சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள்

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் சூட்சுமமானவை என்றும் இதனை பயன்படுத்துவதால் உண்டாகும் பலன்களைப் பற்றியும் முந்தைய  பதிவில் பார்த்திருந்தோம். இன்றைய் பதிவில் அகத்தியர் அருளிய “ருத்ர காயத்ரி” மற்றும் “விஷ்ணு காயத்ரி” மந்திரங்களைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள் அகத்தியரின் “அகத்தியர் 12000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை. 

ருத்ர காயத்ரி

அகத்தியர் அருளிய காயத்ரியை பார்ப்பதற்கு முன்னர் தற்போது புழக்கத்தில் இருக்கும் “ருத்ர காயத்ரி” மந்திரத்தை கீழே இணைக்கப் பட்டுள்ள காணொளியில் கேட்கலாம். இது சமஸ்க்ருத மொழியில் அமைந்தது.



இனி அகத்தியர் அருளிய ருத்ர காயத்ரி மந்திரத்தைப் பார்ப்போம்.

புத்தியுடன் சொல்லுகிறேன் சுத்தமாக
போதமுடன் ருத்திர காயத்திரிகேளு
பக்தியுள்ள ரகசியமிது மவுனவித்தை
பாலகனே கெவுனாதி செபிக்குமார்க்கஞ்ச்
சுத்தமுடன் சொல்லுகிறேன் ஓம்சிறீங்றீங்மகா
மசிமசி நசிமசிருத்ராய சுவாகாயென்றோதிப்பாரே.

சித்தர்களால் காலங்காலமாய் மிகவும் இரகசியமாக பாதுகக்கப்பட்ட உருத்திர காயத்திரி மந்திரம் இதுதான்.

 "ஓம் சிறீங் றீங் மகா மசிமசி நசிமசி ருத்ராய சுவாகா" 

ருத்திர காயத்ரியை செபிப்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்க் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் அகத்தியர்.

விஷ்ணு காயத்ரி

தற்போது புழக்கத்தில் இருக்கும் “விஷ்ணு காயத்ரி” மந்திரத்தை கீழே இணைக்கப் பட்டுள்ள காணொளியில் கேட்கலாம். இது சமஸ்க்ருத மொழியில் அமைந்தது.



இனி அகத்தியர் அருளிய “விஷ்ணு காயத்ரி” மந்திரத்தைப் பார்ப்போம்.

பாரப்பா விஷ்ணுவின் காயத்திரி
பிலமான மந்திரத்தைச் சொல்லக்கேளு
விண்டான ஓம் ஓங்ஸ்ரீங் மகாசம்வம்நசிமசி
விஷ்ணுதே வாயசுவாகா வென்றேயோது
மேலான சந்தானமொடு சவுபாக்கியங்கள்
மனம்போலே லெச்சுமியின் கடாட்சமாமே

விஷ்ணு காயத்ரி மந்திரம் "ஓம் ஓங்ஸ்ரீங் மகா சம்வம் நசிமசி விஷ்ணுதேவாய சுவாகா" 

இந்த விஷ்ணு காயத்ரியை செபிப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் முதல் அனைத்துவகை செல்வங்களும் கிட்டும் என்கிறார் அகத்தியர்

அடுத்த பதிவில் பிரம்ம காயத்ரி மந்திரம் பற்றியும், இம் மூன்று காயத்ரி மந்திரங்களை எவ்வாறு செபிப்பது என்பது பற்றியும் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..




Post a Comment

20 comments:

jana said...

வணக்கம் தோழியே !

அருமையான பதிவு நன்றி .

Gopalan said...

இதனை பிரயோகிக்கும் முறையும் தெரிந்தால் நன்றாக இருக்கும் எத்தனை முறை கூறினால் இந்த மந்திரம் சித்தி யாகும் போன்ற தகவல்களையும் சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன் .. நன்றிகள் பல ..

ஸ்ரவாணி said...

வணக்கம் தோழி !
நல்ல பதிவு.
பகிர்விற்கு நன்றி !

Inquiring Mind said...

இந்த மந்திரங்களை செபிப்பதற்கு தேவையான தகுதிகள் என்ன என்பதையும் கொஞ்சம் விளக்குங்கள்.. யார் வேண்டுமானாலும் தங்கள் இஷ்டம் போல செபிக்க முடியாது அல்லவா?

T.A.T.A.t.pet said...

Thodarntha nal pathivu kalukku nandrikal pala pala...

N.G.JEGAN said...

Use full information for every body those who are follow siddhaas line, especially for me

vijayan said...

vanakam thozhi en peyar vijayan ketta ennangal neenga enna seiya vendum.pls sollunga

Gnanam Sekar said...

அருமையான பதிவு

Desingh said...

gayathiri manthiram ethu? ithil pala vitha manthiram ullathu. ethu gayathri manthiram naam veetil solla?

தோழி said...

@Desingh

சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரம் பற்றி பழைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். உங்களின் கேள்விகளுக்கான விடை அதிலிருக்கிறது.

jaisankar jaganathan said...

அருமை. நன்றி.
எனக்கு காயத்திரி மந்திரத்தில் ஒரு சந்தேகம்

அதாவது
ஓம் பூர்புவஸ்ஸூவக
ஓம் தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
திய்யோந பிரச்சோதயாத்.

இதுல கடைசி வரில வர்ற தியோயோந என்பதோட க சேர்த்து வருமா?

Unknown said...

MOST PRECIOUS AND MOST SACRED OF THE SITHARS AND THEIR SECRETS UNREVELED. A TREASURE TO BE PROTECTED AND PREACHED SO THAT EVERY ONE IS BENEFITED. SIMPLY GREAT.

Unknown said...

MOST PRECIOUS AND MOST SACRED OF THE SITHARS AND THEIR SECRETS UNREVELED. A TREASURE TO BE PROTECTED AND PREACHED SO THAT EVERY ONE IS BENEFITED. SIMPLY GREAT.

perumal lara said...

pls continuosely mgs sent to me via mail

Srinivasan Subramanian said...

PERIYA KARUVOOLAM

Saravanakumar.B said...

ஸ்ரீ சிற்றம்பலேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் போது
கருடலோக சித்தர்களின் சஞ்சாரம்
http://www.spiritualcbe.blogspot.in/2013/01/blog-post.html

renga nathan said...

பதிவுக்குநன்றி,தோழி

Jai Shankar said...

nandru

lakshmi narayanan said...

naan kaduvuladim pesa vendum adharkhu yenna seivathu

usha said...

Arumaiyana manathukku nimmathi tharum paguthi Nandri Thozhi.

Post a Comment