அருட்பா மருட்பா விவகாரம் தொடர்ச்சி....

Author: தோழி / Labels: , ,

அருட்பா மருட்பா விவகாரம் என்பது ஆறுமுக நாவலருக்கும், வள்ளல் பெருமானுக்கும் இடையேயான பிரச்சினை என்பதைத் தாண்டி. அப்போதிருந்த சைவ சமய அன்பர்களுக்கும் வள்ளல் பெருமானாருக்குமானது என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் துவங்கிய இந்த பிரச்சினை, வள்ளல் பெருமானின் மறைவுக்குப் பின்னரும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை நீடித்திருக்கிறது.

இந்த கால கட்டத்தில் வள்ளல் பெருமானின் வளர்ச்சி இவர்கள் அனைவரையும் உறுத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை. சாமான்ய மக்களிடம் வள்ளல் பெருமான் முன் வைத்த கொள்கைகளுக்குக் கிடைத்த வரவேற்பும், அங்கீகாரமும் சைவ சமய பெருமக்களிடையே கடுங்கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்கியிருந்தன.

இந்த வகையில் வள்ளல் பெருமானை எதிர்த்த சில முக்கியமான பிரமுகர்களையும் அவர்கள் மூலம் வெளியிடப் பட்ட பிரசுரங்கள் பற்றியும் இந்த பதிவின் ஊடே ஆவணப் படுத்திட விரும்புகிறேன். இந்த எதிர்ப்பாளர்களில் வள்ளல் பெருமானின் சகோதரர் திரு.சபாபதி பிள்ளை அவர்களும் தீவிரமாய் இருந்திருக்கிறார் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும்.. வள்ளல் பெருமானையும், அவரது கொள்கைகளையும் நிராகரித்து “இராமலிங்கர் படிற்றொழுக்கம்” என்னும் நூலை இவர் வெளியிட்டிருக்கிறார்.

சாதி சமயம் கடந்த ஒரு சமரச சமூகத்தை வளர்த்தெடுக்க ஆன்மிக மடங்களினால் மட்டுமே முடியும் என வள்ளல் பெருமான் நம்பினார். ஏனெனில் அந்த கால கட்டத்தில் இந்த மடங்கள் மீது மக்கள் அளவற்ற மரியாதை வைத்திருந்தனர். இந்த ஆதின கர்த்தர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் வேதவாக்காக கருதப் பட்ட காலம். ஆனால் இந்த ஆதின கர்த்தர்களோ வள்ளல் பெருமானுக்கு எதிராக இருந்தனர். அவர்களில் முக்கியமான சிலரை இங்கே பட்டியலிடுவது அவசியம் என கருதுகிறேன்.

திருவாவடுதுறை குரு மகாசந்நிதானம் சுப்பிரமணிய தேசிக சுவாமிகள், தருமபுர ஆதீனம் சண்முகத் தம்பிரான் சுவாமிகள், வேதாரண்ய ஆதீனம்  உதயமூர்த்தி தேசிக சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் போன்ற சைவ சமய மடாதிபதிகள் வள்ளல் பெருமானுக்கும் அவரது கொள்கைகளுக்கும் எதிரானவர்களாய் இருந்தனர். வேறு சில மடாதிபதிகளும் இத்தகைய நிலைப்பட்டுடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

இவர்களைத் தவிர சமய மற்றும் தமிழ் அறிஞர்களான திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் சபாபதி நாவலர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சீடரான திரு. ஸ்ரீ நா. கதிரைவேற்ப் பிள்ளை, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாவித்வான் மதுரை இராமசுவாமிப் பிள்ளை, மகாவித்வான் கொ.  சாமிநாத தேசிகர், மாமண்டூர் திரு. தியாகேச முதலியார், திரு பாலசுந்தர நாயக்கர் போன்ற பெருமக்களும், திருநெல்வேலி சித்தாந்த சைவ நெறிக் கழகமும் போன்ற அமைப்பினரும் வள்ளல் பெருமானாருக்கு எதிராக போர்க் கோலம் கொண்டிருந்தனர்.

