மாந்திரிக கலையின் அட்டகர்மங்களில் ஒன்றாகவும், ஆயகலைகள் 64ல் முக்கியமானதாகவும் அறியப்படும் வித்துவேடணக் கலையின் பயன்பாடு குறித்து சித்தர் பெருமக்களின் தெளிவு ஒன்றினைப் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
வித்துவேடணம் என்பது ஒருவருக்கொருவர் தீரா பகையை உண்டாக்கிப் அவர்களை பிரிப்பது ஆகும். இந்தக் கலையினை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம். சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் பிரித்தல் என்பதனை தீயவற்றில் இருந்து நல்லவற்றை பிரித்து காப்பதாகவே நமக்கு குறிப்புகள் கிடைத்திருக்கிறது.
அகத்தியர் தனது அகத்தியர் 12000 என்னும் நூலில் வித்துவேடன கலையின் பயன்பாட்டினை பின்வருமாறு விளக்குகிறார்.
தானென்ற குறுத்தோலை நறுக்கி மைந்தா
தயவாக மயவநசி என்று மாறி
உறுதியுடன் மானிடர்க்கு கட்டினாக்கால்
வீண்என்ற பிரமை எல்லாம் தீரும்தீரும்
விதமான பில்லை வஞ்சனைகள் தீரும்
தேனென்ற தேகமது வெகுசெம்மையாகும்
சிவசிவா வித்துவேஷணத் திறந்தான் பாரே.
- அகத்தியர்.
குருத்தோலையை நறுக்கி எடுத்து அதில் சிவ மந்திரமான “நமசிவய” என்ற எழுத்துக்களை மாற்றி "மயவநசி" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த குருத்தோலையை இரு கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து வித்துவேடண மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.
இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்திருக்கும் பிரமைகள், பில்லி, வஞ்சனை அனைத்தும் நீங்கிவிடுவதுடன். அவர்கள் உடலும் வலிமையாகும் என்கிறார்.
வித்துவேடணம் மூல மந்திரம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment
10 comments:
Thuimaiyana Ullam Udaiyavarke Ethupodra Nalla visiyaggal Yellam poi serum.
gurutholai endral yanna tholi
varmam katrukolla vayadhu varambu irukka?ennakku
29 age aakirathuu,ithu saathiyama?
many important matter omitted such as jaba direction,asanam,jabamalai, colour of cloth etc. if any doubt please contect me i explain all of secreats of manthras how for i understand and follow my methods
அன்பு உள்ள தோழி அவர்களுக்கு என் பணிவான வனக்கம். என் சிறு வயது முதல் உடல் அளவிலும் மனதளவிலும் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கிறேன். இப்போது வேலையிலும் இதே நிலை. என்னை காரணம் இன்றி அனைவரும் வெறுக்கிறார்கள். சில நல்ல மணிதர்கள் வாழ தெரியாதவன் என்கின்றனர். எனக்கு மணநிம்மதி உடன் மற்றவர் தொல்லை இல்லாமல் வாழ சித்தர் சொன்ன வழிகளை அருளும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்
தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்)
குருத்தோலையை என்றல் தென்னை கீற்று அருள்முருகன்
தோழிக்கு வணக்கம்,
தங்களின் முயற்சி மற்றும் கடும் உழைப்பு பாரட்டத்தக்கது.ஆயினும் தாங்கள் குறிப்பிடும் பாடலுக்கும் விளக்கத்திற்க்கும் பொருத்தம் இல்லை
இது சரியான பொருள் விளக்கம் இல்லை எனவே நம்மை போன்ற சித்தரியல் ஆர்வலர்களுக்கும்,ஆய்வாளர்களுக்கும் சரியான தகவல்களை
சரியான விளக்கத்தோடு தருவதால்தான் அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்கருத்தை ஏற்பது ஏற்காமல் போவதும் தனி
நபர் விருப்பத்திற்குட்பட்டது.
by s.kalaiselvan
arivumaiyam.com
தோழிக்கு வணக்கம்,
தங்களின் முயற்சி மற்றும் கடும் உழைப்பு பாரட்டத்தக்கது.ஆயினும் தாங்கள் குறிப்பிடும் பாடலுக்கும் விளக்கத்திற்க்கும் பொருத்தம் இல்லை
இது சரியான பொருள் விளக்கம் இல்லை எனவே நம்மை போன்ற சித்தரியல் ஆர்வலர்களுக்கும்,ஆய்வாளர்களுக்கும் சரியான தகவல்களை
சரியான விளக்கத்தோடு தருவதால்தான் அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்கருத்தை ஏற்பது ஏற்காமல் போவதும் தனி
நபர் விருப்பத்திற்குட்பட்டது.
by s.kalaiselvan
arivumaiyam.com
என் தாங்களை இவ்வாறு நண்பர்
சரியான கேள்வி தான்
Post a Comment