மூல நோய்க்கு தேரையர் அருளிய தீர்வு - 2

Author: தோழி / Labels: , ,

மூல நோய்க்கான தீர்வுகள் வரிசையில் இன்று தேரையர் அருளிய மற்றுமொரு தீர்வினையே பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

போடு முடக்கொற்றான் மூக்கரட்டை
காட்டுப்புகழ் கருணைக்கிழங்கு மெருகன் கிழங்கு
தேடு களக்கொட்டி யொடுவகை யொன்றுக்கு
சேர்த்திடுவாய் பலமொன்று மைபோ லாட்டி
யாடு சித்தாமணக் கெண்ணெய் யாழாக்கு
கைந்துவிடு மெழுகுபத மெரித்து வாங்கி
நாடு நிதம்பலமரை மண்டலமே கொண்டால்
நாடாது மூலவகை அனைத்தும் போமே.

- தேரையர்.

முடக்கொற்றான், மூக்கரட்டை, காட்டுக் கருணைக் கிழங்கு, மெருகன் கிழங்கு, களக்கொட்டி வேர் இவைகளில் வகைக்கு ஒரு பலம் வீதம் எடுத்து ஒன்றாக சேர்த்து கல்வத்தில் இட்டு நன்கு மைபோல அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டுமாம். ஒரு மண் பாண்டத்தில் ஐந்து ஆழாக்கு சிற்றாமணக்கு எண்ணெய் ஊற்றி, அதில் முன்னர் அரைத்த கலவையை இட்டு நன்றாகக் கலக்கி அதனை அடுப்பில் ஏற்றி மெழுகு பதத்திற்கு வரும் வரையில் நன்கு காய்ச்சி சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

பின்னர் தினமும் இதிலிருந்து அரை பலம் வீதம் எடுத்து ஒரு மண்டலத்திற்கு உண்ண வேண்டுமாம் இவ்வாறு உண்பதனால் அனைத்து வகையான மூல நோய்களும் குணமாகும் என்கிறார். இதற்கு பத்தியம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பு :- ஒரு பலம் என்பது தற்போதைய அளவுகளில் 35 கிராம் ஆகும். ஒரு ஆழாக்கு என்பது தற்போதைய அளவுகளில் நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..




Post a Comment

2 comments:

jana said...

அன்புள்ள தோழி அவர்களுக்கு !

வணக்கம் , இது போன்ற பதிவுகள் நம் தமிழ் தெரிந்த

உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

தங்களின் சேவை தொடற வாழ்த்துக்கள் .

SACHIN tendulkar said...

Pls if you could write about RHEUMATOID ARTHRITIS and its cures! it will be great!

Post a Comment