் (1858 - 1867)
வடலூரில் வசித்திருந்த காலம் (1867 - 1870)
மேட்டுக்குப்பத்திலிருந்த கடைசி நாட்கள் (1870 -1874)
அடுத்த பதிவில் சென்னையில் வாழ்ந்திருந்த காலத்தில் வள்ளல் பெருமானின் ஆன்மிக அனுபவங்களைப் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment
6 comments:
thodarukiren...
Dear Thozhi,
Could you please post anything about forthcoming "SHIVARATHRI"
Regards
வள்ளலாரின் வாழ்க்கை வரலாறுகளை நான்கு வகையாக நான்கு பிரிவுகளாக பார்க்க வேண்டும்.ஆரம்பத்தில் பக்தி பாடல்களில் பாடுகிறார் சமய மதங்களின் உண்மைகளை தெரிந்து கொள்கிறார் .அவையாவும் சாவும் கடவுள்களை பற்றியே போதிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்கிறார்.பொய்யான கற்பனைக் கதைகளை எழுதி கற்பனை தெய்வங்களை மக்கள் மத்தியிலே படைத்து விட்டார்கள் .அதன்பிறகு உண்மையான கடவுளைத் தேட ஆரம்பிக்கிறார் .அதை அறிந்து கொள்வதற்கு உயிர்களின் மேல் இரக்கமும் ஆண்டவர் மீது அன்பும் இருந்தால்தான் கடவுளைக் காணமுடியும்.என்பதை உணர்ந்து கொண்டு வடலூரில் தருமச்சாலையை தொடங்கி வைக்கிறார்.அதன் பின்பு கடவுளின் உண்மையான அருளைப்பெற்று.உண்மைக் கடவுளை யார் என்பதை தெரிந்து கொள்கிறார் .அந்தக் கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து கொள்கிறார்.அதன் பின் சமய மதங்களின் மேல் மற்று வைத்திருந்து பாடிய பாடல்கள் அனைத்தும் என்னுடைய அறியாமையால் பாடிய பாடல்கள் .அவற்றை யாரும் பின்பற்ற வேண்டாம் .அப்போது எனக்கு அறிப அறிவாக இருந்தது,இப்போது என்னை ஆண்டவர் ஏறாநிளைமிசை ஏற்றி வைத்துள்ளார் .நான் இந்த அளவிற்கு ஆண்டவர் அருளைப் பெற்றது உயிர்களின் மேல் வைத்து இருந்த தயவும் கருணையும்தான் என்னை மேலே ஏற்றிவிட்டது,வேறு எதுவும் என்னைத் தூக்கி விடவில்லை.ஆரம்பித்தில் நான் பாடிய பாடல்கள் எதுவும் என்னை மேலே ஏற்றி விடவில்லை .ஆதலால் நீங்களும் என்னைப்போல் பெரிய லாபத்தை அடைய வேண்டுமானால் சாதி,சமயம்,மதம் போன்ற எதிலும் பற்று வைக்காமல்,உயிர்கள் மேல் இரக்கமும் தயவும் வைத்து ஆன்மநேய ஒருமைப்பட்டு ஒருமையுடன் இருங்கள்.அந்த ஒருமை வந்தால்தான் கடவுள் நம்மீது கருணைக் காட்டுவார்.அந்தக்கருணை என்பதுதான் அருள் என்பதாகும் .அந்த அருளைப் பெற்றவர்களால் தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப பெருவாழ்வு பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறமுடியும்.என்பதை மக்களுக்கு தெரியப் படுத்த உண்மைக்கடவுளுக்கு வடலூரில் ''சமரச சுத்த சனமார்க்க சத்திய ஞானசபையை''தோற்றுவித்து அருட்பெருஞ் ஜோதியை அறிமுகப் படுத்தி உள்ளார்.ஆதலால் சாதி,சமயம் மதம்,போன்ற பற்றுகளை ஒழித்து இறக்கும் கடவுளை பற்று வைக்காமல்,உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதியை வழிபாடு செய்து ஆன்மாவை தெரிந்து கொள்ளுங்கள்.ஆன்மாவே கடவுளாகும்.ஆன்மாவை அறிந்தால் கடவுளைக் காணலாம் என்பதுதான் ஞான மார்க்கமாகும்.ஞானத்தை போதிக்கும் மார்க்கம்தான் சுத்த சன்மார்க்கமாகும்.காக்காக் கல்வியை போதிக்கும் மார்க்கம்தான் சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு,கடவுள் ஒருவர்தான் என்பதை அறிவால் அறிந்து சத்விசாரமும் ,பரோபகாரமும் செய்து உண்மைக் கடவுளை தெரிந்து ஆண்டவர் அருளைப் பெற்று வாழ்வதுதான் வள்ளல் பெருமான் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் கொள்கைகளாகும்.அன்பு,தயவு,கருணைக் கொண்டு அருளைப்பெருவோம் ஆனந்தமாக வாழ்வோம்.
தோழி ,
தங்களின் இன்றைய பதிவும் மிக அருமை.நண்பர் கதிர்வேலு ,கூறிய கருத்துக்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி.
அருள்பெருஞ்சோதி அருள்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை அருள்பெருஞ்சோதி
நல்லது தொடருங்கள்
வணக்கம் !
என் அருமை மிகு தோழி . எனக்கு போகர் எழுதிய " போகர் 7000 சப்த்தகண்டம் ". அனைத்து பாடல்களுக்கும் விழக்கம் மற்றும் அதன் யந்திரம் படம் . எனக்கு விழக்கமும் அளிப்பிர்களா தோழி.
நன்றியுடன் ,
என்றும் வினோத் சிவபெருமாள் ,
Post a Comment