அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இன்றுதான் தமிழரின் புத்தாண்டு என கொண்டாடும் நண்பர்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எது எப்படியாக இருந்தாலும் உழவர் திருநாளான இந்த தைத் திருநாள், எம் தமிழ் சமூகத்தின் பெருநாள் எனபதில் நமக்குள் மாற்றுக் கருத்துகள் ஏதுமில்லை. இன்று துவங்கி இனி வரும் நாட்களில், நம் அனைவரது வாழ்விலும் அன்பும், அருளும், நலமும் வளமும் மலர எல்லாம் வல்ல குருநாதரை பணிந்து வணங்கிடுவோம்.
எது எப்படியாக இருந்தாலும் உழவர் திருநாளான இந்த தைத் திருநாள், எம் தமிழ் சமூகத்தின் பெருநாள் எனபதில் நமக்குள் மாற்றுக் கருத்துகள் ஏதுமில்லை. இன்று துவங்கி இனி வரும் நாட்களில், நம் அனைவரது வாழ்விலும் அன்பும், அருளும், நலமும் வளமும் மலர எல்லாம் வல்ல குருநாதரை பணிந்து வணங்கிடுவோம்.
காயத்ரி மந்திரம் என்பது என்ன? அது வடமொழிக்கு மட்டும் உரியதா?, தமிழுக்கென காயத்ரி மந்திரங்கள் உண்டா?, அப்படி ஏதும் இருந்தால் அது என்ன? என்பது பற்றியெல்லாம் முன்னரே இங்கே பகிர்ந்திருக்கிறேன். அதன் நீட்சியாக சித்தர் பெருமக்கள் அருளிய மூன்று காயத்ரி மந்திரங்களை இனி வரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம். காயத்ரி மந்திரங்கள் தொடர்பான முந்தைய பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
காயத்ரி மந்திரங்கள் என்றால் அவை வடமொழியில் மட்டுமே உள்ளவை என்கிற பொதுக் கருத்து காலம் காலமாய் இருந்து வருகிறது. உலக மாதாவான காயத்ரியில் துவங்கி, அனேக பிற தெய்வங்களுக்கும் என தனித்துவமான காயத்ரி மந்திரங்கள் இன்று நம்மிடையே பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் தமிழ் காயத்ரி மந்திரங்கள் ஏனோ நம் பார்வையில் அல்லது புழக்கத்தில் இல்லாமலே போய்விட்டது. அத்தகைய காயத்ரி மந்திரங்களை மீட்டெடுக்கும் ஒரு சிறு முயற்சியாகவே இந்த தொடரை பகிர்ந்து கொள்கிறேன்.
இனி வரும் நாட்களில் சூட்சுமம் நிறைந்த ருத்திர காயத்திரி, விஷ்ணு காயத்திரி, பிரம காயத்திரி என்கிற மூன்று காயத்ரி மந்திரங்களைப் பற்றியும் அதன் பிரயோகம் மற்றும் அதனால் விளையும் பலன்களை பார்க்க இருக்கிறோம். இந்த மந்திரங்கள் யாவும் அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
இம் மூன்று காயத்ரி மந்திரங்கள் எத்தனை உயர்வானவை, அதன் சிறப்புகள் என்னென்ன என்பதை அகத்தியர் பின்வரும் பாடல்களில் விளக்குகிறார்.
சுழிவான மந்திரமாஞ் சூச்சந்தன்னை
செப்புகிறேன் புலத்தியனே தெளிவாய்கேளு
காரப்பா பிரமகாயத்திரியென்று
கருணைவளர் விஷ்ணுகாயத்திரியொன்று
நேரப்பா ருத்திர காயத்திரியொன்று
நிசமான காயத்ரிமந்திரங்கள் மூன்றுஞ்
சாரப்பா ருத்திர காயத்ரியோத
சகலவித ரோகமெல்லாம் சாந்தமாமே.
ஆமப்பா விஷ்ணு காயத்ரியோத
அப்பனே சந்தான சவுபாக்கியங்கள்
தாமப்பா ஒன்றுபத்தாய் தானேயுண்டாஞ்
சதங்கையுடன் பிரம காயத்திரியோத
ஓமப்பா சகலகலைக் கியானமெல்லாம்
உண்மையுடன் அஷ்டாங்க சித்தியாகும்
நாமப்பா சொன்ன காயத்ரி மூன்றும்
நாதாந்த நயனமடா சத்தியமாமே.
இந்த மந்திரங்கள் மிகவும் சூட்சுமமானவை, இவற்றை உணர்ந்து செபிக்கிறவர்களின் உடல் நலம், மன நலம், செல்வ வளம் ஆகியவை சித்திக்கும் என்கிறார்.
ருத்திர காயத்திரி, விஷ்ணு காயத்திரி மந்திரங்களும், சிறப்புகளும் அடுத்த பதிவில்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



13 comments:
Great wishes to my sister
i sometime think about the human life and what is the reason we are here in this world.......
even i studied in tamil medium school just for getting marks only i memorise the tamil poet .
but now i come to know the hidden things in the poet "actually you are doing good job " delivering the hidden treasure in our mother language . sorry for typing in english
NALLA PATHVU
அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
பொங்கல் வாழ்த்துக்கள்
eniya pongal nalvaazhukkal
-bogarseedan
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தோழி எமது இனிய பொங்கள் நல்வாழ்த்துகள்
தோழி "வானசாஸ்திரம்" பற்றி நீங்கள் உங்கள் பதிவில் சொனால் நன்றாக இருக்கும்
INIYA THAMILAR THIRUNAAL WALTHUKKAL.UNGAL PATHIVUGAL PALARIN AANMAKKALUKKU gnanam alippathaga irikkirathu. DHAYAVU SAITHU THODARUNGAL. NAMDRI.
iniya pongal vazhlthukkal
மனம் நிறைந்த இனிய
பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...
உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
இந்த மந்திரங்கள் எப்பொழுது, எப்படி சொல்வது, எத்தனை முறை சொல்வது என்று குறிப்பிடவும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி
-சரவணன்
Post a Comment