இத்தகைய பெருமக்கள் தங்களுடைய கருத்தை, கண்டணஙக்ளை  பல்வேறு அச்சுப் பிரசுரங்களாக வெளியிட்டிருக்கின்றனர். ஒரு தனி மனிதனையும் அவரது கொள்க்கைகளையும் சாடி இத்தனை  பிரசுரங்கள் வெளி வர வேண்டிய அவசியமென்ன என்பதை சற்றே யோசித்தால், வள்ளல் பெருமானின் கொள்கைகள் உருவாக்கிய தாக்கம் எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. இந்த பிரசுரங்களில் ஆவணப் படுத்தப் பட்ட சில நூல்களின் பெயர்களை மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

போலி யருட்பா மறுப்பு
போலி யருட்பாக் கண்டன மகாவித்வ ஜனசபை
மருட்பா விவாத மத்தியக்ஷப் பத்திரிகை
இராமலிங்கர் பாடல் ஆபாசதர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு
போலியருட்பாக் கண்டனப் பிரசங்கம்
மருட்பா மறுப்பு அரங்கேற்றம்
போலி யருட்பா வழுத்திரட்டு
கருங்குழிப் பிள்ளை பாடல் ஆராய்ச்சி
இராமலிங்க பிள்ளை அங்கதப் பாட்டு
இராமலிங்கர் படிற்றொழுக்கம்
குதர்க்காரணிய நாச மகா பரசு கண்டனம்
சிவநிந்தை, குருநிந்தை
திருவருட்பா நிந்தையினார்க்குச் செவியறிவுறுத்தல்
பசுகரண விபரீதாத்த நிக்கரகமும் போலியருட்பாக் கண்டனப் பரிகார மறுப்பும்
மனமே சிந்தனை செய்; தெளிந்து செயலாற்று
முக்குணவயத்தின் முறை மறந்தறைதல்
போலிவாதிகளுக்குப் புத்தி புகட்டல்
குதர்க்கிகளின் பொய்கோள் விலக்கு

ஒரு தனி மனிதனை எதிர்த்து இத்தனை நூல்கள் வெளியாகின என்பது ஆச்சர்யமான தகவல்தானே!.  அடுத்த பதிவில் இராமலிங்க அடிகளார்  பற்றி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சுய சரிதையில் என்ன எழுதியிருக்கிறார்கள் எனபதைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

5 comments:

Inquiring Mind said...

சமரச சமுதாயம் என்பது ஒரு மாயா வாதம்.. என்றுமே அப்படி ஒரு சமுதாயம் இருந்ததில்லை.. இன்றும் இருக்கவில்லை..

சாதிகள் இல்லாத சமுதாயத்தில் வர்க்க பேதமும் அதிகார பேதமும் தலைவிரித்தாடுகின்றது.. அதுதான் யதார்த்தம்.. ஒரு மனிதன் தனிமைப்படுத்தப்பட்டால், அவன் அதிகாரத்தையும், பொருளையுமே வெறி கொண்டு நாடி செல்வான்..

ஆனால், ஒரு சாதி ரீதியான, பன்முக சமுதாயம் (Multiple Communities), கூட்டு வாழ்க்கைமுறையை மேற்கொள்கிறது.. ஒரு சாதிக்கும், இன்னொரு சாதிக்கும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம்.. ஆனால் ஒரே சாதிக்குள், சமத்துவம் இருக்கிறது.. அதுதான், அந்த சாதி மனிதனின் ஆதாரம்..

வள்ளல் பெருமானின் கொள்கைகள் இன்று எத்தனை பேர் கடைபிடிக்கின்றனர்? ஆனால் சைவ் சித்தாந்தம் இன்றும் நிலைத்திருக்கிறது..

Bogarseedan said...

interesting

Unknown said...

inquiring mind. தமிழ்நாட்டில் வடலூர் சென்று பாருங்க. அதுவும் தைப்பூசத்திற்கு. ஏராளமான வள்ளலார் பக்தர்கள் வருவாங்க

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அற்புதமான பகிர்வுகள் தோழி.

Anonymous said...

Vallal Peruman samayam kadandhavar. Saivathil thodangia avar, madham kadandha neriyinai- samarasa sanmargatthai valiyurithinaar. Arutpaa-marutpaa Muranpaadu thevai attradhu.

Post a Comment